659.
(இ-ள்.) வெளிப்படை. ஒப்பற்ற சிறப்பினால்
மிக்கார்களாகிய இவர்க்கு இனிப் புதல்வர்பே றென்பதே
கிடைத்தற்கரியதாம் என்று எல்லாருங் கூற, அப்பேற்றிலே பட்ட
ஆசை மிகுதியாலே வாசமிக்கலர்ந்த மாலையணிந்த
செவ்வேலேந்திய முருகவேளினது திருமுன்றிலிற்
சென்று
பரவி நாடோறும் பரவுக்கடன் பூண்ட நெறியிலே நிற்பார்களாகி, 10
659.
(வி-ரை.) பொருவரும்
சிறப்பு என்றது பெற்றியால்
(657), அரும்பெறல் - (658) என முன்னர்க் குறித்தபடி நாயனாரை
மகனாகப் பெறும் சிறப்பு.
இவர்க்கு
இனிப் புதல்வர்ப்பேறே அரியது - இது
அந்நாட்டவர் இவர்களைச் சுட்டிக் கூறும் கூற்று. இனி அரியது
-
இவர்களது வயது மிக முதிர்ந்த நிலை குறித்தது. புதல்வர்ப்பேறே
- மக்களைப் பெறுதலாகிய செயலே. ஏகாரம் தேற்றம். அரியது
-
இன்மை குறித்தது.
அதன்
படு காதல் - அதன் - அதனில். அந்தப்
புதல்வர்ப்பேற்றிலே. படு - உண்டாகிய.
படுதல் - உண்டாதல்; "ஈத
லிசைபட வாழ்தல்" என்புழிப்போல. காதல் - ஆசை பலவற்றுள்
ஒருவகை. காதலன் என்பது காதலுக்கிடமாகியவன். மகன் - என்ற
பொருளில் வழங்குதல் காண்க.
முருகு
அலர் அலங்கல் - முருகு - வாசனை. மணம்
விரியும் மாலை. இங்குக் குமாரக் கடவுட்குரிய கடம்பமலர்
மாலையைக் குறித்தது. "இருள்படப் பொதுளிய பராரை மராஅத்,
துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்" - என இதனை முதலிற்
றேற்றம்பெறத் திருமுருகாற்றுப்படையினுட் கூறியது காண்க.
செவ்வேல்
- செவ்வொளி வீசும் வேலினையேந்திய. வேல் -
முருகப்பெருமானது ஞானசக்தி யென்ப.
முருகவேள்
- முருகு - இளமை. எஞ்ஞான்றும் மாறாத -
அழியாத - இளமையுள்ள வேள். வேள் - விரும்பப்படுபவன்.
இப்
பெயரானறியப்படும் கரிய வேளாகிய அழகிய மன்மதனுமுளனாதலின்
அவனினின்றும் பிரிந்துணரும் பொருட்டு முருகவேள் - எனப்
பிரிதினியையு நீக்கிய விசேடணந் தந்தோதினார். இவரது இளமையும்
பேரழகும்பற்றி இவர்க்குக் குமரன் - இளையோன் - முருகன் -
குழகன் - முதலியவாக வழங்கும் பெயர்களும் காண்க.
"ஆயிர கோடி
காம ரழகெலாந் திரண்டொன் றாகி
மேவிய வெனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னிற்றூயநல் லெழிலுக் காற்றா
தென்றிமா னைய
தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லா முவமையார் வகுக்க வல்லார்" |