1066திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 

்ஏறினானா? அல்லது ஏற்றப்பட்டானா? என்று சிந்திக்கில் இரண்டும் உண்மைதானே என்பது புலப்படும்; "மதத்தி னின்மான மிக்கார் தாங்களே வலிய வேறி" என்ற திருவிளையாடற் புராணமுடையார் "சமணரைக் கழுவேற்றிய படலம்" என்று பெயரிட்டமை காண்க. "எல்லார்களும் ஏத்தும் ஈசன்" என்ற கருத்துப்பற்றியும், உண்மைச் சமய சமரசம்பற்றியும் முன்னரே உரைக்கப்பட்டன; கண்டுகொள்க.

  ஈண்டு, முன் எவரும் சொல்லாத பொய்ச்செய்தி யொன்றைப் பழிபடக் கற்பித்துரைத்தனர் என்று சைவாசாரியராகிய நம்பியாண்டார் நம்பிகள்பால் இல்லதுபுனைந்துரைத்த குற்றமும், "அவரை நங்கள் நாத"ரென்று கொண்டு அவர் கூறிய பொய்யைப் பழிபடப் பரப்பினார் என்று எமது தெய்வச் சேக்கிழார்பால் அறியாமைக் குற்றமும் சுமத்தி அலர்தூற்றும் இந்நவீன ஆராய்ச்சியாளர், சைவத்தோல் போர்த்த சமணரே யாவர் என்றஞ்சி விடுக்க. "நேர்நின்று, காக்கை வெளிதென்பா ரென்சொலார், - தாய்க்கொலை, சால்புடைத் தென்பாரு முண்டு" - இனி, சமணர்கள் தமிழர்கள் - கொல்லாமையாகிய அறம்பூண்டவர்கள் - உயர்ந்த சமயநிலைக் கொள்கை பற்றியவர்கள் என்றும், - சைவர்கள் அவர்களைப் பகைத்துச் செய்த செயல்கள் தவறு - இவர்களது அச்செயல்கள் சமயப் பூசல்பற்றியும், வடமொழியாளர் சூழ்ச்சிபற்றியும், சமய சமரச நோக்கின்றிக் குறுகிய மனப்பான்மை பற்றியும், சாதிப் பிணக்குப் பற்றியும், இன்னபிறவாறும் எழுந்தன என்றும் சில கோட்பாடுகளைச் சில காரணம்பற்றி முன்னரே மனத்துள்ளே துணிந்துகொண்டு, அக்கோட்டம்பற்றி மேலே கண்டவாறு (வேத சிவாகமங்களின் உண்மை), காணாது போலியாராய்ச்சிகளுட் புகுந்து சிவநிந்தை, சிவனடியார் நிந்தை புரிந்தும், பெரியோரைப் பழித்தும், தாமும் கெட்டு உலகையும் மயக்கிப் பழிக்கும் பாவத்துக்கும் ஆளாகியொழிகின்றனர் இந்நாளிற் சில புதிய ஆராய்ச்சியாளர்கள். திருவருள் அவர்களுக்கு நல்லறிவு தருவதாக. உலகர் இப்போலி ஆராய்ச்சிகளில் மயங்காது நமது முன்னோர் கண்ட உண்மைகளை அனுபவம் வல்ல தேசிகர்களை அடுத்து உணர்ந்து உய்வார்களாக.
  வாதில் ஒட்டித் தோற்ற செய்தி 2692 முதல் 2744 வரை பாட்டுக்களிற் கூறப்பட்டது.
  முன்னமே பிள்ளையார்பால் அநுசிதம் முற்றச் செய்த - செய்தி 2577 முதல் 2689 வரை பாட்டுக்களிற் கண்டுகொள்க. முற்ற - மிகவும்; முழுதும் என்றலுமாம்.
  ஏற்றி - ஏற்ற -என்பனவும் பாடங்கள்.
 

853

  2752. (வி-ரை) ஞானப்புங்கவர் - ஞானமும் தூய்மையும் உடையவர் - கொலைத் தண்டனையின்பாற்படும் இவ்வரசாணையை விலக்குதற்குரிய ஞானமும், அது செய்ததற்குரிய மனத்தூய்மையுமுடையவராயினும் என்பது குறிப்பு.
  கேட்டும் இகல் இலர் எனினும் விலக்கிடாதிருந்த - ஞானமும் மனத்தூய்மையுமுடையராயின் இதனைக் கேட்டார் எவரும் இகல் இருந்தாலன்றி விலக்காதிரார் என்பது குறிப்பு.
  சைவர்...செய்த தன்மையாற் சாலும் - இவ்வாறிருப்பவும் பிள்ளையார் அரசனை விலக்காமை அமணர் சிவனடியார்பாற் செய்த பெரிய அபசாரமும், அரசனது ஆணை நீதிவரம்பு கடவாமையுமேயாம் என்பது.
  இத்திருப்பாட்டினை ஊன்றிக் கருத்தறிந்தாராயின் இந்நிகழ்ச்சியிற் பிள்ளையாரின் பங்கு இத்துணையென ஒருசார்புபற்றிப் பிணங்கும் நவீன ஆராய்ச்சியாளரும் நன்கு தெளிந்து நலமடைகுவர். உண்மை நிலையினை இவ்வாறு எடுத்து நிறுவிக்காட்டியது ஆசிரியரது தெய்வக் கவிநலமும் அமைச்சியல் பற்றிய நல்லறிவின் திட்பமும் நுட்ப