[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1011

  யர் - நமிநந்தியார் - திருநீலநக்கர் முதலியோரும், புகழ்த்துணையார் முதலியோருமாம். "மறை முனிவர் மூழ்குதலும்" (1958). "ஆதி மாமறை விதியினா லாறுசூழ் வேணி, நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி, தீது நீங்கநீர் செய்யவுந் திருக்கழு மலத்து, வேத வேதிய ரனைவருஞ் செய்யவும்" (2327); "கற்றாங் கெரியோம்பிக் கலியை வராாமே செற்றார்" (தேவா); "தில்லை யந்தணர்" (359) முதலியவற்றின் கருத்துக்கள் காண்க; இக்கருத்தினையே "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்" (குறள்) என்றருளினார் திருவள்ளுவரும். ஈண்டும் "உலகமின்புற" என்றது காண்க. இக்கருத்துக்களை மனங்கொள்ளாது அந்தணர் என்பதனை வெறும் இடுகுறியளவான சாதிப் பெயராகக் கொண்டு போருள்ஞானப் பிழம்பாகிய பிள்ளையார் பாலும் பிணங்கி அபசாரப்படும் மாக்களும் உண்டு; அஃது அவர்தம் ஊழின் வலி என்க.
  சங்கார்க்குமுன் வந்த - சங்கரர் - சுகத்தைச் செய்பவர் என்பது பொருள். உலகம் இன்புறச் செய்யும் வெள்விக்கும் வழிபாட்டுக்கும் முதல்வாய்க் கருதிய இன்பத்தைச் செய்யவல்லவர் அவரேயாம் என்பார் இப்பெயராற் கூறினார். முன் - முதன்மையாக.
  வேள்விகள் - சிவவேள்விகள்; சிறுதெய்வங்களைக் குறித்த வேள்விகளல்ல ; சங்கரர்க்கு என்ற குறிப்புமிது; இங்கு இவை சமணர்க்குமுடையதென்று கூறும் சமண்சார்ப்பு பற்றி வீழம் உரைகாரருமுண்டு; அஃது அபிமானம்பற்றிய வெற்றுரையென் றொழிக. சமணரை மறுக்கவந்த இவ்விடத்துப் பிள்ளையாரது மூலநூற் கருத்துக்கும் உரை அருளும் ஆசிரியர்பெருமான் கருத்துக்கும் ஒருசிறிதும் பொருந்தாது தத்தமக்கு வேண்டியவாறே யுரைப்பான்புகும் உரைகாரர்களை இகழ்ந்தொதுக்கு தலேயன்றி வேறு என்னென்று சொல்வது? சங்கரர்க்கு முன்வந்த வேள்விகளைச் சமணரும் செய்வர் என்பது இவர் கருத்தோ? என்று விடுக்க.
  ஆனினங்கள் - சண்டீசர் சரிதம் காண்க.
 

822

  2721. (வி-ரை) வேள்விநற்பயன் "வீழ்புனல்" ஆவது - "வீழ்க தண்புனல்" என்ற பதிகப்பகுதிக் கருத்து வேள்விகளின் நல்ல பயன் மழை - புனல் - வீழ்வது ஆம் என்க. வீழ்புனல் வேள்வி நற்பயனாவது என்று வாழ்த்தியது என்னை? எனில் புனல் நாளும் சிவனது அருச்சனையின் நல்ல அங்கமாதலால் என்க.
  நற்பயன் - வேள்விப் பயன் பலவாம். அவற்றுள் நல்லபயன் மழை பெய்தல் என்பார் நற்பயன் என்றார்; நல் - சிறப்புக் குறித்தது; ஏனைப் பயன்கள் நல்லவல்ல என்பதன்று. சங்கரர்க்குச் செய்யும் வேள்விகளின் பயன் எவையும் நல்லவையே ஆம், "தீது நீங்க" ( 2327); அவற்றுள்ளே சிறந்த பயன் என்பது.
  நல்லுறுப்பு - நற்பயன் என்றவாறு ஈண்டும் உறுப்புப் பலவற்றுள்ளும் சிறந்த உறுப்பாம் என்க; ஏனை அங்கங்களாவன - மலர் - புகை - ஒளி - அமுது - முதலாயின.
  புனல் அருச்சனை நல் உறுப்பு - என்றது சிவனது வழிபாட்டில் நீர் இன்றியமையாச் சிறப்புடையது என்றபடி; "புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு"(திருமந்திரம்); "பூவோடு நீர்சுமக்கும் நின்னடியார்" (பிள், தேவா); "தூயகாவிரியி னன்னீர் கொண்டிருக் கோதி யாட்டி" இட்டுக் கொள்வன பூவுள நீருள" (அரசு.தேவா); "அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்" (நம்பி - தேவா);" போதும் பெறாவிடிற் பச்சிலையுண்டு புனலுண் டெங்கும்" (11-ம் திருமறை - கழுமல மும். கேவை); "எங்கோமான் றனைவிடுவே னல்லேனென் றிராப்புக