| லுங், கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண் டருச்சிப்பார்" (புகழ்த்துணை - புரா - 2); "சிறப்பொடு பூசனை செல்லாது வானம், வறக்குமேல் வானோர்க்கு மீண்டு " (குறள்). |
| அருச்சனை - வழிபாட்டின் (திருவீழிமிழலை வரலாறும் ஏயர்கோனார் வரலாறும் காண்க.) திருமஞ்சனம் - இருக்கியம் - பாத்தியம் முதலியனவாகிய எல்லா அங்கங்களையும் குறிக்கும் பொதுமொழி. |
| நாளும் - சிவவழிபாடு ஒவ்வொரு நாளும் செய்தல்வேண்டும் - ஒவ்வொரு நாளிலும் உரியகாலங்களில் எல்லாம் செய்தல்வேண்டும். |
| வேள்வி நற்பயன் வீழ்புனல் ஆவது - மளை வேள்விகளின் பயனாகவே வீழ்வது என்ற உண்மை வேத சிவாகமங்களின் கருத்து. "மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும், விண்ணிற் புயல்காட்டும் வீழிம் மிழலையே" (பிள். தேவா. குறிஞ்சி - 5); "மங்குறோய் மாடச் சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சும், அங்கவை பொழிந்த நீரு மாகுதிப் புகைப்பா னாறும்" (836) முதலிய திருவாக்குக்களின் கருத்தும் தமிழ்ச்சுவையும் குறிப்பும் காண்க. |
| வேள்வியின் பயனாய் வருவது புனல் ஆகும்; அதுவே வேள்வியின் அங்கமுமாம் என்ற இரண்டும் குறித்தமை காண்க. |
| வீழ்க தண்புனல் - "வீழ்க" என்ற சொல் நன்மை தரும் அருள்ஆசியாய் வந்த சிறப்பு; மழையினைப்பற்றிய சிறப்புரிமையாம். |
| ஆளும் மன்னனை வாழ்த்தியது - "வேந்தனு மோங்குக" என்ற பதிகத்தின் பகுதியின் கருத்தும் காரணமும் என்னை? எனில் இது என்க. |
| மூளும் - முதலாகத் தொடர்ந்து வரும் - பெருகி வரும்; இவை - முன் பாட்டிற் கூறிய வேள்விகள் முதலிய வழிபாடுகளைக் காத்தலால் அவை காராணமாய் நிற்கும் மழையும். |
| காக்கும் முறைமையால் - காத்தற் கடமை பூண்டவன் அரசன் என்ற முறைமை குறிக்க; எறிபத்தநாயனார் புராணத்துள்ளும், புகழ்ச்சொழர் புராணத்தும் வருமாறு புகழ்ச்சோழர் இந்த அரச கடைமைய நிறைவேற்றிய வரலாற்றினையும், இடங்கழியார் சரித வரலாற்றினையும் ஈண்டுக் கருதுக; மனுநீதிச் சோழர் சரிதமும் காண்க. இறைவரது வழிபாடு காக்கும் வகையால் மழை பெய்யப்பெற்று உலகங் காத்தல் அரசர் கடன் என்பது "ஏத நன்னில மீரறு வேலி" (3) என்றும், "வையக முற்று மாமழை மறந்து வயலி னீரிலை மாநிலந் தருகோ, முய்யக் கொள்மமற் றெங்களை யென்ன வொளிகொள் வெண்முகி லாய்ப்பராந் தெங்கும், பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப், பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும், செய்கை" (தக்கேசி - திருப்புன்கூர் - 2) என்றும்வரும் ஆளுடையநம்பிகளது திருவாக்கானும், "இயல்வுளிக் கோலோச்ச மன்னவ னாட்ட, பெயலும் விளையுளுந் தொக்கு" என்றும், "முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி, யொல்லாது வானம் பெயல்" என்றும் (குறள்) உடன்பாட்டினும் எதிர்மறையினும்வைத்துக்கூறும் பொய்யாமொழியார் கூற்றானும், பிறவாற்றானும் உணரப்படும். "ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன் மறப்பர், காவலன் காவா னெனின்" (குறள்) என்றதும் இத்திருப்பாட்டின் முற் கூறிய கருத்துககளை வற்புறுத்தும்; "அந்தணர் நூற்கு மறத்துக்கு மாதியாய், நின்றது மன்னவன் கோல்", "தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம், வானம் வழங்கா தெனின்" என்ற திருக்குறட் பாக்களும், பின்னதனை எடுத்து "நேய புகழ்த் துணையார் நீராட்டுங் கைதளர்ந்துன், றூயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா" என்று |