| விண்ணவரைச் செற்றுகந்தா னிலங்கை செற்ற மிக்கபெருமி பாதகத்தை நீக்க வேண்டித் திண்ணியபொற் சிலைத்தடக்கை யிராமன் செய்த திருவிரா மேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார். | |
| 887 |
| (இ-ள்) புண்ணியனார்...போற்றி - புண்ணியராகிய சிவபெருமானது திருநெல்வேலியினை வணங்கித் துதித்து; புரிசடையார்...பாடி - முறுக்கிய சடையினையுடைய இறைவரது திருப்பதிகள் பலவற்றையும் சென்று பொருந்தி, விரும்பி எழுந்தருளி அங்கங்கும் விரும்பிப் பாடி; நற்றொண்டருடன்....செல்வார் - நல்ல திருத்தொண்டர்களுடனே நாளும் துதித்துச் செல்வாராகிய பிள்ளையார்; விண்ணவரை...சேர்ந்தார் - தேவர்களை அழித்து மகிழ்ந்தானாகிய இராவணனது இலங்கையினை அழித்த மிகுதியாகிய பெரும் பாதகத்தினைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு வலிய அழகிய வில்லை ஏந்திய பெரிய கையினையுடைய இராமன் தாபித்த திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தருளினார். |
| (வி-ரை) புண்ணியனார் - புண்ணியங்களுக்கெல்லாம் இலக்காயுள்ளவர்; சிவபெருமான்; "புண்ணியா வுன்னடிக்கே"(தேவா); அவனடியார்களும் சிவபுண்ணிய மேலீட்டினால் சிவத்தன்மை பெறுதலால் புண்ணியர் எனப்பெறுவர். "புண்ணியப் பொருளாயுள்ள பொருவில்சீ ருருவி னாரை"(666) என்று கண்ணப்பரையும்; "புண்ணியக்கன் றனையவர்தாம்"(1959) என்று ஆளுடைய பிள்ளையாரையும் கூறியதனையும், "புண்ணியர் போற்றிசைப்ப" (திருவிசைப்) என்றமையும், பிறவும் பார்க்க. |
| இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகம் - "பெரும்பாதகம்" - 1673-ல் உரைத்தவை பார்க்க. இராவணனை வதைத்த ஒன்றான் வந்ததன்றி, இலங்கை முழுதுமழித்தமையால் மிக்க பெரும்பாதக மாயிற்று என்பது. |
| நீக்கவேண்டி -இராமன் செய்த திருவிராமேச்சுரம் - நீக்க - நீக்கிக்கொள்ள; இறைவர் நீக்குதற்காக வேண்டி என்றலுமாம். |
| வேண்டி - வேண்டிக்கொண்டு; இராமனால் தாபிக்கப் பெற்ற கோயிலாதலின் இராமேச்சுரம் எனப்படும் என்பார். இராமன் செய்த இராமேச்சுரம் என்று சொற்பொருள் விரித்தோதினார். ஈண்டும், முன்னரும்(1673) இத்தன்மையாற் கூறியது பிள்ளையாரது இரண்டு பதிகங்களினும், அரசுகளது திருநேரிசையினும் இச்செய்தி பற்றியே அறிவுறுத்தப்பட்டமையை வற்புறுத்தி எடுத்துக்காட்டும் பொருட்டு. |
| திண்ணிய பொற்சிலை - சிவனது வில்லாதலின் திண்ணிய என்றார். பொன் - அழகு; பொற் சிலை - சிவனேந்திய மேருப் போன்றதென்ற குறிப்புடனும் நின்றது. |
| 887 |
| திருநெல்வேலி |
| திருச்சிற்றம்பலம் பண் - சாதாரி - 3-ம் திருமுறை |
| மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. | |
| (1) |
| பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித் திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர் தம்மைப் | |