1030 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| உபதேச முகத்தான் உணர்த்தி யாட்கொண்டருளுவர். ஆதலின் இது சாதாரமெனப் படும். இனிச் சகலருள்ளும் இவ்வாறு ஆட்கொள்ளத் தாங்கும் குருவடிவம் அவ்வவர் தன்மைக்கேற்பப் பலதிறப்படும் என்பதை இப்புராணத்தினுள்ளும் ஞானசாத்திரத்துள்ளும் வைத்துக் கண்டு கொள்க. "மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ் ஞானகர்க், கஞ்ஞான வச்சகலர்க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம், பின்னுணர்த்து மன்றிப் பிரளயாகலருக்கு, முன்னுணர்த்துந் தான்குருவாய் முன்"(போதம் - 8 - 2) முதலியவை காண்க. இப்பாட்டு இக்கருத்துக்களை உட்கொண்டு விளங்கநிற்றலும் காண்க. எல்லா உயிர்கட்கும் ஒன்றுபோலவே அருளாமை காரணமாகப் பிணங்கும் மாக்கள் இவ்வுண்மை உணர்வாராக. | | 833 | | 2732. (வி-ரை) இத்திருப்பாட்டுக் "கோட்பாலனவும் விளையுங் குறுகாமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார்" என்ற பதிகப்பகுதியை விளக்கிக் கருத்துரைத்தது. | | அன்ன ஆதலின் - அன்ன - அகரவீற்றுப் பலவறிசொல். உண்மை நிலைகளாகிய வண்ணமும் மாட்சிமையுமாகிய அவைகள் அத்தன்மையை உடையன. அகரம் முன் சொன்ன அந்த என முன்னறி சுட்டு. வண்ணமும் மாட்சிமையும் என்றிவை முன்பாட்டிலிருந்து வருவித்துக்கொள்க. | | ஆதியார் தாள் அடைந்து இன்ன கேட்கவே - தாள் அடைந்து கேட்டலாவது திருவடி ஞானத்தால் உணரலுறுதல்; அதனியல்பாவது:--"ஐயா! வழியடியோம்; வாழ்ந்தோங் காண்; .....மடந்தை மணவாளா! - நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோம்; எய்யாமற் காப்பாயெமை"(திருவா. திருவெம்பாவை) என்றவாறு இறைவரது திருவருளை வழுத்தி நின்று "முதல்வரே! அடியேன் அறிவில்லாதேன்; தேவரீரது அருளினால் அடியேனை ஆட்கொண்டருளும் வகையினையும் உடைந்துய்யும் நெறியினையும் உணர வருளிச் செய்யும்" என்று கேட்கவே என்க; அடியார்களைப் பாடுக என்று திருவாரூர்ப் பெருமான் ஆளுடைய நம்பிகளை ஆணையிட்டருளியபோது, "இன்னவா றின்னபண் பென் றேத்துகே னதற்கி யானார்?; பன்னுபா மாலையாடும் பரிசெனக் கருள்செய் யென்ன", அதற்கு, இறைவர் "அல்லறீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கலால், தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேனென், றெல்லையில்வண் புகழாரை யெடுத் திசைப்பா மொழி" யென்றார் (344 - 355) என்றும்; அவ்வாறே திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளும்படி அநபாயச் சோழர் கேட்க அதற் குடன்பட்டுச் சென்ற ஆசிரியர் சேக்கிழார் பெருமான். தில்லையம்பலவாணர் திருமுன்பு பணிந்து கைத்தல முச்சிவைத் துளமுருகி நைந்துநின்று "அடிகளே! உனதடியர்சீ ரடியனே னுரைத்திட வடியெடுத் திடர்கெடத் தருவாயெனத் திருவருளை யெண்ணி யிறைஞ்சிக்" கேட்கவே, "திருவருளினா லசரீரிவாக் குலகெலா மெனவடி யெடுத்துரைசெய்த பேரொலி யிலகுசீ ரடியார் செவிப்புலித் தெங்குமாகி நிறைந்ததால்" (திருத்தொண்டர் புராண வரலாறு - 20-21) என்றும் வரும் வரலாறுகள் இங்குச் சிந்திக்கத் தக்கன; அவ்வாறு கேட்கவே " ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் (அருளிய) ஆதிமாண்பும்" நம்பிகளும் ஆசிரியர் பெருமானும் உணரப்பெற்றருளினர் என்ற உண்மைகளும் காண்க; இவற்றுக்க அகச்சான்றாக "ஆரூர னாரூரி லம்மானுக் காளே", "அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பார்" என்றும், "வெருளின் மெ்ய்ம்மொழி வானிழல்கூறிய பொருள்" என்றும் வரும் திருவாக்குக்களும் இக்கருத்தை ஆசரிக்கை மரபில் வலியுறுத்தி விளக்குதல் காண்க. |
|
|
|
|