795. |
வாயம்பா
லழிப்பதுவும் வகுப்பதுவுஞ் செய்தவற்றி
னாயவுறுப் பிறைச்சியெலா மரிந்தொருகல்
லையிலிட்டுக்
காயநெடுங் கோல்கோத்துக் கனலின்
கணுறக்காய்ச்சித்
தூயதிரு வமுதமைக்கச் சுவைகாண லுறுகின்றார், 146
|
795.
(இ-ள்.) வெளிப்படை. கூர்மையுள்ள அம்பினால்
அழிப்பதுவும் வகுப்பதுவும் ஆகிய செயல்களைச் செய்து,
விலங்குகளினுடைய பல உறுப்புக்களின் இறைச்சி யெல்லாம்
அரிந்து எடுத்து வேறு ஒரு கல்லையில் இட்டுத் தீயிற் காயும்படி
நீண்ட கோலிற் கோர்த்துத் தீயினிடத்துப் பொருந்தக் காய்ச்சித்
தூய்மையாகிய திருவமுதாக அமைத்தற்காகச் சுவைகாணப்
புகுகின்றவராகி, 146
795.
(வி-ரை.) வாய்
- கூர்மை. "வல்வாயெரி"
(திருவீழிமிழுலை - நட்டபாடை - 6) என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரங் காண்க. வாய் அம்பால் - அம்பு
வாயினால் என மாற்றி,
வாய் - நுனி என்றலுமாம்.
அழிப்பது
- உண்டாக்குவது. வகுப்பது -
கீறுவது.
நார்போன்ற செறிவாய்த் தொக்குக் கூடிய தசைப்பகுதிகளைத் துண்டு
துண்டாக்குதலும் கீறுதலும் அவற்றை அமுதாகச் சமைத்தற்கு
முதலிற்செய்வினைகளாம். காய் கறிகளைத் திருத்தும் வகையும்
காண்க. கொழுப்புள்ள பகுதிகளைக் குட்டமிட்டரிந்து வக்குதலும்
கோலிற் கோத்துக் காய்ச்சுதலும் அடிசில் செய்வினைகளில்
முற்செய்வினைகள். இங்கு உறுப்பு இறைச்சி யெலாம் என்றது
ஏனை உறுப்புக்களிற் சுவையுள்ள இறைச்சி. கொழுப்புள்ள
பகுதிகளை முன்னர் எரியில் வக்குதலும் பின்னக் கோலிற் கோத்துக்
கனலிற் பெருந்தக் காய்ச்சுதலும் என்று இருமுறை பக்குவப்படுத்தல்
வேண்டும் என்பர். இஃது காய் கறிகளுட் கூடிய சிவற்றை முதலில்
வறுத்துப் பின்னர் வேகவைத்தலும், அப்படிக் கல்லாது வேறு
சிலவற்றை நேரே வேவித்தலும் என்ற முறைபோல் அடிசில்
சகை்கும்வகை என்க. முதலில் வக்குதல் எரியில் அவற்றின் மயிர்
தோல் முதலிய வேண்டாப் பகுதிகளைக் கழிக்கவுமுதவும் என்ப.
766 பார்க்க.
காய
- காயும்படியாக - வேகும்படியாக. நெடுங்கோல்
-
ஒரு தலையின் இறைச்சித் துண்டங்களைக் கோத்து மற்ற நுனியைக்
கையிற்பற்றி அனலில் வாய்ச்சுதற்குக் கோல் நீண்டிருத்தல்
வேண்டுமாதலின் நெடுங் கோல் என்றார்.
உற
- பொருந்த. உறுதலாவது - மிக அகலாமலும்
மிக
அணுகாமலும் தீயிற் பொருந்துதல். அகலிற் றீச்சூடேறாமலும்
வேகாமலும் போம்; மிக அணுகில் அதிகம் தீச் சுடக் கரிந்துபோம்;
இவ்விரண்டுமின்றிப் பொருந்துதல் வேகும்பக்குவம் மிகினும்
குறையினும் சுவையும் கெட்டுக் கேடும் தருமாதலின் இரண்டு
மில்லாத நேர் பக்குவம் பொருந்துதல் என்றலுமாம். இறைச்சியின்
கொழுப்பு நெய்ப்பசை முழுதும் அதனைப் பக்குவம் செய்தலிலே
பொருந்த என்றதுமாம். இவைபற்றி முன்னர்ப் பதத்தில்
(676)
என்றவிடத் துரைத்தவையும் பார்க்க.
தூயதிருஅமுது
அமைக்க - தேவர்க்குரிய தூயதிருவமுதாக
அமைத்தற்பொருட்டு. இதுவரை அப்பகுதிகள் வனவிலங்குகளின்
வறிய தீய இறைச்சியாய் நின்றன. திண்ணனார் திருவாயில் வைத்துச்
சுவைத்து இனியன என்று கண்டு எடுத்துக்கொண்ட பகுதிகளே
தேவர்க்கு அமுதாவன. ஆதலின் தூய என்றும்,
திரு என்றும்
அடைமொழிகள் தந்தோதினார். தூய்மை -
இவரது திரு வாயில்
வைத்தலாலாவது. முன்னர்த் "தூய வாயினிற் கொண்டு" (770)
என்றதும் நினைவுகூர்க. திரு - தேவர்க்காகும்
பொருள் என்பது
குறித்தது.
சுவைகாணல்
உறுகின்றார் - சுவை காண்பவராகி.
முற்றெச்சம். காணலுறுகின்றார் - திருவாயில் அமைத்தார்
என
வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.
இவ்விரண்டு பாட்டுக்களால்
திண்ணனார் தீவளர்த்து
இறைச்சியைப் பக்குவப்படுத்திய செயல்களும், மேல்வரும் இரண்டு
பாட்டுக்களால் சுவை கண்டு திருவமுதாக்கிய செயல்களும்
கூறப்பட்டன. முன்னைநாட் பூசையில் இச்செயல்கள் 766-767-ல்
உரைக்கப்பட்டன. முன்னர்க்கூறிய அவையும் பூசைக்கமுது பெற்று
அகை்கும் செயல்களேயாயினும் அங்கு உச்சியின்
பின்னேரமாயினமையும், வேட்டுவந் குடிமக்களின் இடர் தீர்க்கப்
பலரும் கூடி ஆடியவேட்டையில் எய்தியதோர் பன்றியிறைச்சி
யொன்றே யாயினமையும், தேவர் பசிதீர்க்கும் விரைவு
மிகதியாயினமையும், இன்ன பிறவும் குறிப்பார் அதற்குத்தகச்
சுருக்கிக்கூறினார். அவ்வாறன்றி, இங்கு முற்பகலாதலும், தாமே
எண்ணியாடிய தனி வேட்டையாதலும், பன்றி மான் முதலிய பற்பல
வகையிறைச்சியாதலும், திண்ணனார் மனமொன்றத் தாமே செய்யும்
அமுதமைப்பாதலும், பிறவும் கருதி நான்கு திருப்பாட்டுக்களான்
விரித்துக் கூறினார். இவ்வாறு பின்னர் விரித்தற்காக முன்னர்த்
தொகுத்தும், வேண்டுமிடத்துப் பின்னர் விரித்தும் கூறுவது
ஆசிரியர்க்கேயுரிய சிறப்புக்களில் ஒன்றாம். திருநாவுக்கரசநாயனாரது
புராணத்தில் அப்பூதியடிகள் சரிதசுருக்கம் அப்பூதிநாயனார்
புராணத்தில் அச்சரித விரிவாகவும் ஆகக் கூறியுள்ள அமைவும்
காண்க. திருவீழிமிழலைப் படிக்காசு பெற்ற சிறப்பும்,
திருமறைக்காட்டிற் கதவந்திறப்படைப்புக்களாகிய சிறப்பும் என்ற
இவைகள் ஆளுடைய அரசுகள், ஆளுடையபிள்ளையார் ஆகிய
இருவரது புராணங்களினும் கூறிய சுருக்கப்பெருக்கப் பொருத்த
அமைதிகளும் ஒப்பு நோக்குக. கழறிற்றறிவார் நாயனார்
குதிரையின்மேல் ஏறி நம்பிகளது வெள்ளை யானையின் முன்னர்க்
கயிலைக்கு எழுந்தருளும் சரிதப்பகுதி பின்னர் வெள்ளையானைச்
சருக்கத்து விரிக்கவேண்டுதலின், அவர்தம் புராணத்திலே
"வன்றொண்டர்....திருக்கயிலையினின், மதவரைமேல் எழுந்தருள
முன்னர்வயப் பரியுகைக்குந் திருத்தொழில்பின் மொழிகின்றாம்" (174)
என்று சுருக்கிக்கூறிய அழகும் இங்கு நினைவுகூர்க.
ஒரு
கல்லையில் - சுவைத்த தூயதிருவமுதாக
அமைத்தற்குமுன் இறைச்சிப் பகுதிகளை அரிந்து இடுதற்கும்
வக்குவித்து இடுதற்கும் ஒருகல்லை அமைத்தனர். சுவைத்தபின்
அமுதமைத்துப் படைத்து எடுத்துக்கொண்டுபோக மற்றொரு
கல்லையமைத்தனர். 797 பார்க்க.
அழிப்பனவும்
- என்பதும் பாடம். 146 |