அங்கணரைப் போற்றியெழுந் தாண்ட வரசமர்ந்த பொங்கு திருமடத்திற் புக்கங் கினிதமர்ந்து, திங்கட் பகவணியுஞ் சென்னியார் சேவடிக்கீழ்த் தங்கு மனத்தோடு தாம்பரவிச் செல்லுநாள்; | 946 | (இ-ள்.) அங்கணரை...அமர்ந்து - (பிள்ளையார்) இறைவரைத் துதித்து எழுந்து ஆளுடைய அரசுகள் விரும்பி எழுந்தருளிய அன்பு பொங்கும் திருமடத்திற் சென்று சேர்ந்து அவ்விடத்திலே இனிதாக விரும்பி வீற்றிருந்தருளி; திங்கள்...செல்லுநாள் - திங்களின் பிளவுபோன்ற பிறையினைச் சூடிய தலையினையுடைய இறைவரது சேவடியின் கீழே தங்கும் திருவுள்ளத்துடனே தாமும் துதித்து எழுந்தருளியிருந்த காலத்திலே; (வி.ரை) அங்கணரைப் போற்றி எழுந்து - கோயிலின் திரு முற்றத்தில் அமர்ந்து இருபாலும் அடியார் செய்திகளை வினவி மகிழ்ந்திருந்த இடத்தினின்றும், இறைவரைப் போற்றி எழுந்தனர்.; போற்றுதல் - அடியார்க்கருளிய தன்மைகளை வினவி மகிழ்ந்த நிலையில் இறைவரது திருவருளைப் பாராட்டும் முகத்தானும், திருக்கோயிலினின்றும் புறப்படும்பொழுது விடைகொள்ளும் முகத்தானும் துதித்தலாம். இப்பொருள்களைத், திருமடத்திற் செல்லாது திருக்கோயிற்புறத் திருமுற்றத்தில் வினவிப் பேசி மகிழ்தல் என்னை? எனின், அதற்குரிய இடம் அதுவேயாதலானும், அங்கு ஆண்டவாருளும் அடியார் செய்கையின் பெருமையுமன்றி வேறு பேசலாகாது என்பவாதலானும் என்க. முன்னர்த் திருக்கோயிலின் வழிபடச் செல்லுங்கால் வேறு சிந்தித்தலும் என்க. முன்னர்த் திருக்கோயிலின் வழிபடச் செல்லுங்கால் வேறு சிந்தித்தலும் வேறு பேசலுமாகாது என்பதும் கருதுக. ஆண்ட அரசமர்ந்த பொங்கு திருமடத்திற் புக்கு - இது அரசுகள் அங்குறையுந்தன்மையினைத் திருவுள்ளங் கொண்டு தாம் செய்து அமைத்த திருமடம். இதுபற்றி அவர்தம் புராணத்துள் (1653-1654) உரைத்தவையும், III.பக் ©ஸஉ-ல் உரைத்தவையும் பார்க்க. பொங்குதல் - அருள் பெருகுதல். திங்கட் பகவு - பிறை; பகவு - பிளந்ததனாற் பெறப்படுவது. பகு - பகுதி. சென்னியார் சேவடிக்கீழ்த் தங்கு மனத்தோடும் தாம்பரவி - ழுதிருவடிக் கீழ்நாமிருப்பதேழு (தேவா) என்ற கருத்துடன் பல பதிகங்கள் அருளித் தொண்டு செய்து அரசுகள் அங்கு உறைதலை விரும்பித் திருமடமும் செய்து அமர்ந்தாராலின், பிள்ளையார் தாமும் அத்தன்மையே பற்றித் திருவுள்ளத்தமைத்துப் போற்றி எழுந்தருளி யிருந்தனர். திங்கட் கொழுந்தணியும் - என்பதும் பாடம். திருப்பூந்துருததி - பிள்ளையார் அருளிய பதிகங்கள் கிடைத்தில! தலவிசேடம் : - திருப்பூந்துருத்தி - காவிரியின் தென்கரை 11-வது பதி. இந்திரன், காசிபர், சோழ அரசன் முதலியவர்கள் வழிபட்ட தலம்; திருவையாறுள்ளிட்ட ழுஏழு தலங்கழுளுள் (சத்தத் தானம்) ஒன்று. ஆளுடைய பிள்ளையார் புறத்திலிந்து உட்புகும்போது நேரே கண்டு கும்பிடும்படி இடபதேவர்கள் வழிவிலகிக் காட்டினர் என்பர். அரசுகள் இங்கு உறையும் தன்மைவேண்டித் திருமடம் செய்து அமர்ந்தருளிய செய்தியும், ஆளுடைய பிள்ளையார் இங்கு எழுந்தருளும்பொழுது அரசுகள் எதிர் கொண்டு சென்று அவரது சிவிகை தாங்கிவந்த செய்தியும், பின்பு இருவரும் அரசுகளது திருமடத்தில் தங்கியமர்ந்திருந்த செய்தியும், பிறவும் முன்னர் அவ்வவர் புராணங்களுள் விரிக்கப்பட்டன. சுவாமி பெயர் பொய்யிலி நாதர்; புட்பவன நாதர் என்று கூறுவது வடமொழி வழக்கு; பொய்யிலி - ஆதிபுராணன் - செல்வன் முதலிய பெயர்கள் அரசுளது பதிகங்களுட் காணப்படும். அம்மையார் - ஆழகார்ந்த நாயகி; பதிகம்2. இது தஞ்சாவூர் நிலையத்தினின்றும் வடக்கே கற்சாலைவழி 4 நாழிகையளவில் உள்ள திருக்கண்டிரினின்றும் மேற்கே மட்சாலைவழி 2 நாழகையளவில் உள்ளது. |
|
|