[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1017

  கருத்தினைப் "பாசஞா னத்தாலும் பசுஞா னத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞா னத்தாலே, நேசமொடும் உள்ளத்தே நாடி" (1), " கண்டசிவன் றனைக்காட்டி யுயிருங் காட்டிக் கண்ணாகிக் கரணங்கள் காணாமல்நிற்பன், கொண்டரனை யுளத்திற்கண் டடிகூடிற் பாசம் கூடாது" (5): "உளத்தவன்றா னின்றகலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி" (7): "அருளின் வழிநின், றஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க மதியருக்க னணையரவம் போற்றோன்று மான்மாவி லரனே" (8) என்பனவாதி திறங்களால் (8 - சூத்) விரித்த சிவஞானசித்தியார்த் திருவிருத்தங்களும், "தொடர்வரும் அருளி னாலே தோன்றுமா காணாராயின் உடையவ னடிசேர்ஞான முணர்தலின் றணைத லின்றே" (79) என்ற சிவப்பிரகாசமும் ஈண்டுக் கருதத்தக்கன.
  ஈண்டுத் " திரியக் காண்டல், இரட்டுறக் காண்டல், தெளியக் காண்டல் எனக் காட்சி மூவகைப்படும். அவை மூன்றும் அதிபக்குவமுடையார்க்குக் கேட்டல் மாத்திரையானே ஒருங்கு நிகழும்: ஏனையோர்க்குச் சோபான முறையாற் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் மூன்றானும் முறையே நிகழ்வன ஆகலின் ஆன்மதரிசனத்தைப்பயக்கும் சிவரூபத்தின்பின் ஆனமசுத்தியைப் பயக்கும் சிவதரிசனம் ஒருதலையான் வேண்டப்படும்" என்றும், "பசுஞானத்தானும் பாசஞானத்தானும் அறியப்படாத முதல்வனை அம்முதல்வனது ஞானக்கண்ணானே தன்னறிவின்கண்ணே ஆராய்ந்தறிக: அப்பதிஞானத்தைப் பெறுமாறு யாங்ஙனமெனின், நிலமுதல் நாதமீறாகிய பாசக்கூட்டம் (காரியப் பிரபஞ்சம்) நின்றுழி நில்லாது பரந்து திரிதற்கண் அதிவேகமுடைய பேய்த்தேரி னியல்பிற்றாய்க் கழிவதென்றறிந்து நீங்கவே, அப் பதிஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். அங்ஙனம் விளங்கிய ஞானத்தான் ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு அப்பொருள் பயக்குந்த திருவஞ்செழுத்து அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும் " என்றும்வரும் (9 - சூ) மாபாடியமும் கருதுக.
  இனி, இக்காட்சி யருமையாதலன்றி எளிமையாதற்கு "ஏகனாகி யிரைபணி நிற்ற"லும் (10) (அரன்) "காண வுள்ளத்தைக் கண்டு காட்டலும்" (11 - சூ) வேண்டப்படு மென்பது ஞான சாத்திரம். மேலும் இவ்வியல்பெல்லாம் சிவாகம முதலிய ஞானசாத்திரங்களால் அனுபவமுள்ள தேசிகர்பால் அடுத்துக் கேட்டுணரத்தக்கன.
  அவ் ஆதியை - அகரச் சுட்டு. முன்பாட்டில் "அரன்" என்று குறிக்கப்பட்ட அந்த என முன்னறிசுட்டு. அரன் - சங்காரகாரணன். அவனே ஆதி என்பது "அந்த மாதி" "சங்கர காரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம்" என்று சிவஞானபோத முதற்சூத்திரத்துள் நாட்டப்பட்டது காண்க.
  தெரியலா நிலையால் தெரியார் - தெரியலா நிலை - தெரிவிக்க மாட்டாத நிலைகள். இவை பிரம விட்டுணுக்கள் தெரியப்புக்க பசுபோத முற்பட்ட நிலைகளும், புத்தர், சமணர் முதலிய புறச்சமயத்தோர் காணமுயலு நிலைகளும், அத்தகைய பிறவுமாம். தெரியார் - தெரியப் படாதவர் எனச் செயப்பாட்டு வினையாகக் கொள்க.
  என - என்று அறிந்தவர்களாகி.
  உரிய அன்பினிற் காண்பவர்க்கு - நால்வகையுள் தீவிரதர சத்திநிபாதமும் மலபரிபாகமும் அடைதற்குரிய அன்பு முதிர்ந்து காணும் அடியவர்களுக்கு, அன்பினில் - அன்பினாலே - அன்பு துணையாக; நான் காண்கின்றேன் என்பதின்றி அவன் காட்டுகின்றான் என்ற அன்புநிலை காரணமாக; "ஆர்வமுன் பெருக வாரா அன்பினிற் கண்டு கொண்டே" (777) என்ற நிலை; அன்பினுள்ளே அரனை வெளிப்படக் காண