பாடல் எண் :2943
திங்க டோறுமுன் செய்யுமத் திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை மாட்சியிற் பெருக
அங்கண் மாநக ரமைத்திட, வாண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி தளர்நடை பயில;
1045
இ-ள்.) திங்கள் தோறும்......அமைத்திட - மாதந்தோறும் முன் செய்யப்படும் அந்தச் செல்வம் வளரும் மங்கலங்களாகிய சடங்குகளும் ஏனை நல்வினைகளும் மாண்பு பொருந்தப் பெருகும்படி அங்குப் பெரிய நகரத்தினர்கள் அமைவுபடுத்தியிட; ஆண்டெதி ரணைந்து.....பயில - ஓராண்டு நிறைந்து தங்கும் பேரொளியினையுடைய சிற்றடிகள் தளர்நடை பயில;
(வி-ரை.) திங்கள்தோறும் செய்யும்.....நல்வினை - ஆண்டு நிறைவின் முன் மாதந்தோறும் செய்யப்படும் சடங்குகள். இவை மாதந்தோறும் பிறந்த நாளிற் (இரட்சா பந்தனம்) காப்பிடுதல் - முதல் மாதத்திற் றொட்டிலேற்றுதல், (உபநிட்கரமணம்,) ஏழாமாதத்தில் அன்னப்பிராசனம் முதலாயின என்பர். திருவளர் - மங்கலம் புரி - நல்வினை - வேத விதிகளுள் விதித்த இச்சடங்குகள் செல்வம், ஆயுள், வீரியம் முதலிய நற்பண்புகளை வளாக்கும் பயன் தருவன எனப்படுவன. நல்வினை - வேள்வி - அமுது அளித்தல் முதலிய சடங்குகள்; உற்றவர்களால் அப்போது அக்குழவியின் உலக நலங்களின் வளர்ச்சி கருதிச் செய்யப்பட்டனவாயினும், உண்மையில் இறுதியில் மங்கலங்களுக்கெல்லாம் மேலாகிய சிவ நன்மங்கலத்தைப் பிள்ளையாரது அருளினால் சாரச் செய்தன என்பது மங்கலம் புரி என்றதன் குறிப்பு. "தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்" (3015) என்பது காண்க.
ஆண்டெதிர் அணைந்து - மாதந்தோறும் செய்யும் சடங்குகள் நிரம்பிப் பிறந்த ஆண்டினை அடுத்த ஆண்டு கூடி.
தளர்நடை பயில - இப்பருவம் ஓராண்டு நிறைவில் நிகழ்வது; 1948 பார்க்க. பிள்ளைத் தமிழ்நூல்களுட் சிறப்பித்துக் கூறும் பருவங்களுள் முதலேழு பருவங்களும் இங்குப் பெறவைத்து இவ்வொரு பாட்டிற் கூறியமைத்த கவிநலம் கண்டுகொள்க. இவற்றி னியல்பெல்லாம் இருபாலார்க்கும் பொதுவாதலானும் இவை முன்னர் விரிக்கப்பட்டமையானும் இவ்வாறு சுருங்கச் சுட்டிக் கூறியமைத்தார். மேல்விளையும் மூன்று பருவங்கள் பெண்பாற்குச் சிறப்பாயுரியன வாதலின் மேல் விரித்துக் கூறுதல் காண்க. இவை கூடிய பருவமுறை நிரம்பக் கூறுவன என்பார் ஒருமுடிபாக்கி உரைத்த நயமும் கண்டுகொள்க. (வி-ரை.) திங்கள்தோறும் செய்யும்.....நல்வினை - ஆண்டு நிறைவின் முன் மாதந்தோறும் செய்யப்படும் சடங்குகள். இவை மாதந்தோறும் பிறந்த நாளிற் (இரட்சா பந்தனம்) காப்பிடுதல் - முதல் மாதத்திற் றொட்டிலேற்றுதல், (உபநிட்கரமணம்,) ஏழாமாதத்தில் அன்னப்பிராசனம் முதலாயின என்பர். திருவளர் - மங்கலம் புரி - நல்வினை - வேத விதிகளுள் விதித்த இச்சடங்குகள் செல்வம், ஆயுள், வீரியம் முதலிய நற்பண்புகளை வளாக்கும் பயன் தருவன எனப்படுவன. நல்வினை - வேள்வி - அமுது அளித்தல் முதலிய சடங்குகள்; உற்றவர்களால் அப்போது அக்குழவியின் உலக நலங்களின் வளர்ச்சி கருதிச் செய்யப்பட்டனவாயினும், உண்மையில் இறுதியில் மங்கலங்களுக்கெல்லாம் மேலாகிய சிவ நன்மங்கலத்தைப் பிள்ளையாரது அருளினால் சாரச் செய்தன என்பது மங்கலம் புரி என்றதன் குறிப்பு. "தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்" (3015) என்பது காண்க.
ஆண்டெதிர் அணைந்து - மாதந்தோறும் செய்யும் சடங்குகள் நிரம்பிப் பிறந்த ஆண்டினை அடுத்த ஆண்டு கூடி.
தளர்நடை பயில - இப்பருவம் ஓராண்டு நிறைவில் நிகழ்வது; 1948 பார்க்க. பிள்ளைத் தமிழ்நூல்களுட் சிறப்பித்துக் கூறும் பருவங்களுள் முதலேழு பருவங்களும் இங்குப் பெறவைத்து இவ்வொரு பாட்டிற் கூறியமைத்த கவிநலம் கண்டுகொள்க. இவற்றி னியல்பெல்லாம் இருபாலார்க்கும் பொதுவாதலானும் இவை முன்னர் விரிக்கப்பட்டமையானும் இவ்வாறு சுருங்கச் சுட்டிக் கூறியமைத்தார். மேல்விளையும் மூன்று பருவங்கள் பெண்பாற்குச் சிறப்பாயுரியன வாதலின் மேல் விரித்துக் கூறுதல் காண்க. இவை கூடிய பருவமுறை நிரம்பக் கூறுவன என்பார் ஒருமுடிபாக்கி உரைத்த நயமும் கண்டுகொள்க.