[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1081 |
| பதிகப்பாட்டுக் குறிப்பு:- (1) வீடு-அல்-ஆல-வாய்-இலாய் - கரிய விடத்தையுடைய பாம்பினாற் காட்டப்பட்ட இடத்தை வீடாக - இருப்பாகக் - கொண்டவரே!; --வீடல் - ஆல் - அ - வாயில் - ஆய் - விழுமியார்கள் . விடல் - விடுதலை - வீடு பேற்றின் பொருட்டு; ஆல் - கல்லால்; அ - வாயில் - அந்த இடத்தில் கல்லாலின் கீழ்; ஆய் - ஆய்ந்த; விழுமியார்கள் - சனகாதியர் முதலினோர்; எனவும் பொருள் கொள்வர்--(வ.சு.செ.) (வேறு பலவாறும் பொருள் கொள்வர்.) பாடலால் - அ - வாயிலாய் - பாடுதலினாலே அந்த வாக்கினிடம் விளங்குபவரே!; காடு அ(ல்)லால் அவா இலாய் - சுடுகாடேயன்றி வேறு இருப்பிடம் விரும்பாதவரே; நீள் - கடி - கபாலி மதிற்கூடல் ஆலவாயிலாய் - நீண்ட காவலையுடைய கபாலி மதில் சூழ்ந்த திருக்கூடலாலவாய்க் கோயிலினுள் எழுந்தருளிய இறைவரே!; குலாயது என்ன கொள்கையே - இங்கு எம்முடன் உள்ளே விளங்க விரவி எழுந்தருளியிருந்து அருள்புரிந்து என்றுகொண்ட தன்மைதான் என்னே? (எம்மால் அதன் பெருமை உணர்ந்துரைக்கும் தரமன்று);-- (2) ஒட்டு இசைந்தது - பிரித்தறியலாகா வகையால் இணைந்தும் பிணைந்தும் கூடிநின்றது; "அண்ண லிருப்பதவளக் கரத்துளே, பெண்ணி னல்லாளும் பிரானக் கரத்துளே" (திருமந்திரம்); "உடையா ளுன்ற னடுவிருக்கு முடையா ணடுவு ணீயிருத்தி"(திருவா); "சத்திதான் சிவனை யீன்றுஞ் சிவஞ்சத்தி தன்னை யீன்றும்"(சித்தி - 2-77); ஒட்டு - "ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்கு" (பிள். தேவா - மயிலை); "உணரப்படுவாரோ டொட்டி வாழ்தி" (அரசு); "ஒட்டி உளமவனா கில்லான் - உளமவனா மாட்டாது"(போதம் - 2); ஒட்டுதுல் - பிரிப்பின்றிப் பொருந்துதல்; ஒட்டாக இசைந்தது என்க; குணமும் குணியும்போல. உச்சியாள் - கங்கை; ஒருத்தியா - ஒருத்தியாகக் கொண்டு; ஆக என்றது, ஆ என ஈறு குறைந்துநின்றது; கொட்டு இசைந்த ஆடல் - தாள முதலிய இயங்களுக்கு இசைந்தபடி ஆடுதல்; "இலயம்பட"(தேவா). கொட்டு - பெயர்; நான்கனுருபு விரிக்க; கொட்டு இசைந்த ஆடல் - கொட்டியாடல் - திரிபுரமெரித்தஞான்று ஆடிய ஆடல்; "திரிபுர மெரியத் தேவர் வேண்ட...இமையவ னாடிய கொடுகொட்டியாடல் "(சிலப் - 6 - 40) (வ.சு.செ.); எட்டு இசைந்த மூர்த்தி - நிலம் முதலிய அட்டமூர்த்தமும் தனது திருமேனியாக வுடையவன்; ஈண்டு எரியில் ஏடு வேவாமை கருதிய குறிப்பு. என்னை - உணர்வுக்கும் வாக்கிற்கும் எட்டாமை குறிப்பு ; -(3) குற்றநீ குணங்கள் நீ - "அவையே தானே யாயிரு வினையின்...ஆணையி னீக்க மின்றி நிற்பன்"(போதம் - 2) என்பார் இவ்வாறு கூறினார். இதன் விரிவு ஆண்டுக் காண்க. "பந்தம் வீடு தரும் பரமன்"(300) என்றவிடத் துரைத்தவையும் பார்க்க; "பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்க ளல்லான்"(சித்தி - 1-44) கருதுக. சுற்றம்நீ....சோதி நீ - சுற்றம் - இறைவர் உலகெலாமாய் அவையேயாயிருக்கும் நிலையினையும்; - அவற்றின் வேறாய்த் தானேயா யிருக்கும் நிலையினையும்; தொடர்ந்திலங்கு சோதி - அவற்றோடு உடனாகி நிற்கின்ற நிலையினையும் உணர்த்தின. கற்றநூற் கருத்து - வேத சிவாகமங்கள்; அருத்தம் இன்பம் - இருவினைக்கீடாக உயிர்கள் போகங்களை நுகரச் செய்யுந் தன்மை - சாதனங்கள்; புகழ்ந்து.....முகம்மனே - இவ்வுண்மைகளை எப்போதும் மனத்துட்கொண்டு மறவாது ஒழுகி அன்பு செய்தலன்றி முகமனாக உரைத்தலிற் பயனில்லை - உரைக்கவும் படாதது; -(4) முதிரும் நீர்ச்சடை முடி முதல்வன் நீ - முதிரும் - "நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை"(தேவா); "பள்ளந் தாழ்உறு புனல்" என்றபடி மேலிருந்து கீழ் வேகத்துடன் செல்லும் |
|
|
|
|