1062 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| கழுக்கொலைத் தண்டத்தைத் தவிர்த்து, நாடுகடத்துதல் முதலாகிய எவையேனும் சிறிய அளவில் தண்டங்கள் விதித்திருக்கலாமே எனின், அவ்வாறு செய்யாமையை விளக்குதற்கென்றே காரணங்காட்ட மேற்வருங்கூற்று எழுந்தது. பிள்ளையார்பாற் செய்த அநுசிதமாகிய, மக்கள் குடியிருப்பு வீட்டுக்குத் தீ வைக்க முயன்றமையும், மக்களைத் தீயிட்டுக் கொல்ல முயன்றமையும், அவையும் எவ்விதக் காரணமும் பற்றாது செய்தமையும், சிவனடியார்பாற் செய்த அபசாரமாயினமையுமே கழுக்கொலைத் தண்டம் விதித்து முடித்ததன் காரணம் என விளக்கப்பட்டது. | | கழுவில் ஏற்றி முறைசெய்க - இவ்வாறு கழுவேற்றிக் கொலைத்தண்டம் இயற்றுதல் முன்னாளில் வழக்கத்திலிருந்ததொரு தண்ட விசேடம். அன்றியும் தமது சமயச் சார்புக்கு இழுக்கு நேர்ந்தபோது கழுநாட்டி அதன்மேற் பாய்ந்து உயிர் மாய்த்துக் கொள்வது சமணர் சமய மரபுகளுள் ஒன்றென்பதும் அறியப்படும். "புத்தர்சமண் கழுக்கையர்" என்ற தேவாரம் இதனை உரைத்தமை காண்க. அதனாற்றான் இங்கு அமணர் அவ்வாறு ஒட்டினர் என்க; ஆதலின் அரசன் அவ்வாறே முறைசெய்க என்றதில் கருணையின்மை - வன்கண்மை முதலிய இழுக்கு ஒன்றுமில்லை; இந்நாளிலும் "நாகரிக" (ஆங்கில) நீதிச்சட்டத்தின்படி கொலைத்தண்டம் விதிக்கப்பட்ட ஒருவனைக் கழுத்தில் கயிறு சுருக்கிட்டுத் தொங்கவைத்துக் கொல்ல முறைசெய்வது தண்ட விசேடமாதல் காண்க. அதனை அன்றென விடுத்து மேனாட்டில் குற்றவாளியைப் படுக்கவைத்துக் கழுத்தைக் கனத்த வாள்விட்டு விரைந்துண்டமாக்குதலும், நாற்காலியில் வைத்து மின்சாரத்தை உடலில் ஏவிக் கணத்தில் கொல்லுதலும் முதலிய தண்ட விசேடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுதல் காண்க. ஈட்டி (சனியன் என்பர்) கொண்டு குத்திக் கொல்லும் முறையும் காண்க. ஆதலின் இத் தண்டமுறை பற்றிப் பரிவுகொண்டது போன்று பகைகொண்டும் ஆராய்ச்சியிற் கிளம்புவோர் இவைகளை உளங்கொளக்கடவர்; அரசன் சமயச் சார்புபற்றி இவ்வாறு முறைசெய்தானல்லன் என்பதும், பிள்ளையார்க்கேனும் சைவர்க்கேனும், சைவ சமயச் சார்புகள் எவற்றுக்கேனும் இதனுள் பொறுப்பும் சம்பந்தமும் இல்லை என்பதும், அரச நீதிமுறையொன்றே இங்கு இயற்றப்பட்டதென்பதும் தெளிந்து கொள்க. | | "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ், களைகட் டதனொடு நேர்" (குறள்) என்றதும், அங்குக் கொடியராவார் இன்னார் என்று கூறுகையில் " தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர்...முதலாயினரை" என்று விரித்துத் தீக்கொளுவுவாரை முதற்கண் வைத்து வகுத்தும், "அரசன் கொடியாரைக் கொலையா னொறுத்துத் தக்கோரைக் காத்தல்" என்று வகுத்தும் எழுதிய பரிமேலழகர் உரை ஈண்டுச் சிந்திக்கற்பாலது. | | இங்கு வேறு வேறு பேசுவனவெல்லாம் பிழையென் றொதுக்கிவிடுக. ஆயிரக்கணக்கான மக்களைத் தீக்கொளுவிக் கொளுத்த முயன்று சூழ்ச்சி செய்த கொலைபாதகர்கள் எண்ணாயிரவர் கொலைத் தண்டத்திற் குள்ளாவதில் பரிவுகொள்ளத்தக்க நீதித் தவறு என்னவுள்ளது என்று விடுக்க. | | இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது. அவர் கூறுவனவற்றின் சுருக்கம்: (1) நம்பியாண்டார் நம்பிகளுக்கு முன் இந்நிகழ்ச்சி பற்றி நூல்களுள் ஒன்றும் காணப்படவில்லை; (2) பிள்ளையார் தேவாரங்களில் இதுபற்றிய அகச்சான்று இல்லை; (3) சீன யாத்திரிகர்கள் எழுதிய தமிழ்நாட்டுக் குறிப்புக்களில் |
|
|
|
|