| கழுக்களில் வரிகையாக ஏற்றியிட; நண்புடை...ஏறினார்கள் - அன்புடைய ஞானமுண்டாராகிய பிள்ளையார் எழுந்தருளிய திருமடத்தில் தீயினைக்கொளுவ வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து கொளுவிய எட்டுப் பெருங் குன்றுகளினின்றும் வந்த எண்ணாயிரம் அமண குருமார்களும் ஏறினார்கள். |
| 855 |
| இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2751. (வி-ரை) மன்னவன் மாறன் கண்டு - மன்னவன் என்ற குறிப்பு மேல் நீதிமுறைசெய்யவுள்ளநிலை குறித்தபடி. மாறன் - "வடிகொள்வேள் மாறன் காதல் மாறின வண்ண மென்பார்"(2703) என்றபடி பொய்யின் நீங்கி உண்மைகண்டு மாறுதலடைந்தவன் என்பது தொனி; கூன்பாண்டியனாய் அமணச்சார்பில் குனிந்து இருந்தவர் மாறி உண்மை கண்டு சைவச் சார்பில் நிமிர்ந்து நின்றசீர்நெடுமாற ராயினமையும் குறிப்பு. கண்டு - "கொற்றவன் முதலாயுள்ளோர் காண"(2750) அமைச்சனார் காட்டக் கண்டு. |
| மந்திரியாரை நோக்கி - முறைசெய்க என்று கூற - முன்னர் மாறனாரை மன்னவன் என்று கூறிய நிலைக்கேற்பக் குலச்சிறையாரை என்னாது மந்திரியாரை என்றார். அந்த அமைச்சு நிலையில் அரசரால் ஏவப்பட்ட நீதிமுறைவிதி என்பது. |
| துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற - துன்னிய - அமணர் தாமேவலிந்து மேலிட்டுக் கொண்ட. "உள்ளவாறு கட்புலத்தில் உய்ப்பது"(2673) என்றும், "வெந்நெருப்பில் வேவுறாமை வெற்றியாவது"(2674) என்றும், "தொடர்ந்தவாது, முன்னுற விருகாற் செய்தோம் முக்காலி லொருக்கால் வெற்றி, என்னினு முடையோம்; மெய்ம்மை யினியொன்று காண்பது"(2692) என்றும் வந்தனவற்றால், அமணர் மேன்மேலும் தாமே வலிந்து வாதினை அழைத்து மேற்கொண்டமை அறிக. ஒட்டி - ஒட்டுதல் வைத்து. "தனிவாதி லழிந்தோ மாகில், வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" என்றது(2696). தோற்ற - தமது ஏடு நீருடனே செல்லவும் பிள்ளையார் இட்ட ஏடு எதிர்ந்து செல்லவும் கண்டமையால் தோல்வியுற்ற. |
| தோற்ற - வாதில் தோல்வியுற்றமையேயன்றியும் அரசன் கூறிய ஆணையாவது: தாமே ஒட்டியபடி அமணர் வாதில் தோல்வியுற்றதொரு காரணந்தானே அவரைக் கழுவிலேற்றி முறை செய்க என ஆணைதருதற்குப் போதியதாகும்; ஆனாலும், அவ்வாறு அதுகொண்டே ஆணையிடாமல் மற்றொரு நியாயமும் காண்கின்றேன் என்றபடி. |
| முன்னமே...முற்றச்செய்தார் - அநுசிதம் - செய்யத்தகாத செயல்: அஃதாவது திருமடத்தில் வஞ்சனையினால் அரசனாகிய தன்னை ஏமாற்றித், தீக்கொளுவி அடியார்களை எரித்துக்கொள்ள முயன்றது. அதனைச் சொல்வது தானும் பிழை என்பார் "அநுசிதம்" என்றொழிந்தார். இவ்வநுசிதமும் கொலைத்தண்டம் பெறத் தகுதியுடையது என்றபடி. |
| கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற - மேற்கூறிய இசைவாகிய ஒட்டுதலினாலும், அநுசிதத்தாலும் கழுவேற்றப்படத் தக்காராதலின் அவ்வாறே நீதிமுறைத் தண்டம் நிறைவேற்றுக என்றபடி. இஃது அரசன் செய்த அரச நீதிச் சட்டமுறைத் தீர்ப்பு. வாதில் ஒட்டியதொரு காரணத்தாலே அரசன் இவ்வாறு தீர்த்தானல்லன். இசைவுபற்றியெழும் தண்டம் அவ்வளவின் எல்லையை முடிந்த கோடியாகக்கொண்டு வாதத்தின் அளவுக்கு ஏற்ற அளவே நீதிபதி குறித்து முறை செய்யலாம் என்பது இந்நாளிற் போலவே முன்னாளிலும் வழக்கு. ஆயின் இங்கு அரசன் அவ்வாறு அமணர் கழுவேற இசைவு தந்தாலும் வாதின் தோல்வியளவுக்கேற்றவாறு, |