[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1051

 

கொண்டு இப்பாட்டினை முன்பின் பாட்டுக்களாகிய ஐஞ்சீர்க் கலிநிலைத் துறையாயன்றி வேறு - அறுசீர்விருத்தம் - ஆக்கி உரைப்பன சில பதிப்புகள்; அப்பாடம் சொற்பொருள் யாப்புப் பொருத்ததங்களின்மையாலும், பிறவாற்றாலும் சிறவாமை கண்டு கொள்க.

 

844

  ["நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்த னல்ல
எல்லார்க ளும் பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார்க ளும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே" - 12]
2743
வெறியார் பொழிற்சண்பையர் வேந்தர்மெய்ப் பாசு ரத்தைக்
குறியே றியவெல்லை யறிந்துகும் பிட்டே னல்லேன்
சிறியே னறிவுக்கவர் தந்திருப் பாதந் தந்த
நெறியே சிறிதியா னறிநீர்மைகும் பிட்டே னன்பால்.
 

845

  (இ-ள்) வெறியார்.....பாசுரத்தை - மணங் கமழ்கின்ற சோலைசூழ்ந்த சீகாழி மன்னவராகிய பிள்ளையார் அருளிய மெய்ப்பொருள் விரித்த திருப்பாசுரத்தை; குறி ஏறிய.....அல்லேன் - அதன் அருட்குறிப்புச் செல்லும் அளவு அறிந்து போற்றினேனல்லேன்; (ஆயின் இதுகாறும் போற்றி உரைத்தவாறு என்னை? எனில்) சிறியேன்....அறிநீர்மை - சிறியவனாகிய எனது சிற்றறிவுக்கு அவர் தமது திருவடிகள் உணர்த்தியருளிய வழியே நின்று சிறிய அளவில் நான் அறிந்த தன்மை பற்றுக்கோடாகக் கொண்டு: அன்பால் கும்பிட்டேன் - (அறிவு காரணமாக அன்றி) அதன்பால் வைத்த அன்புகாரணமாகக் கும்பிட்டேத்தினேன்.
  (வி-ரை) திருப்பாசுரப் பதிகத்தின் திருக்கடைக்காப்புப், பதிகத்தினை முடித்துக் காட்டிப்பயனும் அருள்வதுபோல அதனைச் சுட்டி எழுந்த இத்திருப்பாட்டும் ஆசிரியர் அத்திருப்பதிகத்திற்கு வகுத்த பேருரைக்குத் திருக்கடைக்காப்பாக நின்று அதனை முடித்துக்காட்டி அதன் தாற்பரியமும் பயனும் அருளியவாறு கண்டு கொள்க.
  வெறி - மணம். வெறியார் பொழில் - பொழிலின் மலர்கள் தாம் இருந்த பொழிலின் இடத்தின்கண் ணிருந்தபடியே மணம் எல்லாத் திக்குக்களினும் பரவச்செய்தல் போலப் பிள்ளையார் பதிகமும் சிவமணத்தை எங்கும் பரப்புவன என்பது குறிப்பு. வெறியேர் - என்பது பாடமாயின் வெறியும் அழகும் உடைய என்க.
  குறி ஏறிய எல்லை - பிள்ளையாரது திருவுள்ளத்துட் கொண்ட குறிப்புச் சென்று பரவிநிற்கும் அளவாகிய எல்லாம். குறி - குறிப்பு; குறிக்கோள்; "உண்மைநின்ற பெருகுநிலைக் குறியாளர்" (தாண் - செங்காட்டங்குடி).
  சிறியேன்...நெறியே - சிறியேன் - நெறி - யானும் சிறுமை யுடையேன், எனது அறிவும் சிறிது; ஆதலின் பிள்ளையாரின் அருளுள்ளக் குறிப்புச் செல்லும் அளவு என் அறிவுசென் றெட்டாது. நெறி - அளவு.
  அவர்தந் திருப்பாதம் தந்த நெறியே - சிறிது யான் - அறிநீர்மை - என சிறிய அறிவுதானும் தானே விளங்கிக் கொள்ளமாட்டாது அவரது திருவடிப் பற்றாகிய ஞானத்தால் என் அறிவுக்கேற்றபடி அறிந்த அளவு. திருவடி, முழுதும் உணர்த்துமாற்றலும் கருணையும் உடையதாயினும் என் அறிவாகிய கொள்கலம் சிறிதாதலின் அது கொள்ளும் சிறிய அளவுக்கேற்றபடி என்பார் சிறிது யான் அறிநீர்மை என்றார்.