1114திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

I திருக்குற்றாலம்
திருச்சிற்றம்பலம் பண் - குறிஞ்சி 1-ம் திருமுறை
வம்பார் குன்ற நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
அம்பா னெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலு நமரங்காள்!

(1)

மாட வீதி வருபுனற் காழி யார்மன்னன்
கோட லீன்று கொழுமுளை கூம்புங் குற்றாலம்
நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- நமரங்காள்! தன்சாரற் சோலைக் குற்றாலம் நம்பான் மேய நன்னகர் போலும்!
பதிகப் பாட்டுக் குறிப்பு: -(1) வம்பு - மணம்; யாழ் செய் - யாழ்போலப் பாடும்; ஆடல் - திருக்கூத்தின் குறிப்புமாம்; நம்பான் - இறைவன்; நகர் போலும் - நகர்தானே; நமரங்காள் - நம்மவரே! அடியீர்காள் - சிறுதொண்டீர் - பெரியீர்காள் - தொழுவீர்காள் என இப்பதிகம் அடியார்களை நோக்கி வினாவிய அமைப்புடையது; -(2) பொடிகள் - திருநீறு - சுண்ணம் முதலாயின; சிறப்புப் பன்மையுமாம்; "பொடிகள் பூசிப்பல தொண்டர் கூடிப்புலர் காலையே"(செவ்வழி - திருத்திலதைப்பதி - 1); பின் செல்ல - விழாமல்கு என்று கூட்டுக; திருவாரூர்(குறிஞ்சி) அரசுகள் பதிகம் பார்க்க; நாள்விழ - நாட்கூற்றின் அமைப்பினைப் பின்பற்றிய விழா. நாள் - புதிது ஆகிய; -(3) செல்வம் - ஈண்டுச் செழிப்பு என்ற பொருளில் வந்தது; வில்லின் - வில்லினால்; ஒல்க எய்து என்க; -(4) பக்கம் - பக்கங்களில் கன்றுகள் புடைத்துத் தோன்றிப் பெருகும்; தூங்குதல் - தொங்குதல்; -(6) மைம்மா நீலம் - மைம்மா - மிக்க கருமை குறித்தது; ஒப்புதல் - கடிதல்; -(8) அருவி புடைசூழ - பல முகங்களானும் அருவிகள் எப்பக்கங்களினும் சூழ்ந்து ஓடி வீழ; கூதன் மாரி நுண்துளி தூங்கும் - இது குற்றாலத்தின் பருவச் சிறப்பு; ஆனி - ஆடி மாதங்களின் சிறப்பு; மிறை - தண்டனை; -(9) குராமலரின் அரும்பு பாம்பின் பல்போலக் கூரியதாய் வளைந்து உட்டுளையுடையதாய் மெல்லிதாய் வெள்ளிதாய் உள்ள தன்மை குறித்தது; மெய்யும் உருவும்பற்றி வந்த வுவமம்; "தூம்புடை வாலெயிறு"(முருகு); குரவம்பாவை - உருவகத்தாற் குராமலருக்கு வழங்கும் பெயர். குராமலர் விரிந்தபோது ஆடும் பாவைபோன்று காட்டும். "வைக லாயிரம் பாவையை வளர்ப்போய்...குரவே"(திருவாரூர் - மும்மணிக் கோவை - 16); -(10) செவ்வழி - பண்; "சிவந்த வண்டு வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடு மிழலை யாமே"(தேவா); அருந்தண் - அரிய (தட்பம்) தண்ணளியுடையவன்; அந்தணன் என்பது போல; -(11) கோடல் - வெண்காந்தள்; கூம்புதல் - குவிதல். குறிப்பு - இப்பதிகப் பாட்டுக்கள் குற்றாலவள நகரின் இயற்கை வளத்தின் அழகை அருமைபடத் தன்மையணியில் வைத்துக் காட்டுவன. இப்பதிகம் குற்றால நகரைப் பற்றியது. நகரின் புறத்திருந்து அருளப்பட்டது போலும்; "நன்னகர் போலும்"(பதிகம்). திருமுதுகுன்றம் - திருவிடைமருதூர் முதலிய பதிகளின் பதிகங்களும், அவற்றைப் பற்றி ஆசிரியர் எடுத்துக்காட்டுமாறும் (2079 - 2311)காண்க.