தொழுதுபுறம் போந்தருளித் தொண்டர்குழாம் புடைசூழப் பழுதில்புகழ்த் திருமயிலைப் பதியிலமர்ந் தருளுநாள் முழுதுலகுந் தருமிறைவர் முதற்றானம் பலவிறைஞ்ச அழுதுலகை வாழ்வித்தா ரப்பதியின் மருங்ககல்வார்; | 1119 | (இ-ள்.) திருத்தொண்டர்....விடைகொள்ள - அங்குள்ளார்களாகிய திருத்தொண்டர்கள் விடைபெற்றுக்கொள்ள; சிவநேசர்.....கொடுத்து - சிவநேசரது வருத்தம் நீங்கும்படி அவருக்கு இனிய மொழிகளைச் சொல்லி விடைகொடுத்தருளி; நிருத்தர்....போய் - சிவபெருமான் எழுந்தருளிய பிற பதிகளையும் வணங்கிச் சென்று; நிறைகாதல்....அணைவுற்றார் - நிறைந்த காதலாகி விளைந்த அன்பினோடும் திருவான்மியூரினைப் பணிவதற்கு அணைவுற்றருளினர். (வி-ரை.) அமர்ந்தருளும் - விரும்பி வீற்றிருந்தருளும். உலகு முழுதும் தரும் - என்க. எல்லா வுலகும் படைத்தல் முதலிய எல்லா வகையாலும் புரக்கும்; தருதல் - புரத்தல் என்ற பொருளில் வந்தது; புரத்தலாவது படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூவகையாலும் காத்து அருள்புரிதல். முதற்றானம் - முன்மையுள்ள பதிகள். முதன்மையாவது முதல்வன் விளங்க வீற்றிருத்தல். உலகை அழுது வாழ்வித்தார் - தாம் அழுதமையால் உலகின் பொருட்டு ஞானம் பெற்று அதனால் உலகத்தை வாழ்வித்த பிள்ளையார் "வேதநெறி தழைத்தோங்க...அழுத " (1899) என்று தொடக்கத்துக் கூறிய கருத்து. "அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த" (திருப்புகழ்) மருங்கு - மருங்குனின்றும். ஐந்தன் உருபு விரிக்க.
|
|
|