காணும்
பொலிவின் - வெளிப்படையாகக் கண்ணாற்கண்டு
களிக்கும் அழகினுடன்.
முன்னையினும்
அநேக மடங்கு கறப்பனவாய் - இதற்குக்
காரணம் முன்பாட்டில் மடிபெருகி என்றதனால்
உரைக்கப்பட்டது.
பேணும்
தகுதி இப்பிரமசாரி அன்பால் மேய்த்ததற்பின்
- என்க.
பேணும்
தகுதி - பசுக்காத்தற்குத்தக்க தன்மை. இதனை
முன், "மேய்க்கும் பான்மை" (1230) என்றார். இத்தகுதிக்குரிய
செயல்கள் 1230 - 1231 - ல் உரைக்கப்பட்டன. அன்பால்
-
பசுக்கள் செழித்து மன மகிழும்படி மேய்ப்பதற்கு இன்றியமையாத
சாதனம் அவற்றினிடத்து அன்புடைமையேயாம் ன்ற துணிபை
வற்புறுத்தியவாறு காண்க. இதனை முன்னர் "மிகும்பரிவால்"
(1222) என்றதும் காண்க.
இப்பிரமசாரி
- விசாரசருமனார் தம்முள் ஒருவராயிருத்தலின்
என்ற அண்மைச் சுட்டினாற் குறித்தார்கள்.
மாணும்
திறத்த ஆன - மாண்பு பொருந்தியதன்மையுடையன
வாயின. மாண்பாவது அழகுடைமையும்மனமகிழ்ந்து பால் அதிகம்
தரும் தன்மையுமாம். ஆன - ஆயின- ஆயன் மேய்த்த போதில்லாத
மாண்பு இப்போது உளதாயிற்று என்பார் மேய்த்ததற்பின்
-
ஆயின என்றார்.
மறையோர்
- பசுக்களை உடையவர்கள். 1233 - ல் பசுக்கள்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி எய்தினதைக்
கூறினார்; இங்கு
அவற்றின் மகிழ்ச்சிகண்டு அவற்றாற் பெறும் வேள்விச் சிறப்பு
நோக்கி மறையோரும் மனமகிழ்ந்தமை கூறினார்.
எல்லாம்
- எல்லாரும், முற்றும்மை தொக்கது. கறப்பனவாய்
- மாணுந் திறத்த ஆயின என்று கூட்டுக. 29