[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1089

  (2421) எனவும், "திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்தங், கொருப்படு சிந்தையினார்கள்"(1509) எனவும் கூறிய பொருள்கள் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன; "சிரிப்பார் களிப்பார் தேனிப்பார், திரண்டு திரண்டுன் திருவார்த்தை, விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் றிருநாமந், தரிப்பார் பொன்னம் பலத்தாடுந் தலைவா வென்பார்" (திருவா - கோயின்மூத்த. பதி - 9) என்ற கருத்துக் காண்க. திருத்தொண்டின் உண்மை - திருத்தொண்டின் றிறமும் இறைவர் ஆட்கொள்ளும் தம்மையும் எஞ்ஞான்றும் அழிவுபடாது நிலைத்த தன்மை; ஈண்டு ஆலவாய்ப் பெருமான், அமண் இருளினுள் அகப்பட்டு வருந்திக் கிடந்த அம்மையார்க்கும் அமைச்சனார்க்கும் அருளிய வரலாறுகளும் குறிப்பு. நோக்கி - அழுந்தி உளத்தில் உணர்ந்து களித்து.
  இருள் கெட மண்ணில் வந்தார் - பிள்ளையார்; "பரசமய நிராகரித்து நீறாகக்குதல்" ஈண்டு இருள் கெடுத்தல் எனப்பட்டது. ஆணவ இருள் போக்கிச் சிவஞான வொளிதருதலும் குறிப்பு.
  அமர்தல் - விரும்பி எழுந்தருளியிருத்தல்; அன்றே - அந்நாளில்.
  IX திருவாலவாய்
  திருச்சிற்றம்பலம் திருவியமகம் பண் - பழம்பஞ்சுரம்
 
ஆல நீழ லுகந்த திருக்கையே யான பாட லுகந்த திருக்கையே
பாலி னேர்மொழி யாளொடு பங்கனே பாத மோதலர் சேர்புர பங்கனே
கோல நீறணி மேதகு பூதனே கோதி லார்மன மேவிய பூதனே
ஆல நஞ்சமு துண்ட களத்தனே யால வாயுறை யண்டர் களத்தனே.
 

(1)

 
நக்க மேகுவர் நாடுமோ ரூருமே நாதன் மேனியின் மாசுண மூருமே
தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தார முய்த்தது பாணற் கருளொடே
மிக்க தென்னவன் றேவிக் கணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்
கணியையே
அக்கி னாரமு துண்கல னோடுமே ஆல வாயர னாருமை யோடுமே.
 

(6)

 
ஈன ஞானிக டம்மொடு விரகனே யேறு பல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆன காழியுண் ஞானசம் பந்தனே ஆல வாயினின் மேயசம் பந்தனே
ஆன வானவர் வாயினு ளத்தனே அன்பரானவர் வாயினு ளத்தனே
நானு ரைத்தன செந்தமிழ் பத்துமே வல்ல வர்க்கிவை நற்றமிழ் பத்துமே.
 

(11)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- இறைவர் செய்தருளிய திருவருட் பேற்றின் மகிழ்ச்சி மீக்கூரப் பாடியது(2767).
  பதிகப் பாட்டுக் குறிப்பு:- (உதாரணத்துக்காகச் சில குறிப்புக்கள் மட்டும் ஈண்டுத் தரப்படுவன. எனைய முற்றும் நற்றமிழ் வல்ல நல்லோர்பாற் கேட்டுணர்க.) -(1) இருக்கை - (1) இருப்பிடம்; (2) புரபங்கன் - புரத்தினைப் பங்கஞ் (சிதைவு) செய்தவன்; ஓதலர் - ஓதாதவர்; பூதன் - (1) திருஉடம்புடையவன்; (2) பூதகணங்கட் கிறைவன்; (1) களத்தன் - களம் - கழுத்து; கழுத்தினை உடையவன்; (2) அண்டர்கள் அத்தன்;- (2) மாலையே - (1) விட்டுணுவையே ஒருபாதியாய் உடலிற் கொண்டது; (2) மாலை - அவர்மாலை; தார்; (1) ஆகன் - உடம்பினன்;