408திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     ஆணைநீகழ - பிள்ளையாரது ஆணையாக - கட்டளையாக நிகழும்படி. அடியாரைச் சாரலாகாது என்று திருநீலகண்டத்தின் ஆணையாக நிகழ்வுற. நிகழ் என்றதனால் அன்று மட்டுமன்றி அது முதல் இனி வருங்காலமெல்லாம் என்றதும் குறிப்பு.
     தூய பதிகம் - தூய்மைதரும் பதிகம். தூய்மையாவது பழவினைப் பயனும் பற்றாதபடி செய்யும் நலம்.
     பதி வாழ்பவர்க்கே யன்றி - நாடு அடங்கவும் - அந்நகரத்தில் வாழ்வாரும் நாட்டில் வாழ்வாரும் ஆகிய அனைவரும். அடங்க - முற்றும். நாடு - நாட்டில் வாழ்வார். பதி வாழ்பவர் - அடியவர்களையும் பரிசனங்களையும் உளப்படுத்தி நின்றது.
     அணிய - அணிந்ததனால்; காரணப் பொருளில் வந்த வினையெச்சம். அணியத் தீர்ந்தது என்று கூட்டுக.
     பிள்ளையாரது திருவுள்ளக் குறிப்பினில் ஆணை நிகழ்வதாகலின் இத் திருப்பதிகத்தை நியதியாய் நியமமாய் ஓதுபவர்கள் பிணிமுதலிய துன்பங்களினீங்குதல் இன்றும் நிகழ்வதாகும்.
336
2235.அப்பதி யின்க ணமர்ந்து சிலநாளி லங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம் பலவுந் தொழுதருளி
முப்புரி நூலுடன் றோலணி மார்பர் முனிவரொடுஞ்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக் கொடுமுடி சென்றணைந்தார்.
337
     (இ-ள்.) அப்பதி....அகன்று - அத்திருப்பதியினிடத்தில் விரும்ப எழுந்தருளியிருந்து பின் சில நாட்களில் அங்கு நீங்கிச் சென்று; துப்பு உறழ்...தொழுதருளி - பவளம்போன்ற சிவந்த சடையினையுடைய இறைவரது இடங்கள் பலவற்றையும் தொழுதருளி; முப்புரி...மார்பர் - மான் தோலுடன் கூடிய முப்புரி நூலினை அணிந்த திருமார்பினையுடைய பிள்ளையார்; முனிரிவரொடும்.....அணைந்தார் - சொல்லுதற்கரிய சிறப்புடைய திருப்பாண்டிக் கொடுமுடியை முனிவர்களுடன் சென்று அணைந்தருளினர்.
     (வி-ரை.) தானம் பலவும் - இவை திருச்செங்கோட்டுக்கும் கொடுமுடிக்கும் இடையில் பொன்னி யிருகரையிலுமுள்ளவை. பழங்கோயில்கள் பலவும் குன்று தோறாடல்களும் உள்ளன.
     முப்புரி நூலுடன் தோல்அணி - உபநயனம் செய்யப் பெற்றுத் "தோலொடு நூல் தாங்கினார்" ஆதல் குறிப்பு; கருமானின்தோல்.
     முனிவர் - உடன் வந்த அந்தணர்கள்; மறை முனிவர்.
     செப்பருஞ்சீர் - தலப்பெருமை குறித்தது. தலவிசேடம் பார்க்க;
     துப்பு உறழ்வேணி - துப்பு - பவளம்; மின்போற் செவ்வொளி வீசும் சடைக்கு ஒப்பு.
     சில நாளில் அங்கு அகன்று - முதலில் தலம் தொழுது கும்பிடுமாதரவுடன் அக் கோநகரில் இனிதமர்ந்தார்; (2224); பின்னர்க் குடபுலத்தில் தானங்கள் கும்பிட்டு மீண்டும் வந்து வைகினார்; (2225); பின்னர் நாட்டிற் பிணி மூளக்கண்டு பதிகம் பாடிப் போக்கியருளிப் பின்னும் சிலநாள்கள் அங்கு வைகினார் என்க. அங்கு - வைகிய அங்கு நின்றும். உருபு தொக்கது.
     பிறவும் தொழுதிறைஞ்சி - என்பதும் பாடம்.
337