1090திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

ழு
  (2) மான் இடம் ஆகன் - இடக்கையில் மானை உடையவன்; ஆகன் - ஆயினவன்; ஆனையே - (1) ஆன் ஐந்தினையே ஆடுவது; (2) ஆனையினையே உரி செய்தது; வாயிலே - (1) வாயினிடமாக வேதம் வெளிப்படுப்பவன்; (2) ஆலவாயிலே - ஆலவாய்க் கோயிலே ஊர்;- (3) கத்தன் (1) முழவு முதலிய பல ஓசைகளை உடையவன்: (2) தம் அகத்தன் - அகத்தில் விளங்குபவன்; விருப்பன்; இருப்பன்; (1) அப்பன் - அப்பு - நீர்;- (4) (1) இருத்தி - செல்வம்; (2) இருத்தி - இருக்கின்றாய்; 91) மிகுகண்டனே - சிறந்த கழுத்தினையுடையவனே; (2) கண்டனே - புறச்சமய கண்டனஞ் செய்தவனே; விழித்தி - விழி செய்தாய்; இழித்தி - இழிவு செய்வாய்;--(5) இப்பாட்டில் முன்பாட்டுக்களிற்போல அடிதோறும், அடிகளின் பகுதிகளிலும் வெவ்வேறு பொருள்கள் பற்றி மடக்குவாரது சண்டீச நாயனார் சரிதம் ஒன்றேபற்றி மடக்குக்கள் வந்தமை காண்க. நின்னுருவாகத் தடவியே - "மடுத்த ருணையாற் றடவி"(1259) விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனார், அங்கண்மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்....சூழ்ந்த வொளியிற் றோன்றினார் (1260) என்ற சரிதத்திற்கு ஆதரவு;- (6) நாடும் ஓர் ஊரும் நக்க உருவுடன் பலிக்கு ஏகுவர்; மாசுணம் (பாம்பு), ஊரும்(தவழும்). தார முய்த்தது பாணற் கருளொடே - இதனையே "திருநீலகண்டப் பாணர்க்கருளிய திறமும் போற்றி" என்று ஆசிரியர் வரலாறு காட்டிப் பொருள் விரித்தருளினர். தாரம் - இசை; தாரம் உய்த்தது - இசை பாட அருளியது; தாரம் - அரியபண்டம் என்று கொண்டு பொற்பலகையிட்ட செய்தி குறித்ததென்பது மமையும். "கடற்பஃ றாரத்த நாடு கிழவோயே"(புறம்.30); கணியை - (1) கணிக்கப்படுபவன்; (2) அணியை - எளியையாக நெருங்கியிருப்பவன்; தேவிக்கு அ(ண்)ணிய நல்கிய - அணி - மங்களநாண் என்று கொண்டு மங்கையர்க்கரசிக்கு அவரது திருமங்கிலியத்தை விளங்கவைத்தவர் என்றலுமாம். (1) ஓடும் - "ஓடே கலன்" - உண்கலம்; (2) ஓடுமே - ஓடும் மூன்றாவதன் உருபு;- (7) (1) குட்டியே பல உகுத்தது - தலையில் குட்டிப் பல் உதிரச் செய்தது(வீரம்); (2) குட்டி - இளநாகம்; மெய்யன் - (1) மெய் - உடம்பு. (2) மெய் - உண்மை; காளம் - (1)விடம்; (2) கங்காளம் - எலும்புக் கூடு; "கங்காளரா"; வீணையே - (1) வீண் + ஐ (இரண்டனுருபு); (2) வீணை - இயம். --(8) இப்பாட்டு முழுமையும் 5-வது பாட்டிற்போல இராவணன் சரித வரலாறு ஒன்றேபற்றி மடக்குக்கள் வந்தமை கண்டுகொள்க;- (9) மாலொடே (2) மால் - மயக்கம் - அகந்தை; இடக்கை - (1) இடதுகை;- (10) நல்கானையே - நல்காதவனையே. நல்குதல் - அருள் கொடுத்தல்; "நாடொறு நல்குவா னவன்"(தேவா); (2) கானையே - கான் - காடு; தவஞ் செய்யச் சேருமிடம் என்க; காளை - திருக்கானபேர் - என்றலுமாம் -(11) விரகன்-(1) விரவாது முனிபவன்.
2769
பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளா ரமணர் சேரும்
பாழியு மருகர் மேவும் பள்ளியு மான வெல்லாங்
கீழுறப் பறித்துப் போக்கிக், கிளரொளித் தூய்மை செய்தே
வாழியப் பதிக ளெல்லா மங்கலம் பொலியச் செய்தார்.
 

871

  (இ-ள்) பூழியன்...புறத்துளார் - பாண்டியனது மதுரை யிலுள்ளார்களும் மதுரையின் புறத்துப் பல இடங்களிலும் உள்ள மாந்தர்களும்; அமணர்.....நோக்கி - சமண குருமார் தங்கிய பாழிகளும் அவர்தங் கடவுள் இடங்கொண்ட பள்ளிகளும் ஆகிய எல்லாவற்றையும் கீழ்நிலங் காண அகழ்ந்து போக்கி; கிளரொளித் தூய்மை செய்தே-