[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1041

  பாடுகின்றார் என்பது ஆன்றோர் நூற்றுணிபு. "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (அரசு. தேவா); "வேத முகந்திசை தோண்மிகு பன்மொழி கீதம்" (பொன் - அந் - 19); "ஓவா வோசை முழுதுநின் வாய்மொழி" (திருஒற்றியூர் ஒருபாவொருபஃது - 2); "ஒப்பிலா மணிவாய் வேதம், பல்லிடை யெழுத்து நாவிற் பரமவா கமத்தின் பேதம், நல்லிதழ் மனுவின் விஞ்சை" (கந்தபுராணம் - சூரன் வதை - 426).
  உலகக் கிவைசெய்த தீசர் கூடுங் கருணைத்திறம் - உலகம் கண்டு சிந்தித்து உணர்ந்து உய்யும் பொருட்டு ஐந்தொழிற் கூத்து ஆடுதலானும், மார்க்கண்டர்க்காகக் கூற்றனை உதைத்தது அவர்பொருட்டேயன்றி உலகோர் அதன் உண்மை உணர்ந்து தம்மை வந்தடைந்து சாவாமையும் பிறவாமையும் பெற்றுய்தற் பொருட்டாதலானும், வேதம் பாடுதல் உலகோர் விதிவிலக்குகளை அறிந்தொழுகவும் சிவநெறி நின்று உய்யவும் ஆதலானும் இவை உலகுக்குச் செய்தது கருணைத் திறம் என்றார்.
  பெருங்கருணைத் திறமாவது - "முதல்வ னாவான் முற்றுணர் வுடைமையின் உலகத்துயிர்கள் படுந் துன்பமுழுவதும் உணர்ந்தோனாயும்; பேராற்றலுடைமையான், உயிர்களை யெல்லாம் ஒருங்கே வீடு பேறடைவிக்க வல்லனாயும்; சிவன் சங்கரன் முதலிய பெயர்களானு மறியப்படுவதாய், விருப்பு - வெறுப்பின்றி, எல்லாவுயிர்கண்மாட்டும் ஒப்பநிகழ்வதாய்த், தொடர்புபற்றாது, பிறர்துன்பங் கண்டுழி அதனை அக்கணமே நீக்குதற்கு விளையும் மனவெழுச்சியாகிய பெருங்கருணை யுடைமையான், அவற்றை ஒருங்கே வீடு பேறடைவித்தற்கண் ஒருப்பாடு மிக்குடையனாயும் உள்ளான் என முதல்வன திலக்கணம் பேசப்படும். அங்ஙனமாகவும் உயிர்கள் யாவும் ஒருங்கே வீடுபேறடையாமற் றடுத்து நிற்பன உயிர்க் குற்றமாகிய மலசத்திகள் ஆதலின் உயிர்கள் முதல்வனைச் சிறப்பியல்பான் உணரும் மெய்யுணர்வு தோன்றுங்காறும் முதல்வன் தனது சங்கற்பத்தான் அவ்வம் மலசத்தியின் வழிநின்று அவற்றை நடாத்துதலும் மறைப்பு எனப்படும் அவனது கருணைத்திறமாதல் காண்க.
 

839

  திருப்பாசுர திருப்பதிகம் முன்னைந்து திருப்பாட்டுக்களான் முப்பொருளுண்மையும், இலக்கணமும், சாதனமும், பயனுமாக வரும் வேத சிவாகமங்களின் முடிபுகளை எடுத்துக் காட்டியருளியபடி, பின்னைந்து திருப்பாட்டுக்களான் அவ்வுண்மைகளை மாபுராணங்களின் உதாரணங்களால் எடுத்துக்காட்டியருளுகின்றார்; இவை பொதுவியல்பு - சிறப்பியல்புகளாக ஒருவாற்றான் வகுத்துரைக்க நின்றன என்ற நிலையினை, முன்னைந்து பாட்டுக்களுக்கு உரைவிரித்த நிலையும் யாப்பும் ஒரு வகையானும், பின்னைந்து பாட்டுக்களுக்கு உரைநிலையிட்டமை வேறு வகையும் சந்தமுமாகிய வகையானும் ஆசிரியர் காட்டியருளிய தெய்வக் கவிநலம் காண்க. முற்பகுதிபோலன்றிப் பின்னைந்து திருப்பாசுரப் பாட்டுக்களுக்கு ஓரோர் திருப்பாட்டால் கருத்துரைத்துச் செல்லும் நிலையும் கண்டுகொள்க. முதனூலாகிய திருப்பாசுரத்தைப் பிள்ளையார் இருவகை விருத்த யாப்பினால் யாத்தருளிய நிலையும், ஆசிரியரும் அவவாறே அவ்விருவகை விருத்தங்களாற் பொருள் விரித்த நிலையும் இக்குறிப்புத் தருவன.
  [ "கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ண மறிவார்சொலக் கேட்டு மன்றே."]