| "நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில், அலைப்பட்ட வார்வமுதற் குற்றம் போலாயினார்"(634) என்றும், "நிலவியவிரு வினைவலையிடை நிலைசுழல்பவர் நெறிசேர், புலனுறுமன னிடைதடைசெய்த பொறிகளினள வுளவே"(734) என்றும் முன்கூறிய உவமைகளையும் ஆண்டுரைத்தன வற்றையும் காண்க. ஈண்டுக் கூறும் பொருட் கருத்தினை அவ்வுவமைகள் விளக்குவனவாம் என்பதும் கண்டுகொள்க. |
| இதுவே பொருள் என்க. பிரிநிலை ஏகாரம் தொக்கது. "நீடுமெய்ப் பொருளின் உண்மை நிலைபெறும் தன்மை எல்லாம்" எழுதுக என்று(2694) அமணர் கேட்டனராதலின் அந்த மெய்ப்பொருள், முப்பொருள் நிச்சயமாம் சிவஞானமாகிய அழியாத மெய்ப்பொருள் என்றலுமாம். |
| பொருள் என்று காட்டிப் போகும் - என்று கூட்டுக. சமணர் ஒட்டிய வகையால் எதிர்ந்து ஏகுதலினால் காட்டிற்று. பிள்ளையார் ஈண்டு உபதேசமுகத்தால் திருப்பாசுரம் இதுபொருள் என்று கூறியருளியபடி அப்பாசுரம் வரைந்த ஏடும் மெய்ப்பொருள் காட்டிற்று என்ற நயமும் காண்க. |
| திருவுடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு - பொருள்காட்டிப் போகும் பிள்ளையார் திருவுடையாராதலின் அவர் மெய்ப்பொருள் காட்டுதல் தகும்; "பெம்மானிவனன்றே" என்று சிவஞானம் ஊட்டப்பெற்ற அன்றே பொருள் காட்டினாராதலின் அஃதவர்க் கியல்பாம்; அவர் தம் திருக்கையால் இட்ட ஏடும் காட்டிச் செல்லும்; அவர் திருக்கையால் இடப்பெறுதலின் என்ற குறிப்பும் நயமும் காண்க. பொருள் - "எம்பிரான் சிவனே எல்லாப் பொருள்களும் என்று"(2745) இதனைத் தொடர்ந்து வரும்பாட்டில் விரித்துத் திருப்பாசுரப் பதிகக் கருத்துக் கூறுதல் காண்க. |
| இருநிலத்தோர்கட் கெல்லாம் காட்டி - எல்லா நிலத்தோர்கட்கும் என்றலுமாம் விண்மண் முதலிய எல்லாப் புவனத்தோர்க்கும்; முற்றும்மை தொக்கது. எல்லாம் என்றதனால் அன்று கண்டாரேயன்றி இனி எதிர்காலத்து வருபவர்க்கு எல்லாம் என்றதுமாம்; எல்லாம் இதுபொருள் என்று கூட்டி உரைப்பினும் ஆம். மேல்வரும் பாட்டுப் பார்க்க. |
| எதிர்த்து நீர் - என்பதும் பாடம். |
| 846 |
2745 | "எம்பிரான் சிவனே யெல்லாப் பொருளு"மென் றெழுது மேட்டிற் றம்பிரா னருளால் வேந்தன் றன்னைமுன் னோங்கப் பாட அம்புய மலராண் மார்ப னனபாய னென்னுஞ் சீர்த்திச் செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூ னிமிர்ந்த தன்றே. | |
| (இ-ள்) எம்பிரான்....ஏட்டில் - எமது பெருமானாகிய சிவனே முழுமுதற்பொருள் ஆவான் என்று எழுதும் அந்த ஏட்டிலே; தம்பிரான்....பாட - தமது பெருமானது அருளாலே "வேந்தனு மோங்குக" என்று அரசனை ஓங்கும்படி பாடியருளி யமையாலே; அம்புயமலராள்...என்ன - இலக்குமியை மார்பில் உடைய அனபாயன் என்னும் பெயருடைய சிறப்புப் பொருந்திய சோழ அரசனது செங்கோலினைப்போல்; தென்னன் கூன் நிமிர்ந்தது - பாண்டியனது கூனும் அப்பொழுதே நிமிர்ந்தது. |
| (வி-ரை) எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று - இது சிவபெருமானது முழுமுதற் றன்மை குறித்தது; சட சித்தாகிய எல்லாப் பொருள்களுள்ளும் நிறைந்த சர்வவியாபி என்னும் எங்குநிறைவாம் தன்மை குறித்ததென்றலுமாம். "எப் |