[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1015

  அரன் என்றதனால் சங்கார காரணனாகிய முதல்வனே முதல்வன் என்ற பதியுண்மையும் இலக்கணமும், எல்லாம் சூழ்க - வையகமும் துயர் தீர்க என்றதனால் பசுக்களின் உண்மையும் இலக்கணமும்; தீயது-துயர் என்றதனால் பாசவுண்மையும் இலக்கணமும் கூறிய திறமும் என்றிவ்வாறு சிவாகம ஞானபாத முடிபுகள் எல்லாம் பொருந்தக் குறிப்பாலுணர்த்தியருளிய வகையினால் பொருளியல்புரைத்தலும் என்று இது மூவகை வாழ்த்தும் ஆதல் கண்டுகொள்க.
  எல்லாம் - சூழ்க; வையகமும் துயர் தீர்க - சூழ்க - தீர்க - "கயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள், இயலு மிடம்பா லெங்கு மென்ப" ஆதலின் மூவிடத்தினும் ஐம்பாலினுஞ் செல்வதாகிய இவ்வியங்கோள் பிள்ளையார் அருளிய அன்று நிகழ்காலத்திலே குறித்த அப்பயன் தந்ததுமன்றிப், பின்னர் எக்காலத்தும் சென்று அவ்வாறே அருட்பயன் தருவனவாம் என்று காட்டும் திறத்தால் ஆசீரியர் பின்னர், " எங்களை வாழ முன்னா ளேடுவை கையினி லிட்டார்" (புரா - 1230) என்று நினைவு கொள்ளக் கூறியருளுதலும் ஈண்டுக் கருதுக; மெய்த் திருவாக்காதலின் என்றும் எங்கும் ஒன்று போலவே பயன்றருமென்க.
  இறைவர்பால் உணர்வரிய மெய்ஞ்ஞானம் பெற்ற ஞானாசாரியர் அருளிய ஞான உபதேசத்துக்கு அவ்விறைவரது "மெய்ம்மொழி" பெற்ற ஆசிரியர் சேக்கிழார் பெருமானும் அவ்வாறே கயிலாய பரம்பரையில் வந்து உரைவகுத்தருளிய பெருமையும் தெய்வக் குறிப்பும் கண்டுகொள்க.
 

825

 
[" (1) அரிய காட்சிய ராய்த்; (2) தம தங்கைசேர்
எரியர்; (3)ஏறுகந் தேறுவர்; (4)கண்டழங்
கரியர். (5) காடுறை வாழ்க்கையர்...."]
2724
"அரிய காட்சிய" ரென்பதவ் வாதியைத்
"தெரிய லாநிலை யாற்" றெரி யாரென,
உரிய வன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்;
 

826

  (இ-ள்) அவ்வாதியை "அரிய காட்சியர்" என்பது ஆதி தெரியலா நிலையால் - முன்பாட்டில் அரன் என்று கூறிய அந் ஆதியைப் பாசஞான பசுஞானங்களால் தெரியப்படாத நிலைமையுடைமை காரணமாக அரிய காட்சியர் என்று சொல்வது ஆம்; தெரியார் என - அவ்வாறு பாச பசு ஞானங்களால் தெரியமாட்டாதவர் என்று அறிந்து, காண்பதற்கு உரிய அன்பின்றிறத்தாலே காணும் பக்குவமுடைய அடியவர்களுக்கு; உண்மையாம்....பேசினார் - காண உள்ளனவாகும் நல்ல அடையாளங்களை அதன்மேல் எரியர் - ஏறுவர் - கரியர்-வாழ்க்கையர் என்றிவ்வாறு எடுத்துக் கூறியருளினார்;
 

826

  [ஆயினும் பெரியர்]
2725
 "ஆயி னும்பெரி யா" ரவ ரென்பது
மேய விவ்வியல் பேயன்றி, விண்முதற்
பாய பூதங்கள் பல்லுயி ரண்டங்கள்
ஏயும் யாவு மிவர்வடி வென்றதாம்;
 

827

  (இ-ள்) அவர் "ஆயினும் பெரியார்" என்பது - அம்முதல்வர் முற்சொன்ன அடையாள நிலைகளையுடையவதாகக் காணப்படுபவராயினும் அக்காட்சியுள்ளே யடங்