| துணிவன; உண்மை இவ்வாறாக ஈண்டு இகத்தினில் இன்பம் குறைவிலாதாயினும் அதனால் பிறவி பெருகுதலின்றிப் பிறவித்துன்பம் நீங்கிடப் பெற்றதென்பார் எனினும் என்றார். |
| நாமங் கூறித் - துன்ப நீங்கிடப் பெற்றது - உலக இன்பந் துய்த்தலால் இவ்வாறு நூல்கள் விதித்தவாறு பிறவி பெருக்காமல் அத்துன்ப நீங்குதற்குக் காரணம் திருநாமங் கூறுதல் என்பதாம்;...."ஐந்து புலன்களு மார வார்ந்து, மைந்தரு மொக்கலு மகிழ மனமகிழ்ந், திவ்வகை யிருந்தோ மாயினு மவ்வகை, மந்திர வெழுந்தைந்தும் வாயிடை மறவாது, சிந்தை நின்வழிச் செலுத்தலி னந்த, முத்தியு மிழந்தில; முதல்வ! வத்திறம், நின்னது பெருமை யன்றோ! வென்னெனின்?, வல்லானொருவன் கைம்முயன் றெறியினும், மாட்டா வொருவன் வாளா வெறியினு, நிலத்தின் வழாஅக் கல்லே போல, நலத்தின் வழாஅர்நின் னாமநவின் றோரே" (திருவிடை - மும் - கோ - 19) என்ற பட்டினத்தடிகளது கருத்து ஈண்டு விளக்கப்பட்டது காண்க. |
| கூற்றையுதைத்தவர் - இயமனை உதைத்த தன்மை காய இவரே பிறவித் துன்பமாகிய மரணத் துன்பத்தை நீக்கவல்லவர் என்பார் இவ்வாற்றாற் கூறினார். |
| நாமங் கூறி - அரகர என முழக்கம் செய்தலும் தியானித்தலுமாம். "எல்லாம் அரனாமமே சூழ்க" என்ற "வாய்மை"ப் பயன் இது. |
| கடல் - இங்குக் கடல்அலை குறித்து நின்று, அலைபோல மேன்மேல் தொடர்ந்து வருதல் குறித்தது. |
| அவனி, - துன்ப நீங்கிடப் பெற்றது - "வையகமுந் துயர் தீர்கவே" என்ற "வாய்மை"யின் பயனாதல் காண்க. இவ்வாறு ஞானசம்பந்தர் பரமஞானாசாரியராதலின் அவர் சத்பாவனையால் எழுந்த ஞான வாய்மையாகிய அருள்வாழ்த்து அவ்வாறே பலித்து முழுதும் பயன்தந்தமை கண்டுகொள்க. |
| இன்பம் குறைவிலதெனினும் நாமம்கூறி அவனி பிறவித்துன்ப நீங்கிடப் பெற்ற தன்மை பிள்ளையாரது வாய்மையின் பலன் என்பதாம். பொருட்செல்வம் பூரியார் கண்ணுமுளதாதலின் அச்செல்வம் வந்தபோது தெய்வமும் சிறிது பேணாராய் நரகில் வீழ்வார் உலக மாக்கள்; ஆனால் ஈண்டு ஞானாசாரியரது நல்ல திருநோக்கம் பெற்ற பேற்றினால் மதுரை வாழ்வார் செல்வமும் பெற்று, அதனோடு நாமங் கூறிப், பிறவித் துன்ப நீங்கவும் பெற்றனர் என்க. |
| 860 |
2759 | "அங்கயற் கண்ணி தன்னோ டாலவா யமர்ந்த வண்ணல் பங்கயச் செய்ய பாதம் பணிவ"னென் றெழுந்து சென்று, பொங்கொளிச் சிவிகை யேறிப் புகலியர் வேந்தர் போந்தார்; மங்கையர்க் கரசி யாரு மன்னனும் போற்றி வந்தார். | |
| 861 |
| (இ-ள்) "அங்கயற்கண்ணி.....பணிவன்" என்று - அங்கயற்கண்ணி யம்மையாருடனே திருவாலவாயில் விரும்பி வீற்றிருந்தருளிய பெருங்கருணையாளராகிய இறைவரது தாமரைபோன்ற திருவடிகளை வணங்குவேன் என்று; எழுந்து சென்று - வைகையாற்றின் கரையினின்றும் எழுந்துபோய்; பொங்கொளி.....போந்தார் - மேன்மேற் பொங்கும் ஒளியினையுடைய முத்துச் சிவிகையினை மேற்கொண்டு சீகாழி மன்னவர் போந்தருளினர்; மங்கையர்க்கரசியாரும்....வந்தார் - மங்கையர்க்கரசி யம்மையாரும் நெடுமாறனாராகிய அரசரும் போற்றிக்கொண்டு அவர்பின் வந்தனர். |
| (வி-ரை) "அங்கயற்கண்ணி....பணிவன்" என்று - இது பிள்ளையார் உட்கொண்டருளிக் கூறியது. அரசனிடம் வரும்முன் திருமடத்தினின்றும் நேரே திரு |