1028.
|
அன்ன
வடிவு மேனமுமா யறிவா ரிருவ ரறியாமே
மன்னும் புகலூ ருறைவாரை வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள நாளும் பூசை
வழுவாமே
பன்னும் பெருமை யஞ்செழுத்தும் பயின்றே பணிந்து
பரவினார்.12 |
(இ-ள்.)
வெளிப்படை. அன்னவடிவமும், பன்றிவடிவமும்
எடுத்து அறியப்புக்க பிரமவிட்டுணுக்களாகிய தேவர்கள்
இருவராலும் அறியப்படாது நிலைபெற்ற திருப்புகலூரில் எழுந்தருளிய
சிவபெருமானாரை வர்த்தமான வீச்சரம் என்ற திருக்கோயிலில் நல்ல
மகிழ்ச்சியை மனங்கொள்ள ஒவ்வொருநாளும் பூசையினைச்
செய்தலில்தவிராமல், சொல்லத்தக்க பெருமையினையுடைய
திருவைந்தெழுத்தினையும் பயின்றே பணிந்து, வழிபட்டு வந்தார்.
(வி-ரை.)
அறிவார் இருவர் அறியாமே - அறிவார்-
தேவர்கள் என்று கொண்டு, அறிவிற் சிறந்த புலவர் என்ற
பெயர்பெற்ற தேவராயினும் அவர்களும் அறியமாட்டாது
என்றுரைத்தலுமாம். அறிவாராயினும் இறைஞ்சிக் காணும்வகை
யறியாது அன்னமும் ஏனமுமாகித் தாமே தற்போதத்தாற்
காணப்புக்க படியால் அறியாராயினர் என்பது குறிப்பு. அறிவார்
-
அறியாமே - முரண் தொடை. இலிங்க புராணத் திருக்
குறுந்தொகைக் கருத்துப் பார்க்க.
அறியாமே
மன்னும் புகலூர் உறைவார்- றியத்தக்காராயினும்
அவர்கள் அறியவொண்ணாமை புகலூரில் உறைவார் என்ற சுவையும்
காண்க. அறிவார் அறியாராயினும் முருகனார் அறிந்து
புகலூர்ப்பெருமானை வர்த்தமான வீச்சுரத்தில் பரவினார் என்ற
குறிப்பும் காண்க புகலடைந்து புகலூரில் காணாது
இகலினாற்
றேடினார் என்றது தொனிக்கவும் நிற்பது காணத்தக்கது.
அறிவானிருவர்
என்பது பாடமாயின் அறியும் பொருட்டு
என்க.
வர்த்தமான
ஈச்சுரம் - முருகனார் ஆன்மார்த்தமாய்க்
கொண்டு பூசித்த இடம். இது திருப்புகலூர் ஆலயத்தினுள் இறைவர்
கோயிலினை அடுத்து வடகீழ்ப்பக்கம் உள்ள தனிக்கோயில். இதில்
முருகனாரது திருவுருவம் திருப்பூங்கூடையுடன் திருமாலைப்பணி
செய்யும் திருக்கோலத்துடன் சந்நிதானத்தில் எழுந்தருளச்
செய்துள்ளது. நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள - நன்மகிழ்ச்சி
தம்மனத்தைப்பற்றிக் கொள்ள. சிவன்றிருப்பணியின் வைத்த
ஆர்வத்தால் உளதாகிய மகிழ்ச்சியாதலின் நன்னர் மகிழ்ச்சி என்றார்.
ஏனையவாற்றால் உளவாகும் மகிழ்வெல்லாம் எல்லையற்ற நன்மை
செய்யமாட்டா என்பது.
நாளும்
என்பதனை, வழுவாமே - பயின்றே - பணிந்து -
பரவினார் என்ற ஒவ்வொன்றுடனும் தனித்தனி கூட்டுக. நாளும்
-
ஒவ்வொரு நாளும். பூசை செய்தல் - ஐந்தெழுத்துப் பயிலுதல் -
பணிதல் - பரவுதல் - என்ற ஒவ்வோர் தனிச்செய்கைகளை
ஒவ்வோர் வினைச்சொற்களால் நிகழ்த்தி முடிபு செய்தல் குறிக்க.
இவை தனிச்செயல்களாயினும் பூசைக்குரிய அங்கங்களாகப்
பொருந்திப் பரவுதல் என்னும் வினையுடன்
முடிதலின் இவற்றை
வினையெச்சங்களாக்கிப் பரவினார் என்ற
வினைமுற்றுடன் கூட்டி
முடித்த நயமும் காண்க. இவை பூசைக்கு அங்கங்களாகிய
தனிச்செயல்கள் என்பது "பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்"
(253) என்ற விடத்து அறிவித்திருத்தலும் காண்க. பூசையின்
போதும் பூசை முடிவிலும் திருவஞ்செழுத்துப் பயிலத்
தக்கதென்பதனை "நீடு பூசனை நிரம்பியு மன்பினானிரம்பார், மாடு
சூழ்புடை வலங்கொண்டு வணங்கிமுன் வழுத்தித், தேடுமாமறைப்
பொருளினைத் தெளிவுற நோக்கி, நாடு மஞ்செழுத் துணர்வுற
விருந்துமுன் னவின்றார்" (10) என்ற திருநீலநக்க நாயனார்
புராணத்தாலும் அறிக. இங்குக் கூறாத ஏனை அங்கங்களும் அங்கு
விரிக்கப்படுதலும் காண்க.
பன்னும் பெருமை - வேதாகமங்களால் எடுத்துச்
சொல்லப்பட்ட பெருமை பன்னும் - கணித்தற்குரிய என்றலுமாம்.
அஞ்செழுத்துப்
பயிலுதல் - மனத்தின் செய்கையும்,
பரவுதல் வாக்கின் செய்கையும், பணிதல் காயத்தின்
செய்கையுமாதலும் காண்க.
பயின்று என்றது
இடைவிடாது கணித்தல் குறித்தது. 1026
பார்க்க.
சில பிரதிகளில்
இப்பாட்டு 11-வதாகவும் 11-வது பாட்டு
12-வதாகவும் உள்ளன.
அறியாமல்
- என்பது பாடம் 12
|