|
முறைபுரிந்த முன் உணர்வு - முறை - விதி; முறைப்படி; புரிதல் - இடைவிடாது நினைத்தல்; "புகழ்புரிந்தார் மாட்டு" (குறள்); 1932 பார்க்க; முன் உணர்வு - முன்னை நிலையின் நினைவு; மூள - இங்குவந்து பொருந்த - மிகுந்து தாக்க. "பாலனாயதொண்டு செய்து பண்டுமின்றும்" (பிள். தேவா.) ஈசர் கழல் முறை புரிந்த முன்னுணர்வு மூள - பிள்ளையார் முருகப்பெருமா னவதாரமன்று என்று காட்ட இஃதும் ஒரு நல்ல ஆதரவாம்; "பண்டுதிரு வடிமறவாப் பான்மையோர்" (1953) என்றதும் ஆண்டுரைத்தவையும் பிறவும் காண்க. |
மற்றவரை முற்காணாது - என்பதும் பாடம். |
61 |
| அழுதல் |
| 1960.கண்மலர்க ணீர்ததும்பக் கைமலர்க ளாற்பிசைந்து |
| வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடைதுடிப்ப, |
| எண்ணின்மறை யொலிபெருக வெவ்வுயிருங் குதுகலிப்பப் |
| புண்ணியக்கன் றனையவர்தாம் பொருமியழு தருளினார். |
62 |
(இ-ள்.) கண்மலர்கள்...புடைதுடிப்ப - கண்களாகிய மலர்களினின்றும் நீர் ததும்பும்படி கைம் மலர்களாலே அவற்றைப் பிசைந்து, அழகிய தாமரை மலரையும் சிவந்த கொவ்வைக்கனியையும் போன்ற திருவாயின் அழகிய உதடுகள் புடைபெயர்ந்து துடிக்க; எண்ணில்...குதுகலிப்ப - எண்ணில் மறைகளின் ஒலி பெருகவும் எவ்வுயிர்களும் களிப்படையவும்; புண்ணியக்கன்று...அழுதருளினார் - புண்ணியக்கன்று போன்றவராகிய பிள்ளையார் பொருமிப் பொருமி அழுதருள்வாராயினர். |
(வி-ரை.) கண்மலர்கள்...துடிப்ப - முதலிற் கண்களின் நீர்ததும்ப நிற்றலும், பின்னர்க் கைகளால் கண்களைப் பிசைதலும், அதன்பின் உதடுகள் துடித்தலும், அதன் பின்னர் ஒலிபெருகத் தேம்பி யழுதலும் முறையாக நிகழ்வது குழவிகளிடத்துக் காணும் மெய்ப்பாட்டு நிலைகள். அவற்றை அம்முறையே வைத்துக் கூறித் தன்மையணிச் சுவைபட உரைத்த கவிநயம் காண்க. |
கண்மலர்கள் - கைம்மலர்கள் - மலர்ச் செங்கனிவாய் - கண்களும் கைகளும் வாயும் எல்லாம் தாமரை மலர்களாகவே உள்ள எழில் கொண்டன. காண்பவர்களது மனமும் கண்ணும் கவர உள்ள அழகும் பயனும்பற்றி இவ்வாறு உருவகப்படுத்தி அருமைப்பாடு பெறக் கூறினார். பயனாவது சிவத்தன்மை யடைதற்குத் தகுதி பெறுவித்தல்; "எவ்வுயிருங் குதுகலிப்ப" என்று பயன் குறித்துரைத்தது காண்க. அஃதெவ்வாறோ எனின், ஆசாரியரது கண்பார்வையானும், கைதலைமிசை வைத்தலானும், உபதேசித்தலானும் பக்குவப்படுத்தும் செயல்களின் குறிப்பு. மலர்கள் ஈண்டு மலர்களுட் சிறந்த தாமரை மலர்களைக் குறித்தன. "தங்கிய - அங்கை கமல மடி கமல மானோக்கி, கொங்கை கமல முகங்கமலம்" என்ற திருவுலாவும், "திருவளர் தாமரை" என்ற திருக்கோவையும், "கமலமே வதனம் கமலமே நயனம்" என்னுந் திருவிசைப்பாவும் கருதுக. கனிவாய் - வாயினுக்குக் கனிவிக்கப்பாடும் தன்மை குறிக்கச் செங்கனி என்று மேலும் ஒரு சிறப்புக்கூட்டி உரைத்தார். மணிஅதரம் என்ற குறிப்பும் அது. |
எண்ணில் மறை ஒலிபெருக எவ்வுயிருங் குதுகலிப்ப - மறை ஒலிபெருகுதலினால் உயிர் குதூகலித்தல் நிகழ என்று காரண காரிய முறைபற்றி வந்ததோர் பயன் கூறியவாறு. முன்னிரண்டிகளிற் கூறியவை சாதனவகையாலும், இது பயன்வகையாலும் கொள்ளத்தக்கன. எண்ணில் - அளவு இல்லாத; எண்ணத்தின் கண் நிலவும் என்றலுமாம். மறைபெருக - என்னாது மறைஒலி பெருக என்றது மறை, ஒலியும் பொருளுமாகிய அளவில் தமிழ் மொழியில் வெளிவருவது என்ற |