| 66. 
           | 
          கயல்பாய்பைந் 
            தடநந்தூன் கழிந்தபெருங்  
                                      கருங்குழிசி | 
            | 
         
         
          |   | 
          வியல்வாய்வெள் 
            வளைத்தரள மலர்வேரி  
                                   யுலைப்பெய்தங் 
            கயலாமை யடுப்பேற்றி யரக்காம்பல்  
                                      
            நெருப்பூதும் 
            வயன் மாதர் சிறுமகளிர் விளையாட்டு  
                                    வரம்பெல்லாம். | 
          16 | 
         
       
       
           (இ-ள்.) 
      கயல்பாய்...வியல்வாய் - கயல்மீன்கள் பாயும்  
      தடாகத்தின் கரையிற் கிடக்கும் ஊன் இல்லாத நந்து ஓடுகளைச்  
      சோறாக்கும் சிறுபானையாகக்கொண்டு; வளை...பெய்து 
      - சங்குகள்  
      ஈன்ற முத்துக்களைப் பூத்தேனை நீராக ஊற்றிய உலையிலே இட்டு;  
      அயல் ஆமை...ஊதும் - பக்கங்களிற் கிடைக்கும் 
      ஆமை  
      ஓடுகளாகிய அடுப்பிலே ஏற்றிச் செவ்வாம்பல் மலர்களைத் தீயாக  
      வைத்து அடுப்பூதுகின்ற செய்கையாகிய; வயன் மாதர்..விளையாட்டு  
      அங்கு வரம் பெல்லாம் - கடைசியர்களது சிறு பெண்கள்  
      விளையாடும் செயலே அங்கு வயல் வரம்புகளிலெங்கும் (உண்டு). 
       
           (வி-ரை.) 
      அங்கங்கும் உள்ள சிறுவர் சிறுமியர் ஆங்காங்கே  
      கிடைக்கும் பொருள்களிலிருந்தே தமது விளையாட்டுப்  
      பண்டங்களைத் தேடி அமைத்துக் கொள்வது இயல்பு. இவ்வாறே.  
      இங்கும், கடைசியர்கள் களை களைதல் முதலிய உழவுத் தொழிலும்  
      பிறவும் செய்யும் காலங்களிலெல்லாம், அவரது சிறுமியர்  
      வரம்புகளிலே இவ்வாறு விளையாடுவர் என்க. இங்குச் சொன்ன  
      பொருள்கள் பலவும் வயல் வரம்புகளிலே களையாகக் கழித்து  
      ஒதுக்கப்பட்டுக் கிடக்குமாதலின் இவற்றையே சிறுமியர்  
      விளையாட்டுப் பொருள்களாகக்கொண்டனர். ஆமையோடும்,  
      ஊன்கழி நந்துஓடும், அயலிலும் தடாகத்தின் கரையிலும் உள்ளன.  
      முன்(63) தண்தரளம் சொரிபணிலங்களையும், செங்குவளை கமலம்  
      இவற்றையும் குறித்தமை காண்க. ஊட்டி வளர்த்தல் பெண்ணின்  
      கடமையாதலின் இவ்வாறு சிறு சோறு சமைத்தல் சிறு மகளிர்க்கு  
      இயற்கையின் அமையும் விளையாட்டாகும். நந்து 
      - சங்கு  
      என்றலுமாம். 
       
           இவ்வாறே அவ்வத் திணைகளிலும் கூறிப்போகும்  
      நிகழ்ச்சிகளையும் மேலே கண்டுகொள்க. திருநாளைப் போவார்  
      நாயனார் புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - அதிபத்த  
      நாயனார் புராணம் - இவைகளில் முறையே மருதம் - குறிஞ்சி -  
      நெய்தல் - திணைகளின் நிகழ்ச்சிகளைக் கூறுதல் காண்க. 
       
           பைந்தடம் 
      - பசிய தடாகம். கருங்குழிசி - ஊன் கழிந்த  
      நத்தை ஒடு ஆகிய கரிய பானை; நந்து ஓடு நீர்ப்பாசி ஏறிப் பசுமை  
      பொருந்தியதாதலின் கருங்குழிசி போலும் என்க. குழியாக  
      அமைக்கப் பெறுவது குழிசியாம். 
       
           வியல்வாய் 
      - அகன்ற வாய். வெள்வளை - (முத்து ஈனும்)  
      வெள்ளிய சங்குகள். இப்பாட்டினாலே அந்நிலத்துச் சிறு மகளிர்  
      கருப்பொருளும் கூறியவாறு.  16 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |