|
இங்ஙனம் நாம் எண்ணி இன்புற்றவாறு அங்கு விழா கோலாகோலமாக நடைபெறவில்லை. உத்தரத்தன்று மத்தியானம் 12 மணிக்கு ஆசிரியர் அவர்கள் உரைச்சுவடிகளை ஆடும் பெருமான் பொன் அடியில் வைத்துக் காதல் பெருகக், கண்ணீர் மல்க நாத் தழுதழுக்க "அருளாளா! நீ ஆணையிட்ட அரும்பணியை முடித்துவிட்டேன் ஏற்றுக்கொள்" என்று ஒப்புவித்தார்கள். |
மறுநாள் பிற்பகல் 5 மணிக்கு ஆயிரக்கால் மண்டபத்தில், தில்லைவாழந்தணர் அவர்களில் ஒருவரின் சீரிய தலைமையில் விழா ஆரம்பமாயிற்று. பெண்டிரும் ஆடவருமாக ஒருசில அன்பர்கள் கூடியிருந்தார்கள். அதிக ஆடம்பரமின்றி விழா அமைதியாக நடைபெற்றது. திருத்தருமபுர ஆதினம் பண்டாரசந்நிதிகள், மதுரை திருஞானசம்பந்த மடாதிபதிகள் தங்கள் அன்புப் பரிசுகளையும், ஆசியையும் அனுப்பிவைத்திருந்தார்கள். சைவ சித்தாந்த சமாஜத்தினர், ஈழநாட்டுச் சைவ மக்கள், இன்னும் பல சபையோர்களும், சிவநேசச் செல்வர்களும் அனுப்பியிருந்த பாராட்டுரைகளும் கடிதங்களும் படிக்கப்பட்டன. குழுமியிருந்த அன்பர்கள் பலர் பேராசிரியர் அவர்களுக்கும் அவர்கள் வாழ்க்கை நற்றுணைவி அவர்களுக்கும் புகழ் மாலையும் மலர்மாலையும் சூட்டிப் பாராட்டினார்கள். மங்களவாழ்த்துடன் விழா இனிதுமுடிந்தது. சைவப் பேரன்பர் திரு. பழனியப்ப முதலியாரவர்கள் யாவருக்கும் அறுசுவை விருந்தளித்தார்கள். |
மிக விமரிசையாக நடைபெறவேண்டிய விழா இவ்வாறு சந்தடியின்றி நடைபெற்றதற்குக் காரணம் முன்னதாகப் பல பத்திரிகைகள் வாயிலாகத் தெரிவிக்கப் படாமையே ஆகும். மேலும் விரிவுரையின் பிற்பகுதி காகிதப் பஞ்சத்தால் அச்சு வாகனம் ஏறாது இன்னும் கையெழுத்துப் பிரதியாகவேயுள்ளது. ஆகவே உரை முழுவதும் அச்சாகி முடித்து அடுத்த ஆண்டு அதே இடத்தில் அதே தினத்தில், நூலின் சிறப்பிற்கும், சைவ மக்களின் பெருந்தன்மைக்கும் தக்கமுறையில் விழாவை மீண்டும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் பொருட்டுக் கும்பகோணம் திரு. குமாரசாமி செட்டியார் அவர்களைத் தலைவராகவும், ஸ்ரீ மௌனம் சோமசுந்தரத் தம்பிரான் அவர்களை அமைச்சராகவும், பல அறிஞர்களை உறுப்பினராகவும் கொண்ட ஒரு செயற்குழு அமைக்கப்ப்ட்டது. |
உரைநூல் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஏழு அழகிய பெரிய புத்தகங்களாக வெளிவருகிறது. மொத்தம் விலை ரூ. 75. புத்தகம் வேண்டுவோர் முன்பணமாக ரூ. 75 அனுப்பி அச்சான பகுதிகளைப் பெற்றுக்கொண்டால் பிற்பகுதிகளும் சீக்கிரம் அச்சாகி நமது கைக்குக் கிடைக்கும். எனவே அன்றைய கூட்டத்தில் பல பெரியோர்கள் அவ்வாறு பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்கள். சைவ மக்கள் மேலும் அநேகர் முன்வந்து இந்த அரிய கைங்கரியத்தில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன். |
தஞ்சாவூர் | திருமதி - புஷ்பம் நடராஜன் 33 |
|
புகழ்க் கவிகள் |
33 |
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
1 புலனாதி மனாதியரு மறையாதி தொடராப் |
பொருளாயெப் பொருட்களினும் புணர்ந்துடன்வே றாகி |
மலனாதி கழித்துயிர்க ளின்பமுறக் கருணை |
வடிவாகி யளப்பரிய பெருமையனாம் பரமன் |