மாடுபுனற் பொன்னி யிழிந்து வடகரையில் நீடுதிரு நெய்த்தான மையாறு நேர்ந்திறைஞ்சிப் பாடுதமிழ் மாலைகளுக்கு சாத்திப் பரவிப்போய் ஆடல் புரிந்தார் திருப்பழனஞ் சென்றணைந்தார். | 949 | (இ-ள்.) மாடு... இழிந்து - அருகில் உள்ள காவிரியில் இறங்கிச் சென்று; வட கரையில் ... பரவிப்போய் - ஆற்றின் வடகரையிலே நிலைபெற்றுள்ள திருநெய்த்தானப் பதியினையும், திருவையாற்றினையும் சென்று சேர்ந்து பணிந்து பெருமையுள்ள தமிழ் மாலைகளையும் கட்டளையிட்டுத் துதித்துச்சென்று; ஆடல் .... அணைந்தார் - ஐந்தொழிற் கூத்தினைச் செய்யும் இறைவரது திருப்பழனத்தினைச் சென்று அணைந்தனர். (வி-ரை) மாடுபுனற் பொன்னி - காவிரியின் தென்கரையில் ஆற்றுக்கு மிக அருகில் திருப்பூந்துருத்தி உள்ளமையால் மாடு என்றார். மாடு - மிக அணிமை - பக்கம். இழிந்து - ஆற்றில் இறங்கி நடந்து வழிக்கொள்ளும் முறை குறித்தது. நீடு - ழுநிலமல்கிய புகழின்மிகுழு என்பது தேவாரம். வடகரையில்... இறைஞ்சி - திருநெய்த்தானம், திருவையாறு என்ற இரண்டு பதிகளும் காவிரியின் வடகரையில் அணிமையில் உள்ளன. பிள்ளையார் ஆற்றைக் கடந்தவுடன் எதிர்க்கரையில் உள்ள திருநெய்த்தானத்தை வணங்கிப் பின் அந்தக் கரைவழியே சென்று கிழக்கில் அணிமையில் உள்ள திருவையாற்றின் வணங்கினார் என்ற வழிவகை காட்டிய வைப்புமுறையும் காண்க. காவிரிக் கரையில் பதிகள் இருமருங்கும் உள்ளனவாதலால் வழிபடுவோர் இருகரையும் கலந்தே சென்று வழிபட்டுச் செல்வது நியமம் என்பதை முன்னர் அரசுகள் புராணத்தும் காண்க. ழுபொன்னி யிருகரையும் சார்ந்துழு (1455). நேர்ந்தது - நேர்படச் சென்று சேர்ந்து, ழுநேர்படநின் றறைகூவும் திருப்பதிகம்ழு (1680). இவை ஒருமுறையில் வழிபட உள்ளன என்ற குறிப்பும் காண்க. இவை முன் இறைஞ்சிய பதிகளாயினும் பின்னரும் வழியில் நேர்பட்டமையால் இறைஞ்சி என்ற குறிப்புமாம். பாடு தமிழ்மாலை - படு - பெருமை; பாடுகின்ற - அன்பர்கள் பயின்று பாடி உய்தி பெறுகின்ற என்றலுமாம். ழுபேசற்கினிய பாடல்ழு (11) என்ற தேவாரக் குறிப்பு. பாடு மாலை - என்றது கையின் பணியாலாகும் மாலையன்றி வாக்கின் பணியாகிய மாலை என்பது. ஆடல் - ஐந்தொழிற் பெருங்கூத்து; ழுஆடினா ரொருவர் போலும்ழு (நேரிசை); ழுஆடி நின்றாய்ழு (திருவிருத்தம்). ஆடல் - அடுதல் - அழித்தல் - வெல்லுதல் என்று கொண்டு, அடைந்தாரது வினைகளை அறுக்கின்றவர்; சங்கார காரணர் என்றுரைக்கவும் நின்றது. ழுபாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரேழு (1) என்ற பிள்ளையாரது தேவாரக்குறிப்புக் காண்க. இத்தலத் திருப்பதிகத்தினுள் ழுகாலனை... ... புறந்தாளா லெண்ணா துதைத்தழு (2), ழுபேயுறை மயான மிடமா மிடமா வுடையார்ழு (3), ழுமயானத்தி லிரவிற்பூதம் பாடவாடிழு (4), ழுமதின்மூன் றெரித்த கொல்லே றுடைடகலமுடையார்ழு (9) என நிரந்து இக்கருத்தே பற்றிப் பிள்ளையார் அருளுதலும், ழுபாவமே தீரநின்றார்ழு (2), ழுபண்டையென் வினைக டீர்ப்பார்ழு (3), ழுபாற்றினார் வினைகளெல்லாம்ழு (8) (நேரிசை), ழுஉறுநோய் சிறுபிணிக டீர்ப்பார் தாமேழு (2) (தாண்) என்று அரசுகள் அருளுதலும் ஈண்டு கருதத்தக்கன. (திருப்பூந்திருத்தி) திருநெய்த்தானம், ஐயாறு, திருப்பழனம் - இவை இவ்வாறு ஒரே முறையில் சேர்ந்து வழிபட உள்ளன (ஏழு பதிகளுட் சேர்ந்தன) என்பது ழுபூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே, யுடைவே புனல்சூழை யாற்றார் தாமேழு (பழனம் - தாண்டகம்) என்ற திருவாக்கானுமறிக. இக்குறிப்புப்பட இவற்றை இவ்வொருபாட்டில் சேரவைத்துக் கூறிய தெய்வ வருட்குறிப்பும் காண்க. |
|
|