1040திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  ஒன்று நெடுங்காலம் நிற்றலும் ஒன்று சிறிதுகால நிற்றலுமாகிய நிலை வேறுபாடுள்ளமையின் இந்நிலை வேறுபாடு இதற்கேதுவாகிய வினை வேறுபாட்டானாயிற்று.....அவ்விருவேறு வினையும் முதல்வனாணையானன்றி வாராமையான் நிலைத் தொழிலும் முதல்வனாற் செய்யப்படும் காரியமாதல் அறிக. இன்னும், தண்ணீர்க்குடம் நிலைபெறுதல் தாங்கிச் செல்வோனது முயற்சியின்றி அமையாதவாறுபோலத் தோன்றிய பிரபஞ்சம் ஒடங்குங்காறும் நிலைபெறச் செய்வதும் ஆகிய முதல்வனது ஆணையாகிய சங்கற்பமேயாம்.
  மறைப்பாவது, குடங்கையில் ஏந்திய தீயின் சூட்டினை நிகழவொட்டாது தனக்கு மாறாகிய மந்திரமுச்சரிக்குங்காறுந் தடுத்து நிற்குங் குளிகைபோல, முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் அவனது பெருங்கருணை உயிர்கள் மாட்டு ஒருங்கே நிழாதவண்ணம் தடுத்து நிற்கும் அவ்வம் மலசத்தியின் வழி நின்று அவற்றை நடாத்துவதாகிய அவனது சங்கற்பமேயாம். "பந்தமுமாய் வீடுமாயினாருக்கு" என்புழிப் பந்தம் என்றதும் அது.
  இனிச் சூக்கும ஐந்தொழிலாவன, சங்கரித்த பின்னர் மேற்செய்யக்கடவனவாகிய தூல ஐந்தொழிற்கு யோக்கியமாம்படி கேவலத்தின்கண் நிகழ்த்துவனவாம். அதிசூக்கும மாகிய தோற்ற முதலியன ஐந்தும் அவ்வவ் விடய நுகர்ச்சிதோறும் கணந்தோறு நிகழ்தல் கண்டு கொள்க" (மாபாடியம் - 2 - சூ - 1-அ).
  "ஊன நடன மொருபா லொருபால ஞானநடந் தானடுவே நாடு" (திருவருட்பயன்) என்றருளிய திருநடனமிரண்டனுள் இங்குக் கூறியது ஒன்று. "மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத், தானந்த மாநடத்தே தங்கியிடு - மானந்தம், மொண்டருந்தி நின்றாடல் காணுமருண் மூர்த்தியாக், கொண்டதிரு வம்பலத்தான் கூத்து" (உண்மை விளக்கம் - 37); "எங்குந் திருநட்டம்"; "சிற்பரஞ் சோதிச் சிவானந்தக் கூத்தனைச், சொற்பதமா மந்தச் சுந்தரக் கூத்தனைப், பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை, யற்புதக் கூத்தனை யாரறி வாறே" (திருமூலர் திருமந்திரம் - 9 தந் - திருக்கூத்துத் தரிசனம்); "அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி" (489); "நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே" (பிள். தேவா - ஆலவாய் - கௌசிகம் - 6) என்பனவாதி திருவாக்குக்களான் அறியப்படுகின்றபடி ஞானிகளுக்கு அருண்ஞானக் கண்ணாலே கண்டு திளைக்கும்படி கொடுத்து நிற்கும் ஞானநடனமாகிய அருட்கூத்து மற்றொரு வகையாம்.
  "காத்தும் படைத்தும் கரத்தும் விளையாடி" எனவும், "ஐயா நீ யாட்கொண்டருளும் விளையாட்டி, னுய்வார்க ளுய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்" எனவும் வரும் திருவாசகத் திருவாக்குக்கள் இப்பாசுரக் கருத்தை விளக்கி நிற்றலும் காண்க.
  இனி (2) அருங்கூற்றம் உதைத்து என்ற செயலும் உயிர்களின்மேல் வைத்த அருளால் ஆயது. மார்க்கண்டர்க்காகக் கூற்றுவனை உதைத்து உருட்டிப் பின் உயிரும் கொடுத்த சரிதம் எல்லாப் புராணங்களாலும் விளக்கமா யறியப்படுவதாம். "மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டையுன்னிப், பார்க்கிலன்பர்க் கென்ன பயங்காண் பராபரமே" (தாயுமானார்); கால பாராயணக் குறுந்தொகையுள் அரசுகள் இயமன் றூதுவ ரைத் "தமர் நிற்கிலுஞ், சுருக்கெனா தங்குப் பேர்மின்கண் மற்றுநீர், சுருக்கெனிற்சுட ரான்கழல் சூடுமே" என ஆணையிட்டமையும் காண்க.
  இனி (3) வேதம் பாடும் எனவும் - வேதாகமங்களை இறைவர் புனருற்பவமாகிய சிருட்டியில் அருளிச்செய்து உலகுயிர்கள் அறிந்து அவ்வழியொழுகி உய்யும் பொருட்டுப்