| பிரிவினைதாயமைந்த சிறப்புடையது. இவ்வா றிரண்டியலின் அமைந்த திருப்பதிகம் இஃதொன்றேயாம். இவ்வியல்பினை இப்பதிகத்துக்குமேல் 22 பாட்டுக்களிற் பேருரை செய்தருளிய ஆசிரியர் பெருமானும் இவ்விருவகை யாப்பினா லமைத்தருளுவதும் காண்க. தெய்வத் தன்மையுடைய ஆசீரியர் பெருமானால் விதந்து உள்ளவண்ணம் மெய்ப்பொருண் முடிவு என்று பாராட்டப் பெற்றதோடு பேருரையும் விரித்துரைக்கப்பட்ட சிறப்புடையது. "திருப்பாசுரம்" என்ற தனிச் சிறப்புப்பெயர் பெற்ற திருப்பதிகம்; "பாசுரஞ் சொன்ன பத்தும்" (தேவாரம் - 12); "பாசுரம் பாட லுற்றார்"(2716); "மெய்ப்பாசுரத்தை" (2742). பரசமயங்கள் பாறவும் முதல்வனையறியும் தன்மையிற் சிவநெறி விளக்கமுமாகப் பரபக்கம் சுபக்கம் என்ற இருதன்மைமயில் விளங்குவது. (1) பரசமய நிராகரித்து (2) நீறு ஆக்கும் காதலனைப் பெற (1917) வரங்கிடந்து பெற்ற சிவபாதவிருதயரின் வரம் ஒருங்கே நிறைவேறிய சிறப்பு இத்திருப்பதிகத்துக்குரியது; இப்புராண முடிபில் "எங்களை வாழ முன்னா ளேடு வைகையினி லிட்டார்" (3128=1230) என்று தமது ஒப்புயர்வற்ற அருளாசி மொழியாலே அன்றுபோலவே என்றும் உயிர்களை வாழ்விக்கும் சிறப்புடையதென்று ஆசிரியர்பெருமானால் நினைவுகொண்டு பின்னரும் விதந்தெடுத்தோதப்பட்ட சிறப்புடையது. இதனை "மெய்ஞ்ஞானம்" என்று போற்றினார் அருணந்தி சிவாசாரியர். இன்னும் இவ்வாறு எண்ணுதற்குமரிய பற்பல சிறப்புக்களையும் கண்டுகொள்க. |
| பதிகக் பாட்டுக் குறிப்பு :- இத் திருப்பாட்டுக்களைத் தனித் தனி எடுத்துப் பொழிப்புரையும் கருத்துரையுமாக ஆசிரியர் உரைத்தருளிய 22 பாட்டுக்களும் மேல் உரை விரிக்கப்படுமாதலின் ஏனைப் பதிகங்களுக்குப்போல ஈண்டுடுப் பதிகக் குறிப்புத் தரப்படவில்லை. |
| [ "வாழ்க வந்தணர் ஆனினம் " ] |
2720 | "அந்தணர், தேவரா னினங்கள் வாழ்க" வென் றிந்தமெய்ப் மொழிப்பய னுலக மின்புறச் சந்தவேள் விகண்முதற் சங்க ரர்க்குமுன் வந்தவர்ச் சனைவழி பாடு மன்னவாம் ; | |
| 822 |
| (இ-ள்) அந்தணர்...பயன் - அந்தணர்களும் தேவர்களும் ஆனினங்களும் வாழ்க என்று கூறிய இந்த மெய்ம்மொழியின் பயனாவது; உலகம் இன்புற - உலகுயிர்கள் (துன்ப நீங்கி) இன்பமடையும் பொருட்டு; சந்த வேள்விகள் முதல் - சந்தத்துடன் கூடிய மந்திரங்களையுடைய சிவவேள்விகள் முதலாக; சங்கரர்க்கு - சிவபெருமானுக்கு; முன்வந்த....மன்னவாம் - முதன்மையாகச் சொல்லப்பட்ட அருச்சனைகளும் ஏனை வழிபாடுகளும் ஆகிய இவை நிலைபெறுதலாம். |
| 822 |
| [ "வீழ்க தண்புனல் ; வேந்தனும் ஓங்குக" ] |
2721 | வேள்வி நற்பயன் "வீழ்புன" லாவது நாளு மர்ச்சனை நல்லுறப் பாதலால்; ஆளு "மன்னனை வாழ்த்திய" தர்ச்சனை மூளு மற்றிவை காக்கு முறைமையால்; | |
| 823 |
| (இ-ள்) வேள்வி....புனலாவது - நல்வேள்விகளின் பயன் மழை தவிராது பெய்தலாம் என்றருளியது; நாளும்....உறுப்பாதலால் - அது நாடோறும் அருச்சனைக்கு நல்ல உறுப்பாதலால்; ஆளும் மன்னனை வாழ்த்திய - உலகாளும் வேந்தனை ஒங்குக. |