[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1119

நிகழ்ந்ததென்பர். பதிகம் 2-வது பாட்டில் இக்குறிப்புப் போற்றப்படுகின்றது காண்க. பிட்சாடணர் திருவுருவம் முதற்சுற்றில் தாபித்து வழிபடப்பெறுகின்றது; ஐம்பெருஞ் சபைகளுள் இது தாமிரசபை; சுவாமி - நெல்லையப்பர் - வேணுநாதர்; இரண்டும் தனிச் சந்நிதிகள்; நெல்லையப்பர் கர்ப்பக்கிருகத்தினை அடுத்து அரங்கநாதர் வழிபட்டுப் பள்ளிகொண்டெழுந் தருளியுள்ளார். அம்மையார் - காந்திமதியம்மை; தீர்த்தம் - தாமிரவருணி; துறை - சிந்துபூந்துறை; சிந்திய எலும்புகள் பூக்களாயின என்பது வரலாறு; சுவாமியம்மை யாலயங்கள் மிகப் பெரியனவாய் அழகிய அமைப்புடைய தனிக் கோயில்கள்; பதிகம் - 1.
திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தினின்றும் மேற்கே கற்சாலைவழி இக்கோயில் 1 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது; நகரத்தினிடையே இருப்புப்பாதை செல்கின்றது. கோயிலுக்கு அணிமையில் மேல்புறம் திருநெல்வேலி டவுன் நிலையம் 1/2 நாழிகையளவில் உள்ளது.
திருப்பதிகள் பிறவும் - இவை திருப்புடைமருதூர் (திருப்பிடவூர்), திருஅகத்தீச்சுரம், திருச்சுழியல், திருவுத்தரகோசமங்க முதலாயின என்பது கருதப்படும்.
2786
செங்கண்மால் வழிபட்ட கோயி னண்ணித்
   திருமுன்பு தாழ்ந்தெழுந்து தென்னனோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமு மெய்ம்மை
   மந்திரியா ருஞ்சூழ மணிநீள் வாயில்
பொங்கியெழும் விருப்பினா லுடனே புக்குப்
   புடைவலங்கொண் டுள்ளணைவார் போற்றி செய்து
பங்கயச்செங் கைகுவித்துப் பணிந்து நின்று
   பாடினார் மன்னவனும் பரவி யேத்த.

888

(இ-ள்) செங்கண்....நண்ணி - சிவந்த கண்களையுடைய திருமால் (இராமாவதாரத்தில்) தாபித்து வழிபட்ட திருக்கோயிலைச் சேர்ந்து; திருமுன்பு....அணைவார் - அதன் திருமுன்பு வீழ்ந்து எழுந்து அரசனோடும் மங்கையர்க்கரசியாரும் உண்மை ஒழுக்கத்துள் நிற்கும் மந்திரியாராகிய குலச்சிறையாரும் தம்மைப் பின்பற்றிச் சூழ்ந்து வர; உடன் - அவர்களுடனே அழகிய நீண்ட திருவாயிலினுள் மேன்மேல் எழும் விருப்பத்தினாலே புகுந்து உட்பக்கத்தில் வலமாக வந்து உள்ளே அணைவாராகி; மன்னவனும் பரவி ஏத்த - அரசனும் துதித்துப் போற்ற; போற்றி செய்து....பாடினார் - துதி செய்து தாமரைபோன்ற கைகளைக் கூப்பி வணங்கி நின்று பாடியருளினார்.
(வி-ரை) மால் - திருமால் இராமனாய் வந்த அவதாரங் குறித்தது.
வழிபட்ட - "மதியினான் மால்செய் கோயில்"(தேவா - அரசுகள்); வழிபடுதல் - தாபித்துப் பூசித்தல் என்ற பொருளில் வந்தது. "இராமன் செய்த" என முன்பாட்டிற் கூறியது காண்க.
முன்பு - திருக்கோயிலின் திருமுன்னர்.
தென்னனோடும் - சிறப்புப்பற்றி வேறுபிரித்துக் கூறினார்.
மெய்ம்மை - உண்மை ஒழுக்க நெறி.
உடனே - அரசன் - தேவியார் - மந்திரியார் இவர்களுடனே.
மன்னவனும் பரவி ஏத்த - இராமனது பெரும்பாதகத்தைத் தீர்த்ததுபோல, மன்னவன் தான் செய்த பெரும்பாதகமாகிய அமண் சார்புபற்றிச் செய்த சிவாபராதங்