| முத்த சித்துருவராகிய சிவபெருமானையே எவ்வகை மொழிகளாலும் செல்லப் படாது என்று; அந்தண்...அருளினார் - அழகிய குளிர்ந்த பூந்தராய்த் தலைவராகிய பிள்ளையார் அருளிச்செய்தனர். |
| 832 |
| 2727 முதல் 2730 வரை இந்நான்கு திருப்பாட்டுக்களானும் "வெந்த சாம்பல்" என்ற மூன்றாவது திருப்பாட்டின் உரையினை விரித்தருளினார். |
| 2727. (வி-ரை) "வெந்த சாம்பல் விரை எனப் பூசியே" என்பது பதிகப் பகுதி. இதனாற் சிவபெருமான், மாசங்காரத்தினிறுதியில் நீறாய்க் கிடந்த உலகத்தைத் தமது திருமேனியிற் றாங்கிநின்ற தன்மை பேசப்பட்டது. வெந்த சாம்பல் - வெந்ததனால் பெற்ற நீறு, ஆறு சென்ற வியர் என்புழிப்போல; வெந்த என்பது காரணப் பொருளில் வந்தது. |
| விரை - கலவைச் சாந்து; "சுண்ணவெண் சந்தனக் சாந்து" (தேவா) "சாந்தமுந் திருநீறு" (திருவிசை). சிவதருமம் பல; அவற்றுள்ளே சிறந்தது பூசனையாம்; அப்பூசனையினுட் செய்யப்படும் உபசாரங்களுட சிறந்தன ஐந்து அங்கங்கள். அவையாவன: அபிடேகம், விரை, விளக்கு, அருச்சனை, நிவேதனம் என்பன; அவற்றுள் விரையாவது இலேபனமும் சுகந்தமுமென்று இருவகைப்படும்; அவற்றுள் இலேபனமாவது பனிநீரும் பச்சைக்கர்ப்புரமுங் குங்குமப்பூவுங் கோரோசனையும் புழுகுங் கத்தூரியுங் கலந்த மலாக்காச் சந்தனத்தைத் திருமேனி முழுவதுஞ் செறிவாகச் சாத்துதலாம்; சுகந்தமாவது முல்லை, இருவாட்சி, பிச்சி(சாதி), மல்லிகை, பனிநீர், மருக்கொழுந்து, வெட்டிவேர் என்னும் ஏழினையுந் தொடுத்துத் திருவுருத் தெரியாவண்ணம் அலங்கரித்தலாம் எனவரும் ஆகமவிதிகள் ஈண்டுக் கருதத்தக்கன. |
| "சிவதருமம் பல; வவற்றுட் சிறந்ததுபூ சனை;யதனுள் அவமில்பல வுபசாரத் தைந்துசிறந் தனவவற்றைத் தவமலியப் பதினாறு மண்டலந்தண் டாதியற்றிற் கவலையறப் பயனிம்மைப் பிறப்பிடையே கைகூடும்" | |
| (28) |
| "ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத் தாங்குமருச் சனைநிவே தனமாகும்....." | |
| (29) |
| "....விரையிரண்டாந் தளராத விலேபனமுந் தயங்குசுகந் தமுமென்ன" | |
| (33) |
| "காசில்பனி நீர்பச்சை கருப்பூரங் குங்குமப்பூ மாசறுரோ சனைபுழுகு மான்மதநா வியுங்கலந்த வாசிகந்த மலாக்காச்சந் தனமிலே பனமதனைத் தேசவிருந் திருமேனி முழு துஞ்செறி தரக்கொட்டல்" | |
| (34) |
| எனவரும் பேரூர்ப்புராணம்(மருதவரைப் படலம்) காண்க. |
| விரை எனப் பூசியே - பூசியே என்பது உபசாரம். மாசங்காரத்துள் இறைவரை ஒழித்தொழிந்த எல்லாமும் நீறாக; அந்நீறு தங்குதற்கு வேறு இடமின்மையின் ஆண்டு அழியாது நிற்கும் இறைவர் திருமேனிமேற் கிடத்தலே பூசுதலென் றுபசரித்துக் கூறப்படும். |
| தமது அந்தம் இல் ஒளி - தமக்கு அழிவில்லாமையால் தமது சிவவொளி அந்தமில் ஒளி எனப்பட்டது. தாம் எல்லாவற்றுக்கும் அந்தத்தைச் செய்யத் தமக்கு அந்தஞ் செய்ய வேறொருவருமில்லாதவர். "அந்தமாதி"(போதம் - 1). |