924.
|
பரிவுறு
சிந்தை யன்பர் பரம்பொரு ளாகி யுள்ள
"பெரியவ ரமுது செய்யப் பெற்றிலே" னென்று,
மாவின்
வரிவடு விடேலெ னாமுன், வன்கழுத் தரிவாள் பூட்டி
யரிதலா "லரிவாட் டாய" ராயினார் தூய நாமம். 22 |
(இ-ள்.)
வெளிப்படை. அன்பு பொருந்தியசிந்தையினையுடைய
அன்பராகிய தாயனார், "பரம்பொருளாகியுள்ள பெரியவராகிய
சிவபெருமான் இங்கு அமுது செய்யும் பேறு பெற்றிலேன்" என்று
கொண்டு வரியினையுடைய மாவடுவினது "விடேல்"
என்ற
ஓசையினை அவர் கேட்பிக்கு முன்பு, தம் வன் கழுத்தினை
அரிவாளினைப் பூட்டி அரிதலினாலே அரிவாட்டாயர் என்ற
தூய பெயரினை உடையர் ஆயினர்.
(வி-ரை.)
இப்பாட்டுக் கவிக்கூற்று.
பரிவுறு
சிந்தை - பரிவு - அன்பு. மாசறு சிந்தை அன்பர்
(920), அன்புகாட்டிய நெறியின் (919) என உரைத்தவற்றை இங்கு
நினைவு கூர்க.
பரம்பொருள்......பெரியவர்
- எல்லாப் பொருள்களுக்கும்
அப்பாற்பட்ட - கடந்த - எல்லையாயுள்ள பொருள். "உலகுய்ய
நடமாடும் எல்லை" (திருநாளை - புரா - 35,), "அலகில் கலையின்
பொருட்கெல்லை யாடுங் கழலே" (சண்டீசர் - புரா - 15)
என்பனவாதிய திருவாக்குக்களும், "அமுதுசெய் பரனே" (922) என்ற
விடத்துரைத்தவையும் காண்க.
அமுது
செய்யப்பெற்றிலேன் - 917, 918 பார்க்க.
வரிவடு
- நிறமுடைய மாவடு. "மன்னு பைந்துணர் மாவடு"
(908) என்றது காண்க.
வன்கழுத்து
- அரிந்தும் அரியுண்ணாமலும், பின்னர்
அருளால் ஊறுநீங்கியும், இறைவனதுகழுத்துப்போல என்று நிலைத்த
வாழ்வுபெற்றும் விளங்கிய தன்மை குறிக்க வன்மை என்ற
அடைமொழி தந்தோதினார்.
நாமம்
- தாயன் என்பது அவரது பெயர். அர் -
உயர்வு
குறித்த பன்மை விகுதி. மாறர் - மாறனார் - (440) என்புழிப்போல.
தூய
நாமம் அரிவாட்டாயர் ஆயினார் என்க. தூய
-
தூய்மையைத் தரத்தக்க. திருதொண்டத்தொகையுள் ஆளுடைய
நம்பிகள் இக்கருத்துப்பற்றியே "எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு
மடியேன்" என்று துதிக்க நின்றமையும், அதனைத் துதித்து உலகம்
தீமை நீங்கித் தூய்மை பெற்று உய்கின்றமையும் குறிக்கத் தூய
என்றார். அடியார் திருநாமங்கள் தூய்மை செய்வனவாம் என,
"அடியிணைகள், சிந்தனைசெய் திந்தத் திருநாமக்
கோவையினை,
மந்திரமாக் கொண்டு மயிர் சிலிர்த்து - நைந்துருகி, மெய்யன்பா
லென்றும் விளம்பப் பெறுவார்கள், கைதவமும் புல்லறிவுங்
கற்பனையும் - மையலுந் தீர்ந், தத்துவிதா
னந்த வகண்டபரி்
பூரணத்தில், நித்தியமாய் வாழ்வார் நிசம்" என்று திருத்தொண்டர்
திருநாமக் கோவையினுள் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் போற்றி
அருளியிருப்பது காண்க. "திருஞான சம்பந்தர்" என்ற நாமமந்திரம்
சொல்லக் கேட்டலும் பாண்டியர் அயர்ச்சியை நீங்கினார் (திருஞான
- புரா - 721) என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்க. 22
|