| குணங்கணீ"(தேவா); "மெய்ம்மையும் பொய்ம்மையு மாயினார்க்கு"(திருவா); - (7) கைவாழ்...ஓவா - அம்மை யின்பச் சாதனங்களேயன்றி உலகபோக இன்பங்களாலும் குறைவில்லாத செழுநகர் என்பது குறிப்பு; "பாடலோடு மாடலோங்கி" என மேல்வரும் பாட்டும் பார்க்க; - (8) கூட - அழித்தீலுடன் கூடவே; கொள்கையினார் - 1974 பார்க்க; ஓங்கி - உயர் என்று கூட்டுக; ஓட நீர் - ஓடத்தால் கலக்கும்படி செழித்து ஓடும் நீர்; - (10) புனலை நீத்தவர் - உடல் கழுவாதவர்; "கழுவாவுடலம்" (11-ம் திருமுறை - ஆளு. பிள்- அந் - 28); மாயம் வைத்த - அவர் தமது கன்மங்களை அனுபவிக்கும் பொருட்டு மறைப்பினைக் கொடுத்த; மாயம் - ஈண்டு மறைப்பு என்ற பொருளில் வந்தது. மாயம் வைத்தானாகியும் நின்மலன் - என்க; "நலமில னண்ணார்க்கு - சலமிலன்"(திருவருட்); "சார்ந்தாரைக் காத்துஞ் லமிலனாய்" (சிவஞானபோதம் - 10); "சார்ந்தவர்க் கல்லா னலமிலன்" (தேவா); மலைபோல் மாளிகை - பரிசு - மூவேந்தரும் வந்து வணங்கும் பரிசும், அந்நாள் உலகநிலையுயர்வுடனும் விளங்கிய நகரின் பரிசும்; புரிசை - மதில்கள்; மாடமோங்கும் என மேல்வரும் பாட்டும் பார்க்க. திண்ணார் - அருகர் புத்தராதி புறவுரையாளர்கள். உட்குதல் - அஞ்சியொழிதல். |
| தலவிசேடம்:- III பக்கம் 692 பார்க்க; ஒரு அடியார் சிறப்பாக நந்தவனம் வைத்து வழிபட்டமையால் இப்பெயரெய்தியதென்பர். |
| திருக்கானப்பேர் (திருக்காளையார் கோயில்) |
| திருச்சிற்றம்பலம் பண் - கொல்லி 3-ம் திருமுறை |
| பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங் கடியுலாம் பூம்பொழிற் கானப்பே ரண்ணனின் னடியலா லடைசர ணுடையரோ வடியரே. | |
| (1) |
| காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர் கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான் நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன பாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- கானப்பேர் அண்ணல் அடியே சரணாவது; அதனைக் கருதலும் தொழுதலுமே கருமம்; அதனை ஞானநீர் பெய்து மலரால் வழிபடுவோர் நன்மை பெறுவர். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) தேவேந்திரனது ஐராவதம் என்னும் யானை சாப நீக்கத்தின் பொருட்டுத் தமது பிடியுடன் வழிபட்ட சரிதம் குறித்தது; தலவிசேடம் பார்க்க; 7-10 பாட்டுக்களும் பார்க்க. விதி - வழிபாட்டுக்காக உள்ள நூல் விதி; சரபநீக்கத்தின் பொருட்டு விதிக்கப்பட்ட விதி என்றலும் குறிப்பு. சரண் - அபயம் புகுமிடம்; - (2) நுண் இடை - பேரல்குல் - முரண் அணி; - (3) காவி - கருங்குவளை; நாவி - கத்தூரி; உ(ள்)ளும் - என்பன ஓடு என்ற மூன்றனுருபின் பொருளில் வந்தன. உம்மை எண்ணும்மைகள்; மேல்வரும் (4) பாட்டினும் இவ்வாறே கொள்க. ஞானநீர் - உரிய மந்திரம் கிரியைஞான பாவனைகளால் தூய்தாக்கப்பட்ட நீர்; அபிமந்திரித்த நீர் என்பது மரபு. நீரினை மந்திரித்துச் சாந்தும் மலரும் |