738.
|
நாடியகழல்
வயவர்களவர் நாணனுநெடு வரிவிற்
காடனுமெனு மிருவருமலை காவலரொடு கடிதிற்
கூடினர்விடு பகழிகளொடு கொலைஞமலிகள்
வழுவி
நீடியசரி படர்வதுதரு நீழலின்விரை கேழல். 89
|
738.
(இ-ள்.) வெளிப்படை. நாடிய கழல்கட்டிய
வீரர்களாகிய நெடிய வரிவில்லுடைய நாணனும் காடனும் என்னும்
அவர்களிருவரும் மலைகாவலராகிய திண்ணனாரொடு விரைவிற்
கூடினராகி விடுகின்ற அம்புகளையும் கொலைபுரியும் நாய்களையும்
தப்பி, நீண்ட மலைச்சரிவில் மரங்களின் நீழலில் விரைவுடைய
அப்பன்றி படர்வதாயிற்று. 89
738.
(வி-ரை.) நாடிய -
தேர்ச்சியுடைய. கழல் - காலணி
மணிவடம் - வீரக் கழல். வயவர்கள் - வெற்றியுடையோர்.
விடலைகள் - இருவர் - அடிபிரியார் - வயவர் - நாணனும் -
காடனும் எனும் - அவர் - இருவரும் - கூடினர் - விடு - பகழிகள்
- என்று கூட்டுக.
நாணன்
- காடன் - வேடர் பெயர் வைக்கும்முறை காண்க.
திண்ணண் - நாகன் என்பவற்றிற்கேற்ப இவையும் அமைந்தன.
நெடு
வரி வில் என்னும் அடைமொழிகளை நாணனுக்குங்
கூட்டியுரைக்க. நடு நிலைத்தீபம். மேற்பாட்டில் ஏமுனையடுசிலை
என்றது அவர்கள் பன்றியை அம்பு கொண்டு எய்யக்
குறிவைத்ததனையும், இங்குக் கூறியது அவர்களது
உபாங்கத்தியல்பையும் குறித்ததனால் கூறியது கூறலாகாமையுணர்க.
மலைகாவலர்
- மலைகாவல் பூண்டவர். முன்னைநாளில்
மலைகாவல்புரியும் பட்டத்தைச் சூட்டிக்கொண்ட திண்ணனார்.
பட்டஞ்சூட்டிய அன்று "மலையர் குலக்காவல் பூண்டு" (702) என்று
நாகன் கூறியதும் காண்க. அரசுரிமை என்பது காவல்செய்தலேயாம்
என ஆசிரியர் காட்டியது காண்க. மேலும் இவர் (காளத்தி)
மலையின் காவலரேயாகின்ற நிலையும் குறிப்பாலுணர்த்தினார்.
கூடினர்
- சேர்ந்தனராகி, கூடினராய் விடும்பகழிகள்.
முற்றெச்சம்.
கொலை
ஞமலிகள் - இவை வேட்டைக் காட்டில்நின்ற
நாய்கள். 734 பார்க்க. பொருமறவர்களில் அடிபிரியாத இவ்விருவர்
ஒழிய ஏனையோர் அறிகிலர். கொலை ஞமலிகளும் தொடராது
வழுவின. ஆனால் அடிபிரியாத காரணத்தால் விரைவிற்கூடிய
நாணன் காடன் எனும் இருவிடலைகள்போல அடிபிரியாததொரு
ஞமலியும் திண்ணனாருடன் தொடர்ந்துவந்தது. திண்ணனார்
திருக்காளத்தி சேர்ந்த பின்னர் இவர்கள் யாவரும் அகன்றுவிடவும்
அஞ்ஞமலி அவரை அகலாது உடன்றொடர்ந்து நின்றது
என்பதீண்டுணர்தற்பாலதாம். "செருப்படியும் நாயடியுந் திருவலகான்
மாற்றியபின்" (787) என்பது காண்க. " வேடுவன் நாயொடும் புகுந்து"
என்ற நக்கீரர் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறமும் காண்க.
நீடிய
சரி தருநீழலின் விரைகேழல் படர்வது என்க.
சரி - மலைச்சாரல். தரு மரங்கள். நீழல்
- மரங்கள்செறிந்து நீண்டு
வளர்ந்தமையால் நீழலும் மிக்கது. அவ்விருண்ட நீழலைத்
துணையாகக்கொண்டு விரைந்து கேழல் படர்வதாயிற்று. தரு
நீடியவாகலின் நிழலும் நீண்டு, நீழல்
என்றாயிற்று. இவர்கள்
சென்ற நேரம் நீண்ட நிழல்தரும் காலையின் முன்னேரமாயினதும்
நினைவு கூர்க. கேழல் - பன்றி. கேழலுக்குத்
துணையாய்
நின்றதென்ற குறிப்புப்பெற நீழல் எனச்
சந்தம்படவும் கூறினார். 89
|