1086திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  2767. (வி-ரை) நீடுசீர்த் தென்னர் கோன் - கூன்பாண்டியரா யிருந்து நின்றசீர் நெடுமாறனாராயின தன்மைக் குறிப்பு. சீர் - திருத்தொண்டத் தொகையுள் வைத்துப் போற்றப்பட்ட பெருஞ்சிறப்பும் கொள்க. முன்பாட்டில் "சீருடைப் பிள்ளையார்", "சிறப்புடை அடியார்" என்றமை காண்க.
  நேரியன் பாவையார் - நேரியன் - சோழன்.
  மாடு சென்று இறைஞ்சி - பிள்ளையாரது பக்கத்தில் சென்று அடிவீழ்ந்து வணங்கி; முன்னர்ப் "பணிந்துகொண்டு"(2755) என்றது ஆசிரியரிடம் மாணவன் நீறுபெறும் முறை.
  நோக்கி - பலவாறும் குறைவறுப் பேவுதற்பொருட்டுத் திருமடத்தினைச் சுற்றி முற்றும் பார்வையிட்டு. முன்னர் அம்மையார்தாமும் அமைச்சனாரும் அரசன் பணி மேற்கொண்டு அத்திருமடத்திற் போந்தனர்(2623); ஈண்டு அரசனும் அம்மையாரும் உடன்போந்தனர் என்பது குறிக்க.
  நேரியன் பாவையாரும் - பாண்டிமா தேவியாரும் என்னாது சோழர் மகளார் என இவ்வாற்றாற் கூறியது சைவநெறியிற் பிறழாத சோழ மரபில் வந்தமையால் அரசனையும் பாண்டி நாட்டினையும் சைவத்தில் நிலைபெறுவித்தவர் என்று பிள்ளையார் "வளவர்கோன் பாவை"(தேவா) என முதற்கண் கூறிய குறிப்பு. பாவையாரும் - "பாவை" என்ற பதிகஆட்சி போற்றப்பட்டது.
  மாளிகை - அரச மாளிகை; போக - விடைபெற்றுச் செல்ல.
  கும்பிடும் விரும்பினாலே நாடி அங்கிருந்து - பாடலுற்றார் - திருவாலவாய்த் திருக்கோயிலினுள் நேரே சென்று கும்பிட்டபின் ஆராமையால் மேலும் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் மிக்க விருப்பத்தாலே திருமடத்தினின்றவாறே திருப்பதிகம் பாடி வழிபட்டனர் என்க. "நீடு பூசனை நிரம்பியு மன்பினா னிரம்பார்"(1837) என்றும், "மீளமீள விவ்வண்ணம் வெண்பால் சொரிமஞ் சனமாட்ட"(1241), "பரவ மேன்மே லெழும்பரிவும்"(1253) என்றும் வரும் நிலைகள் குறிக்க.
  அங்கிருந்து - திருமடத்தின்கண் இருந்தபடியே.
  கூடிய மகிழ்ச்சி பொங்க - கூடுதல் - சரித நிகழ்ச்சியிற் கண்டவாறு திருஅருள் வெளிப்பாடு பொருந்தப்பெறுதல். மகிழ்ச்சி பொங்குதல் - திருவியமகம் என்ற பதிக யாப்பமைதி, சந்த அமைதி, பொருளமைதி முதலியவைகளால் புலப்படுதல் கண்டு கொள்க.
  திருவாலவாயினைப் பற்றிப் பிள்ளையார் அருளிய பதிகங்களுள் (1) "மங்கையர்க்கரசி" என்ற பதிகம் திருநகரினை அணுகும்வழியில் திருவாலவாய்த் திருக்கோயில் கட்புலப்படும்போது திருநகரின் புறத்தே அருளப்பட்டது; (2) "நீலமாமிடற்று" என்ற பதிகம் முதலில் இறைவரைக் கண்டு திருக்கோயிலில் திருமுன்பும், (3) "காட்டுமா", (4) "வேத வேள்வி" என்ற பதிகங்கள் சுரந்தீர்த்துச் சமணை வாது வென்றருளத் திருமடத்தினின்றும் அரச மாளிகைக்குப் புறப்படும்போது இறைவரது திருவுள்ள நோக்கித் திருக்கோயிலில் திருமுன்பும், (5) "வீடலாலவாய்" என்பது வாது வென்ற பின் திருக்கோயிலில் திருமுன்பும் அருளப்பட்டன; (6) "மானினேர்விழி", (7) "மந்திரமாவது" என்ற இவை சுரந்தீரு முன்னர் அரசனது மாளிகையில் அரசன் முன்பு அருளப்பட்டன; (8) "வாழ்கவந்தணர்" வைகையாற்றங்கரையில் அருளப்பெற்றது; (9) "ஆலநீழல்" இங்குக்கூறியபடி திருமடத்தில் அருளப்பட்டது. -இனி, மதுரையில் இருந்தபடி ஏனைப் பதிகளைப் பற்றி அருளிய பதிகங்கள் மூன்று; அவற்றுள் (10) "தளிரிள வளரொளி" என்ற திருநாள்ளாற்றுப் பதிகம் அரசன்முன் அவன்