[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1109

பதி பிறவும் - இவை பழமுதிர்சோலை - திருவாதவூர் முதலாயின என்பது கருதப்படும்.
திருப்புத்தூர்
திருச்சிற்றம்பலம் பண் - தக்கராகம் - 1-ம் திருமுறை
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையு மிறையாரே.

(1)

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேட ருறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்ல றீரு மவல மடையாவே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- திருப்புத்தூர் உறைவார் எமது இறைவர்.
பதிகப் பாட்டுக் குறிப்பு:-(1) வெம் கள் - வெம்மை - விருப்பம்; விம்மு - மிக்க; சோலை திங்களோடு திளைத்தல் - என்றது சோலை சந்திரமண்டலத்தளவும் நீண்டு வளர்ந்து சந்திரனோடு அளாவுதல்; அவர் போலும் இறையார் - அவரே எமது இறைவர்; போலும் என்பது உடன்பாடு பற்றிய உறுதிப்பொருள் தந்தது;- (2) வேனல் விம்மு வெறி - வேனற் காலத்தில் பூக்கள் மிக்கலர்ந்து மணமிக்கன வாதல் குறித்தது; தேன் - ஒருவகைத் தேன்வண்டு; ஊனம் இன்றி - அடியார் மேல் ஊனத்தை இல்லையாகச் செய்து; நன்கு என்றலுமாம்; ஏனமுள்ளும் எயிறும் - முள்ளம் பன்றியின் முள்; வராகத்தின் கொம்பு;-(3) தாங்கு திங்கள் தவழ் - தாங்குதலினால் நிலைபெற்ற மதி தவழும் வலி பெற்ற; கொன்றை - தலமரமுமாதற் சிறப்பு;-(4) ஊறல் - சுரத்தல். ஊறல் வாழ்க்கை - இங்குக் கருணையே சுரக்கும் தன்மை குறித்தது. "கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்"(தேவா);-(5) பசை விளங்கப் படித்தார் - முன் 4-பாட்டில் "ஊறல் வாழ்க்கை யுடையார்" என்ற கருத்து. பசை - ஒட்டுந் தன்மை. இங்குக் கருணை குறித்தது. பச்சை என்பது எதுகைநோக்கி இடை குறைந்தது எனக்கொண்டு அதற்கேற்ப உரைத்தலுமொன்று. படித்தல் - பயிலுதல்; காட்டுதல்; வசை விளங்கும் வடி - வசை - மன்மதனை எரித்த தன்மை வசை எனப்பட்டது; வடி - கூரிய தன்மை குறித்தது; ஒரு கணப்போதில் எரித்த திறம் வடி எனப்பட்டது; வடி - அத்தன்மை கொண்ட கண்ணுக்கு வந்தது - ஆகுபெயர்;-(6) வெண்ணிறத்த - புனல் - எனக் கூட்டுக; நீருக்கு நிறம் வெண்மை என்பது சாத்திரம். "பொன்பார் புனல் வெண்மை - (உண்மை விளக்கம் - 5); தெண்ணிறத்த - தெளிந்த தன்மை; ஒண்ணிறத்த - ஒண்மை - ஞானம். இப்பாட்டில் நிறத்த - சொற்பின் வருநிலை;-(8) கருக்கம் - கார்மேகம். கமழ்தல் - செழிக்கத் தங்குதல் என்ற பொருளில் வந்தது. "மஞ்சும் அங்கவை பொழிந்தநீரு மாகுதிப் புகைப்பா னாறும்"(834) என்றவிடத் துரைத்தவையும் பிறவும் அறிவிக்குமாறு. கமழும் - ஆகுதிப்புகை மணக்கும் என்றலுமாம். திருக்கொள் செம்மை விழவு - இறைவரது திருவிழா. திரு - முத்தித் திரு. செம்மை - நன்மை. "கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்"(பிள். தேவா);