1082திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  தன்மையை மாற்றிக் கீழ்நின்று மேனோக்கிச் செல்லும்படி தாங்கியவர் என வாதத்தின் இறுதியாய்ச் செய்த அருட்குறிப்பு. முழங்குஅழல் ஏந்தி - சுடுந்தன்மையுடைய தீயினை அவ்வாறல்லாது செய்த அனல்வாதத்தின் அருட்குறிப்பு; மதுரன் - இன்பவுருவினன் - இன்பஞ் செய்பவன்; மணாளன் - நடத்துபவன் - நாயகன்; சதுரன் - வெற்றிப்பாடுடையவன்; சதுமுகன் கபாலமேந்து சம்பு - மூவர்க்கு முதலாகிய முதல்வன் - சங்கார காரணனாகிய முதல்; சம்பு - சுகத்திற்கு இருப்பிடமானவன்; "இன்ப மாக்கலிற் சம்பு" - (காஞ்சிப்புரா)- (5) நீள்மதில் - கபாலிமதில்; பாலனாய தொண்டுசெய்து பண்டுமின்றும்....சீலமாய சிந்தை - பிள்ளையாரது முன்னைநிலைத் தொண்டின் குறிப்பும் அதனையே தொடர்ந்து இங்குவந்து பணிசெய்து நிற்கும் குறிப்பும் உணர்த்தும் சிறந்த சரித அகச்சான்று; "பண்டு திருவடி மறவாப் பான்மையோர்"(1953); "பவமற வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட"(புரா - 1244); "மறக்குமா றிலாத வென்னை" (தேவா) முதலிய திருவாக்குக்கள் காண்க. பாலனாய - "ஆளுடைய பிள்ளையார்"(1966). - (6) பின் தயங்க - பின்புறம் அசைந்தாடி விளங்க; நின்தயங்கி ஆடல் - இங்குக் கூறும் ஆடல் சிவஞானிகள் கண்டு எப்போதும் கும்பிட்டுச் சிவானந்தத்திற் றேக்கிநிற்கும் திருக்கூத்து; உலகம் மீளப்படைத்தல் முதலாக அருளல் ஈறாக வரும் ஊழி எல்லையாக வுள்ள ஐந்தொழிற்கூத்தும், நித்தசங்காரம் என்பதாதியாகக் கூறப்படும் ஐந்தொழிற்கூத்து வேறு; இங்குக் குறித்த தயங்கியாடல் வேறு. இவை வெவ்வேறு நிலையன. தயங்கி யாடல் என்று சிவஞானிகள் கண்டு திளைத்திருக்க ஆடும் கூத்துத் "தம் முண்ணி றைந்தஞா னத்தெழு மாநந்த வொருபெருந் தனிக் கூத்து(2558), "வல்விய மெய்யுணர்வின் கண் வருமானந்தக் கூத்து" (3570) என்று கூறப்பட்டு ஆளுடைய பிள்ளையாரும் திருமூல நாயனாரும் கண்டுணர்ந்து திளைத்த திருக்கூத்து; திருமூலர் திருமந்திரத்தினுள் திருக்கூத்துத் தரிசனம் (ஒன்பதாந் தந்திரம்) என்ற பகுதியில் "எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி" (9-74) என்பதாதியாகச் சிவானந்தக் கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக்கூத்து, பொற்றில்லைக்கூத்து, அற்புதக்கூத்து என்ற தலைப்புக்களிற் பேசப்படுவது; பிள்ளையது இரண்டாந் தந்திரத்தினுள் "சர்வ சிருட்டி" முதலாக (45) அநுக்கிரக மீறாக(114) வரும் திருமந்திரங்களுட் பேசப்படும்;- (7) கீதம் வந்த வாய்மையாற் சிளர் தருக்கினார் - கீதம் வந்த வாய்மை - அன்பு மேலீட்டினாற் தம்மை மறந்து கீதங்கள் பாடிக்கொண்டிருத்தல். "என்புருகிப் பாடுகின்றிலை"(திருவா); "கீதத்தை மிகப்பாடும்"(தேவா); "பாட்டும் பாடிப் பரவித் திரிவார்" (தேவா-ஒற்றியூர்); "பண்ணொன்ற விசைபாடும்"(தேவா) முதலியவை காண்க. "ஆடுவதும் பாடுவது மானந்த மாகநினைத், தேடுவது நின்னன்பர் செய்கை பராபரமே" என்றார் தாயுமானார்; தருக்காவது சிவனடிக் கீழும், சிவனடியார் திருக்கூட்டத்தின் உள்ளும் இருந்துவாழும் ஆனந்தத்தால் வருவது; "இறுமாந் திருப்பன் கொலோ வீசன் பல்கணத் தெண்ணப்பட்டுச், சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்று" (தேவா); ஆகுமே - ஏகாரம்; ஆகாது என எதிர்மறைப் பொருட்டு;- (8) கருத்திலா - மன்னனை என்று கூட்டுக. நிறை இலங்கு நெஞ்சு - பிறிதொன்றனுக்கும் இடமின்றி(ப் பொதுநீக்கி) இறைவனையே நினைக்கும் நெஞ்சு;--(9) தீவணம் - "எரிபோல்மேனி"(தேவா);--(11) போய நீர் - மிகுதியாய் வயலுள் புகும் நீர். தீய - தீர - தீயவை எல்லாம் தீரும்படி; எண்ணுவார் - எண்ணுவார்களை. சிந்தை யார்வர் என்பதும் பாடம்.
2764
"ஒன்றுவே றுணர்வு மில்லை னொழிவற நிறைந்த கோலம்
மன்றினான் மறைக ளேத்த மானுட ருய்ய வேண்டி