1116திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

"தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று" (1094); மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து - சண்பகமரத்தில் மல்லிகை படர இரண்டும் ஒருங்கே பூத்து; "குருந்த மேறிக் கொடிவிடு மாதவி" (தேவா): -(10) முன்-பின் - காலம் குறித்தன; கூறுண்டு ஏறுதல் - பலபடப் பிதற்றி மீக்கூர்ந்து ஆரவாரித்தல்; காடி - புளித்த கஞ்சி; தொடுதல் - உண்ணுதல்; நீடுயர்...செய்ய - "மந்தி, கானமுது வேயின் கண்ணேறித்-தானங், கிருந்துயரக் கைநீட்டும்" (ஈங் - எழு - 68); கைமறித்தல் - கைகொட்டி மகிழ்தல்.
தலவிசேடம்;- திருக்குற்றாலம் - பாண்டி நாட்டுப் பாடல்பெற்ற பதிகளுள் பதின்மூன்றாவது தலம்; இங்குக் கூத்தர் கோயில் என்றது அழகிய பழங்கோயில்; இது தேவார திருவாசகப் பாடல்பெற்ற கோயில். குறும்பலா என்ற கோயில் அருவியினை அடுத்து வடகரையில் உள்ளது. அங்கு உள்ள தலமரம் குறும்பலாவாதலின் இக்கோயில் இப்பெயர் பெற்றது. பலாவின் பெயர் அது உள்ள ஆலயத்துக்கு வந்தது. குறும்பலா என்பது பலாவின் ஒருவகை. கூத்தர் கோயில் குறும்பலாவின் வடக்கில் நகரத்தினுள் சித்திர சபைக்குப் போகும் வழியில் உள்ளது; "குற்றாலத் தமர்ந்துரையுங் கூத்தாவுன் குரைகழற்கே" (திருவா - திருப்புலம்பல்); "உயிர்கொண்டு போம்பொழுது, குற்றாலத்துறை கூத்தனல் லானமக் குற்றாராருளரோ?" (திருவங்கமாலை); "குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்" (தாண் - கோடிகா - 3) முதலிய திருவாக்குக்கள் இத்திருக்கோயிலைப் பற்றியன; ஐம்பெருமன்றங்களுள் சித்திர சபை இதனைச் சேர்ந்தது; இக்கோயில் பழுதுபட்டுக் கவனிப்பாரின்றி இருத்தலும், குற்றாலம் செல்வோரும், அன்பர்கள் பலரும் இதனையறியாமலே யிருத்தலும் வருந்தத் தக்கது. இப்பழந்திருக்கோயிலை இயன்ற அளவு திருப்பணி செய்து புதுக்கி அதன் பழமையை வெளிப்படுத்திப் பலரும் வழிபடும்படி வைப்பது பெரும் புண்ணியமாகும்; குறும்பலாக் கோயில் திருமுற்றம் என்னும் பெயருடைய வைணவத் தலமாயிருந்தது; அவ்வைணவர்கள் தம்மை அவ்வூரினுள் அணுகவும் ஒட்டாது தடுத்துச் சிவநிந்தையும் சிவனடியார் நிந்தையும் செய்து வலிசெய்தமையால், அகத்திய முனிவர் அவர்களது அகந்தையை அழிக்கும் பொருட்டு வைணவ அடியார் வேடத்துடன் சென்று கோயிலினுள் விக்ஷ்ணுமூர்த்தி வடிவின் சிரத்தின்மேற் கைவைத்துச் சிவலிங்க வடிவாக்கினார் என்பதைக் கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்துக் காண்க. அதுமுதல் அக்கோயில் சிவாலயமாகியது என்ப. (1) கூத்தர் கோயில் - சுவாமி - கூத்தர்; அம்மை - சிகாமியம்மை; சபை - சித்திர சபை; தீர்த்தம் - சித்திரா நதி; பதிகம் - 2; குறும்பலா - சுவாமி - குறும்பலா நாதர்; அம்மை - குழல்வாய் மொழியம்மை; மரம் - குறும்பலா; பதிகம் 1.
இத்தலம் தென்காசிச் சந்திப்பு நிலையத்தினின்றும் மேற்கே செவ்விய கற்சாலை வழி மூன்று நாழிகையளவில் அடையத்தக்கது; வண்டி வசதிகளும் உணவு - உறையுள் வசதிகளும் உண்டு. இந்நாள் நாகரிக மக்கள் வேனிலை விளையாட்டாய் உலக இன்பங்கள் பற்றி வீணே கழிக்கும் வேனில் விடுமுறைக் கொண்டாட்ட இடமாகப் பெரும்பாலும் இதனை அறிந்து கொண்டாடுவர்.
2785
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவுஞ் சென்று
நண்ணியினி தமர்ந்தங்கு நயந்து பாடி,
நற்றொண்ட ருடனாளும் போற்றிச் செல்வார்,