1102திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  பற்றுமில்லை; "மற்றுப்பற் றெனக்கின்றி" (தேவாரம்); பெற்று எனையாளுடைய - பெறுதல் - ஞானப்பாலுதவி மகவாகப் பெற்று;- (7) குறைவு - அணைவதும் - துன்பத்தை அனுபவித்தலும்; கறை - இருள்பொதி நிழல் என்ற பொருளில் வந்தது;- (8) அரக்கனார் - பன்மை இகழ்ச்சிக்கண் வந்தது; நீர் - நீர்மை; அருள்;- (9) நெடியவன் - விட்டுணு; ஆர்உறும் - மேலழகு படும்; தார் - உறு - தட்டுடை - பாய் உடுக்கை;- (11) தேன் - வண்டினம்.
2780
திருப்பதிகந் திருக்கடைக்காப் புச்சாத்திச் சிறப்பின்மிகு
விருப்பினா லவர்தமக்கு விருந்தளித்து மேவுநாள்
அருப்புறுமெய்க் காதல்புரி யடியவர்க டம்மோடும்
பொருப்புறுகைச் சிலையார்சேர் பதிபிறவுந் தொழப்போவார்;
 

882

2781
ஆலின்கீழ் நால்வர்க்கன் றறமுரைத்த வங்கணனை
நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக்
காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார்
சீலங்கொ டென்னவனுந் தேவியரு முடன்போத.
 

883

  2780. (இ-ள்) திருப்பதிகம்...சாத்தி - திருப்பதிகத்தினைத் திருக்கடைக்காப்புச் சாத்தி முடித்தருளி; சிறப்பின்மிகு...மேவுநாள் - மிக்க சிறப்பினுடன் விருப்பத்தினாலே அத்தாதையார் தமக்கு விருந்தமுதளித்துக் களித்துப் பொருந்தியிருக்கும் நாள்களிலே; அருப்புஉறு....போவார் - அரும்புபோலப் புதிதின் மலர்கின்ற உண்மையன்பு மிகுதியினால் திருத்தொண்டினை இடையறாது நினைந்து செய்யும் அடியவர்களோடும், மலையினையே வில்லாகக் கையில் ஏந்திய இறைவர் எழுந்தருளிய பிற பதிகளையும் சென்று தொழுவதன்பொருட்டுப் போவாராகி;
 

882

  2781. (இ-ள்) ஆலின்...அங்கணனை - கல்லாலமரத்தின் கீழே நான்கு முனிவர்களுக்கு அறங்களை உபதேசித்தருளிய அங்கணராகியவரை; நூலின்கண்...ஈந்தானை - தமிழ் நூல்களுள்ளே சிறந்த பொருளிலக்கணத்தைப் பாடி நூலறியும் சங்கப் புலவர்களுக்கு ஈந்தருளியவரை; காலம்பெற்று....கைதொழுது - உரிய காலம் சேரப் பெற்று இனிதாக வணங்கிக் கைதொழுது; சீலம்....போத - சீலவொழுக்கத்தினை மேற்கொண்ட பாண்டியனும் அவரது தேவியாரும் தம்முடன் கூடவர; புறம் போந்தார் - புறத்திலே போந்தருளினர் (பிள்ளையார்);
 

883

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  2780. (வி-ரை) சிறப்பின் மிகு விருப்பாவது - "அவர்சார்பு கண்டருளித் திருத்தோணி யமர்ந்தருளிப் பவபாச மறுத்தவர்தம் பாதங்கள் நினைவு" நின்ற சிறப்பினால்வரும் பெருவிருப்பம்.
  விருந்து - தாதையார் பழஞ்சுற்றமாய் ஒக்கல் எனப்படுவாராயினும் ஈண்டுத் திருத்தோணியமர்ந்தார் பாதங்களின் நினைவு கொள்ளும்தோறும் புதிது புதிதாய் வருவதொன்றாதலின் விருந்தென்றார். விருந்து - புதிதின் வருவோர்; அதிதிகள்; இங்கு விருந்தென்றது விருந்திற்குச் செய்யு முபசாரத்தினை; "யாதுசெய் வேன்கொல் விருந்து"(குறள்).
  அருப்புறு மெய்க்காதல் - புரி - அருப்புறுதல் - அரும்புபோல அவ்வப்போது புதிதின் மலர்தல்: உறு - உவமவுருபு; அரும்பு - அருப்பு - என எதுகை நோக்கி வலிந்து வந்தது. காதல் - அன்பின் செறிந்தவிளைவு; ஈண்டு அதனால் விளையும்