ஆதி "யாட்பா லவர்க்கரு ளுந்திறம்" நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால் ஓது மெல்லை யுலப்பில வாதலின் யாது மாராய்ச்சி யில்லையா மென்றதாம். | 833 | (இ-ள்) ஆதி...நவிலுங்கால் - ஆளாகும் பான்மையுடைய அடியவர்களுக்கு முதல்வர் அருளுகின்ற திறங்களையும், நாதருடைய மாண்பினையும் கேட்கலாயின் அதற்கு விடை சொல்லும்போது; ஓதும் எல்லை....ஆதலின் - சொல்லும் நிலைகள் அளவுபடாது விரிவனவாம்; ஆதலின், யாதும்....என்றதாம். எவ்வகையாலும் ஆராய்ச்சி செய்யும் தன்மை இல்லை என்று அருளியபடியாம்; |
|
|