1016திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  காத பெருமையுடையவர் என்று சொல்லப்படுமியல்பாவது; மேய இவ் இயல்பேயன்றி - மேற்கொண்டருளிய முன்சொன்ன "எரிய" ரா யிருத்தல் முதலாகிய இயல்புகளை யுடைமையே யல்லாமல்; விண்முதல்...என்றதாம் - விண்முதலாகப் பரந்த ஐம்பூதங்களும் பலவுயிர்களும் அண்டங்களும் இன்னும் உளவாகிய யாவையும் இவர் பெரு வடிவில் பொருந்துவன என்று கூறியபடியாம்
 

827

  [ஆரறிவார் அவர் பெற்றியே]
2726
பின்பு "மாரறி வாராவர் பெற்றியே"
யென்ப தியாருணர் வானுஞ்சென் றெட்டொணா
மன்பெ ருந்தன்மை யாரென வாழ்த்தினார்
அன்பு சூழ்சண்பை யாண்டகை யாரவர்.
 

828

  (இ-ள்) பின்பும்....என்பது - மேலும் அவர் பெற்றியே ஆர் அறிவார்? என்று கூறும் தன்மையாவது; யாருணர்வாலும்...தண்மையார் என - யாவருடைய உணர்வினாலும் சென்று எட்டுதற்கியலாத நிலைபெற்ற பெரிய தன்மையினையுடையவர் அவர் என்று; அன்பு....ஆண்டகையாரவர் - அன்பு சூழ்ந்த சண்பை ஆண்டகையராாகிய அப் பிள்ளையார்; வாழ்த்தினார் - வாழ்த்தியருளினர்.
 

828

  இம்மூன்று திருப்பாட்டுக்களானும் "அரிய காட்சியராய்" என்ற தொடங்கும் திருபாசுரத்தின் இரன்டாவது திருப்பாட்டுக்குப் பேருரை வகுத்தருளினார் ஆசிரியர் பெருமான்
  2724. (வி-ரை) அரிய...... என-" அரிய காட்சியராய்" என்ற பதிகப் பகுதியின் உரை விரித்தவாறு: காட்சிக்குரியர் என்னில் அதுபொரு ளென்னவரும்: "அறிபொரு ளசித்தாம்: அறியாத தின்றாம்" என்றாற்போலக் (போதம் - 6 சூ) காட்சிக்குரியராயின் அழிபொருளாம். எவ்வாற்றானும் காட்சிப்படாரெனின் பயனின்றாம். ஆதலின், இவ்விருவகையுமன்றி உள்பொருளாய்ப் பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிதாய்ப் பதிஞானமொன்றானே காணப்படுவதாய் உள்ளது அந்த முதல்வனதியல்பு என்பார் காட்சியரியர் என்னாது அரியகாட்சியர் என்றார். பாசஞானத்தாற் காணபடாமை காட்சி நான்கனுள் இந்திரியக் காட்சி, மானதக் காட்சி, தன்வேதனைக் காட்சி என்ற மூவகைக் காட்சியினா லறியமாட்டாமையும், "வேத சாத்திர மிருதி புராண கலைஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலாம், நாதமுடி வானவெலாம் பாசஞானம்" என்றதனால் வேத முதலிய சாத்திரங்களானும் காணப்படாமையுமாம். இந்திரியங்களும் மன முதலியவையும் மாயகாரியங்களாதலின் தமக்குக் கீழ்ப்பட்ட தத்துவப் பொருள்களைக் காட்டுதலின்றி மாயைக்கு அப்பாற்பட்ட இறைவனைக் காண்டற்குக் கருவியாகமாட்டா.
  இனி, இவ்வாற்றானன்றி, அறிவைத் தடைசெய்து நின்ற மலசத்திகளை இயம நியம முதலிய அட்டாங்க யோக சமாதியான் ஒருவாறு கெடுத்து ஓரிடத் தொருகாலத்திருந்தாங்கிருந்து மூவிடத்து முக்காலத்துப் பொருள்களையும் காண்கின்ற காட்சியாய் உயிரினோ டுணர்வு தெரிவது யோகக் காட்சி எனப்படும் நான்காவது காட்சியாம்; அதனாற் காண்பமெனின் இதனிலும் ஆன்மபோத முனைப்பு நிற்றலால் இத்தகைய காட்சிக்கும் அரியர் இறைவர் என்க.
  பின் என்னையோ இறைவன் காட்சிப்படும் நிலை? எனின், "ஊனக்கண் பாசமுண ராப் பதியை, ஞானச் கண்ணினிற் சிந்தை நாடி" (9 - சூ) என்ற சிவஞானபோதக்