| கண் விடுத்தல் - குருடாகிய கண் திறப்பித்தல்; பாண்டி நாட்டு மக்களது நன்றி பாராட்டுமுணர்ச்சி குறித்தது காண்க. |
| காழியார் இளவேறு - சீகாழிப்பதியவர்களது இளஞ்சிங்கம் போன்ற தலைவர்; ஏறு - பொதுப்பெயர்; ஆண்சிங்கம் என்ற பொருளில் வந்தது; காழியார் - சீகாழி இறைவராகிய தோணியப்பர் எனக் கொண்டு அவரது சிவஞானமுண்டருளிய மதலையார் என்ற குறிப்புடனும் நின்றது. |
| செங்கமலத் திருமடம் - திருமடத்தைத் தாமரைபோன்ற தென்றது "தாமரைமிசைத் தனிமுதற் குழவியென்ன" (1939) என்ற உவமையின் கருத்தைத் தொடர்ந்து கொண்டு கூறியபடி; ஆண்டுரைத்தவை பார்க்க. "மலர்மகட்கு வண்டாமரைபோன் மலர்ந் தலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்" (97) என்புழிப்போலச் சைவமெய்த் திருவையளிக்கும் பிள்ளையார் தங்குமிடமாதலின் திருமடத்தினைச் செங்கமலம் என்றார். செங்கமலத்தில் வாழும் இலக்குமிக்கு மிடமான திருமடம் என்றுரைத்தனர் முன் உரைகாரர்; அது பொருந்தாமை காண்க. |
| திருநீற்றுத் தொண்டர் குழாஞ் சாருமிடம் - தமது முன்னைச்சார்புகள் கெடத்தமது நற்சார்பு இதுவென உணர்ந்துகொண்டு திருநீற்றுத் தொண்டர்கள் கூட்டமாக வந்து சார்கின்ற இடமாமென்பது. திருநீற்றினை ஆக்கம் செய்த பிள்ளையாரது செயலால் 2501ல் கூறியபடி முன்னையிருள் நீங்கித் திருநீற்றுத் தொண்டர் குழாம் பெருகப்பெருக வந்து சார்கின்றது என்று அவர்கள் கண்கூடாகக் கண்ட செய்தியறிவிக்கப்பட்டவாறு. |
| "இது" என்றே - இது என்ற அண்மைச்சுட்டினால் இத்திருமடம் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அணிமையில் இருந்ததென்று கருத இடமுண்டு. என்றே - ஏகாரம் தேற்றம். |
| தெரிந்த உரைத்தார் - தெரிதலாவது கண் விடுத்த தன்மை - செங்கமலமாந் தன்மை என்ற இவற்றின் சிறப்பைத் தாம் உணர்ந்து தக்கார்க்கு எடுத்து உரைக்கும் திறம். தெரிந்து - தெரிந்தமையால். |
| 877 |
2776 | செப்புதலு மதுகேட்டுத் திருமடத்தைச் சென்றெய்த, "அப்பரெழுந் தருளினா" ரெனக்கண்டோ ரடிவணங்கி யொப்பில்புகழ்ப் பிள்ளையார் தமக்கோகை யுரைசெய்ய, "எப்பொழுது வந்தருளிற்?" றென்றெதிரே எழுந்தருள, | |
| 878 |
2777 | சிவபாத விருதயர்தா முன்றொழுது சென்றணையத், தவமான நெறியணையுந் தாதையா ரெதிர்தொழுவார் அவர்சார்வு கண்டருளித், திருத்தோணி யமர்ந்தருளிப் பவபாச மறுத்தவர்தம் பாதங்க ணினைவுற்றார். | |
| 879 |
| 2776. (இ-ள்) செப்புதலும்...சென்றெய்த - முன் பாட்டிற் கூறியவாறு அவர்கள் சொல்லுதலும் அதனைக் கேட்டுச் சிவபாத இருதயர் திருமடத்திற் சென்று சேர; அப்பர்....அடிவணங்கி - அங்கு அவரைக் கண்டவர்கள் அவரை அடிவணங்கிப் போய்; ஒப்பில்....உரை செய்ய - ஒப்பற்ற புகழையுடைய பிள்ளையாருக்கு அந்த மகிழ்வாயின செய்தியைச் சொல்லவே; எப்பொழுது...எழுந்தருள - அவர் "எப்பொழுது வந்தருளிற்று?" என்று வினவிக்கொண்டு எதிரில் எழுந்தருளி வர; |
| 878 |