[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1059

 
சிலையுடை யவர்தாள் போற்றி மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞான முண்டவர் தம்பால் வந்தார்
 

851

 

(இ-ள்) தலைமிசை வைத்துக் கொண்டு - எடுத்த அவ்வேட்டினைத் தமது தலையின் மேல் வைத்து ஏற்றுக் கொண்டு; தாங்கரும்...ஏறி - தாங்குதற்கரிய மிக்க மகிழ்ச்சி மேன்மேல் அதிகரிக்க அலைகளையுடைய நீர் நிறைந்த அவ்வாற்றின் கரையில் ஏறி; மீண்டு...வந்தார் - மீண்டு போய் மதுரையினைச் சேர்பவராகிப் பார்வதியம்மையார் குழைத்தூட்டிய சிவஞானவமுத்தினை உண்டருளி யவராகிய பிள்ளையார்பால் வந்து அணைந்தனர்.

  (வி-ரை) தலைமிசை வைத்துக்கொண்டு - ஞானப் பெரும் பொருளாதலின் அதனைத் தமது உடலில் சிறந்த அங்கமாகிய தலையின்மேல் வைத்தனர்; கொண்டு - மேற்கொண்டு தாங்கி.
  கரை - வடகரை. அங்கு...சிலையுடையவர் - அங்குத் திருக்கோயில்கொண்டெழுந்தருளிய சிவபெருமான். மேருச் சிலையுடையவர் என்பது புரமெரித்தமைபோல இங்குப் பெறப்பட்ட ஞானவெற்றியின் முதல்வர் என்ற குறிப்பு.
  அணைவார் - அணைவாராகி; மீண்டு - மதுரைக்குத் திரும்பி.
  தெய்வ....உண்டவர் - ஈண்டும் அமணரை வென்ற ஞானவெற்றிக் குறிப்புப்பட இவ்வாறு ஞானமுண்டார் எனக் கூறினார். தெய்வ - ஞானம் - என்க; சிவஞானம்.
  ஞானமுண்டவர் தம்பால் - பிள்ளையார் எழுந்தருளியிருந்த வைகையாற்றின் கரையின்கண்.
 

851

2750
மற்றவர் பிள்ளை யார்த மலரடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலா யுள்ளோர் காணமுன் கொணர்ந்த வேடு
பற்றிய கையி லேந்திப் பண்பினா லியார்க்குங் காட்ட
அற்றருள் பெற்ற தொண்ட "ரர"வொலி யெழுந்த தன்றே.
 

852

  (இ-ள்) மற்றவர்...போற்றி - மற்று அக்குலச்சிறை நாயனார் பிள்ளையாருடைய மலர்போன்ற திருவடிகளை வணங்கித் துதித்து; கொற்றவன்...காண - அரசர் முதலாகியுள்ளவர்கள் எல்லாரும் காணும்படியாக; முன்கொணர்ந்த....காட்ட - முற்படத் தாம் தலையில் வைத்துக்கொண்டு கொணர்ந்த ஏட்டினைப் பிடித்தகையில் ஏந்திப் பண்பினாலே எல்லாருக்கும் காட்டவே; அற்றருள்...அன்றே - இகபரப் பற்றுக்களை அறுத்தலால் திருவருளைப் பெற்ற திருத்தொண்டர்கள் செய்யும் "அரகர" என்ற ஒலிமுழக்கம் மிக்கு அப்பொழுதே எழுந்தது.
  (வி-ரை) மற்று அவர் - மற்று - வினைமாற்றின்கண் வந்தது; முன்பாட்டில் "அணைவார் வந்தார்" என்ற அவர் அதன்மேல் செய்வனவற்றை வேறு கூறுதலின் வினைமாற்றாதல் காண்க. அவர் - குலச்சிறையார்; முன்னறிசுட்டு.
  கொற்றவன் முதலாயுள்ளோர் காண - பிள்ளையார் தமது ஆணையால் நிகழ்த்திய செயலாதலின் அவர் காணவேண்டாது அரசன் முதலியோரே காணவேண்டியவர்; காணக் - காட்ட என்று கூட்டுக.
  முதலாயுள்ளோர் - அரச னவையுள்ளோர்.
  முன்கொணர்ந்த - முற்படத் தலைமிசை வைத்துக் தொண்டு கொணர்ந்த; (முன் பாட்டுப் பார்க்க).
  ஏடு பற்றிய கையில் ஏந்தி - ஏட்டினைத் தலைமிசைக் கையில்பற்றி வைத்து வந்தமையால் அவ்வாறு பற்றிய கையினில் எடுத்து ஏந்தி.