| வந்தருளும் செல்வர் - "நீறணிந்த செல்வர்" எனப்பட்ட இறைவரது தன்மை இவரும் பெற்றவர் என ஈண்டும் செல்வர் என்றார். |
| ஏறு அணிந்த - ஏற்றினைக் கொடியில் அழகுபட வைத்த. |
| வெல்கொடி - எஞ்ஞான்றும் வெற்றியேயன்றிப் பிறிதில்லாதது. |
| திருப்புத்தூரை...இருந்தார் - திருப்புத்தூர் அந்நாளினும் அரசாங்கத் தொடர்புடைய பெரும்பட்டினமாயிருந்தமை சரிதங்களா லறியப்படும்; பாண்டி நாட்டுப் பெருந் தலங்களுள் ஒன்று; தலவிசேடம் பார்க்க. |
| எய்தியிறைஞ்சிச் சிலநாள் - எய்தியிறைஞ்சிப்பாடி - என்பனவும் பாடங்கள். |
| திருப்பரங்குன்றம் |
| திருச்சிற்றம்பலம் பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை |
| நீடலர் சோதி வெண்பிறை யோடு நிறைகொன்றை சூடல னந்திச் சுடரெரி யேந்திச் சுடுகானில் ஆடல னஞ்சொ லணியிழை யாளை யொருபாகம் பாடலன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே. | |
| (1) |
| மைத்தகு மேனி வாளரக் கன்றன் மகுடங்கள் பத்தின திண்டோ ளிருபதுஞ் செற்றான் பரங்குன்றைச் சித்தம தொன்றிச் செய்கழ லுன்னிச் சிவனென்று நித்தலு மேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே. | |
| (8) |
| தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன் படமலி நாக மரைக்கசைத் தான்றன் பரங்குன்றைத் தொடைமலி பாடல் பத்தும்வல் லார்தந் துயர்போகி விடமலி கண்ட னருள்பெறுந் தன்மை மிக்கோரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- சிவனதிடமாகிய பரங்குன்றத்தைச் சிவனென்று ஏத்துவோர் மேற் றொல்வினை நில்லா. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சூடலன் - சூடலை உடையவன்; ஆடலன் - ஆடல் செய்பவன்; பாகம் பாடலன் - பாகம் வைத்துப் பாடல் புரிபவன். பாடல் - மறை; வரும் பாட்டுப் பார்க்க; அதனுள் தேன்மொழி என்ற குறிப்புமிது;- (2) தேன்மொழி - தேன் போன்ற மொழியையுடையவள் - உமையம்மையார்;- (3) பாரிடம் - பூதகணம்;- (6) தொடை நவில்கின்ற - தொடுத்த அளவாலே செயல் விளைகின்ற; தொடை - தொடுத்த செயல்; நவிலுதல் - செய்தல் என்ற பொருளில் வந்தது;-(8) சித்தமதொன்றி....ஏத்த - சிவனை வழிபடும் நிலையினையும் மந்திரத்தினையும் உபதேசித்தருளியபடி; 1-2-3-4-9 பாட்டுக்களில் அம்மையோடிருக்கும் நிலையினைப் போற்றி, அத்தன்மை குறிக்கும் மகாமந்திரத்தையும் அருளியவாறு காண்க; தொல்வினை நில்லா - என்றதனால் பழவினையேயன்றிப் பின்னர்த் தேடிக்கொள்ளப்படும் வினையும் உடல் முகந்துகொண்ட வினையும் ஒழியும் என்பது பெறப்படும். 10-வது பாட்டும் இக்கருத்தினை வற்புறுத்தியவாறு; பரங்குன்றத்தினைச் சிவனே என்று வழிபடுக என்றதாம். அப்பெருங்குன்றம் மெய்யும் உருவும் சிவவடிவாய்த் திகழ்வதும் கருதுக. நம்மேல் நில்லா என்றதனால் "இன்றோரிடையூ ரெனக்குண்டோ" திருவா) என்றபடி பழவினையும் உடலூழாய்க் கழிவ |