[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1091

ழு
  ஒளிபெருகத் தூய்மைப்படுத்தி; வாழி....செய்தார் - வாழ்வுபெறும் அப் பதிகளெல்லாவற்றிலும் சிவத்துவமாகிய சின்னங்களை விளங்கச் செய்தனர்.
  (வி-ரை) பூழியன் - பாண்டியனுடைய; ஆறனுருபு தொக்கது.
  மதுரையுள்ளார் - புறத்துளார் - மதுரை மாநகரத்திலும், நகரத்துப் புறம்பு பாண்டிநாட்டிலும் உள்ள மாந்தர்கள்; பொலியச்செய்தார் என்ற வினையுடன் கூட்டி முடிக்க.
  அமணர் சேரும் பாழி - அமண குருமார் தங்கும் மடங்கள். அருகர் மேவும் பள்ளி - அருகக் கடவுள் கோயில்; "பள்ளியொடு பாழிகளும் கூடவிடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்"(1411). ஆன எல்லாம் - ஆன - முன் இல்லாது இடையில் தோற்றலாயின்.
  கீழுறப் பறித்துப் போக்கி - அவர்கள் கட்டிய அடிமட்டம் கீழ்அளவு காணப்பறித்து அப்புறப்படுத்தி.
  போக்குதல் - இருந்தவாறே வேறு பயன்படுத்திக் கொள்ளலாமே? எனின், பின் ஒருகால் இவை முன்னைநிலைமை பெற உதவவும் கூடுமாதலின் அவ்வாறு அக்கேட்டிற்குத் துணைபுரியாவண்ணம் போக்குதல் வேண்டப்பட்டதென்க.
  கீழுறப் பறித்தல் எற்றுக்கெனின், அவற்றின் தூய்மையற்ற தன்மை மீண்டும் முளையாவண்ணம் வேரறக் களைதற்கென்க; இந்நாளினும் உருகியா நாட்டினர் முன்னிருந்த அரச குடும்பத்தைக் களைந்து குடித்தனியரசு நாட்டியபின் அவர்தம் முன்னைத் தொழுமிடங்களை யெல்லாம் வேரற இடித்து மண்ணையும் அகழ்ந்து எறிந்து பின்னரே அவ்விடத்துத் தம் அரசாங்கக் கட்டிடங்களை அமைத்த சரித நிகழ்ச்சிகள் அம் மனப்பான்மையின் உறைப்பினை விளக்கும்.
  கிளரொளித் தூய்மை செய்தே - ஒளி கிளரும் தூய்மையாக்கி; முன்னர் உண்மைவிளக்கமின்றி அஞ்ஞானஇருள் நிறைந்திருந்தமையால் அவ்விடத்தை உண்மை விளங்கும் இடங்களாக ஆக்கி; ஏகாரம் - தேற்றம்; செய்த பின்பே.
  வாழி அப்பதிகள் - வாழி - வாழ்வு பொருந்திய.
  மங்கலம் - சிவத்தன்மை காட்டும் குறிகள்; சைவ அடையாளங்கள்; சிவச் சின்னங்களாகிய இடபக்கொடி, சூலம், இடப இலச்சினை முதலியவை நாட்டுதலும், மெழுகுதலும் வெண்சுதை போக்குதலும் முதலாயின.
 

871

2770
மீனவன் றேவி யாருங் குலச்சிறை யாரு மிக்க
ஞானசம் பந்தர் பாத நாடொறும் பணிந்து போற்ற
ஆனசண் பையர்கோ னாரு மாலவா யமர்ந்தார் பாதம்
ஊனமர்ந் துருக வேத்தி யுளங்களித் துறையு நாளில்,
 

872

 

வேறு

2771
செய்தவத்தாற் சிவபாத விருதயர்தாம் பெற்றெடுத்த
வைதிகசூ ளாமணியை மாதவத்தோர் பெருவாழ்வை
மைதிகழுந் திருமிடற்றா ரருள்பெற்ற வான்பொருளை
எய்தியபூம் புகலியிலே யிருந்தநாண் மிகநினைந்தார்.
 

873

  2770. (இ-ள்) மீனவன்....போற்ற - பாண்டியரது தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் மிகுந்த சிவஞானசம்பந்த நாயனாருடைய திருவடிகளை