1084திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  மானிட ருய்ய வேண்டி ஆடல் செய்கை - "நின் தயங்கியாடல்" என்ற பதிகப் பொருள்.
  நினைப்பதே நியமமாகும் - நியமம் - நியதியாகிய கடன்; ஏகாரம் - பிரிநிலை; நீ செய்யும் பேரருளுக்கு அருள்ஆடலை நினைப்பதனைத் தவிர வேறு கைமாறு ஒன்று மின்று என்பது. ஈண்டுச் சமணர் வாதினில் இறைவர் செய்த பேரருளின் திறங்களெல்லாம் உட்கொண்டு கூறியருளினார். நினைப்பதென் னியமமாகும் என்று பாடங்கொள்வாருமுண்டு; "வேயுறு தோளி", "மானினேர்விழி" என்ற பதிகங்களினும், ஏனை, "மந்திரம்", தளிரிள" "வாழ்க" என்றவற்றினும் உன்னையே முன்னிட்டு வைத்ததன்றி என் செயலாகக் கொண்ட தொன்றுமில்லை என்றபடி.
 

866

  2765. (வி-ரை) தென்னவன் பணிந்து நின்று - நின்று - என்றமையால் நிலமிசை வீழ்ந்து பணிந்து எழுந்து என்றுரைக்க.
  மன்னனே - தங்கள் பாண்டியமரபின் குல முதல்வர் சோமசுந்தரக் கடவுள் ஆதலின் குலத்தைக் கேடுறாமற் காத்தவர் என்பது குறிப்பு.
  மாயையால் மயங்கி - மாயை - வஞ்சனை என்னும் பொருளில் வந்தது. ஆல் - ஏதுப்பொருளில் வரும் ஐந்தனுருபின் பொருளது.
  யாதும் - எவ்வளவேனும் - ஒருசிறிதும் என உம்மை - முற்றும்மை. மேல் உன்னையான் என வருதலின், யானும் என்ற பாடம் பிழை.
  உறுபிணி - உறு - முன்செய் தீவினைப்பயனால் வந்த தீயசார்பும், அதுகாரணமாக வந்த மயக்கமும், அதுகாரணமாக விளைந்த சுரநோயும் என்றிவ்வாறு பரம்பரையில் வந்துற்ற விளைவெல்லாம் கொள்ள நின்றது. பிணி - சுரநோயினையே யன்றி அதன் காரணமாய் நின்ற எல்லாம் கொள்க.
  தீர்த்து ஆட்கொள்ள - ஆளல்லே னென்று வாளாகிடந்த என்னை அந்நிலை நீக்கி ஆளாக ஏன்றுகொள்ளும் பொருட்டு அதற்கு உரிய சாதனமாகிய ஞானகுருவாக; சிவஞானபோதம் எட்டாஞ் சூத்திரத்தின் கருத்து; கொள்ள - கொள்வதற்காக.
  இன்னருட் பிள்ளையாரைத் தந்தனை - பிள்ளையாரைத் தந்தமையே தன் இறைவர் தனக்குச் செய்த பேரருள் என்றபடி. இன்னருள் - தனது தீச் செயல்களுக்காக முனிந்து விடாது, அருளினாலே நோய்தந்து, பின்நீக்கி, உபதேசமும்செய்து, நீறளித்து ஆட்கொண்ட அத்துணையும் எல்லாம் அருளே என்பது; கூட்டுவிப்பவன் நீயே என்ற படி. முன் பலமுறையும் என் முன்னோர்களுக்கு இவ்வாறு வந்த இடர்களை நீக்கிய ஆடல்களைப் போல, இன்று இவரைத் தந்து இடர்நீக்கி யாட்கொண்டனை என்பதும் குறிப்பு. இறைவ - எனது தலைவரே.
  மாய்கையான் - என்பதும் பாடம்.
 

867

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
2766
சீருடைப் பிள்ளை யாருஞ் சிறப்புடை யடியா ரோடுங்
காரினிற் பொலிந்த கண்டத் திறைவர்தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி யங்குநின் றரிது நீங்கி
ஏரியன் மடத்தி னுள்ளா லினிதெழுந் தருளிப் புக்கார்.
 

868

  (இ-ள்) சீருடை.....வணங்கி - சீரினையுடைய பிள்ளையாரும் சிறப்புடைய அடியார்களுடனே மேகம்போன்று விளங்கும் கழுத்தையுடைய இறைவரது திருவடிகளை வணங்கி; காதல்...போற்றி - அன்பினால் நிறைந்த திருவருள் பெற்றுத் துதித்து;