| களினின்றும் காக்கவேண்டுமென்ற எண்ணத்தால் பரவி ஏத்த என்ற குறிப்புப்பெற ஈண்டு மன்னவன் பரவியதைத் தனி எடுத்து விதந்து கூறினார். |
| திருநெல்வேலி சந்திப்பு நிலையத்தினின்றும் மேற்கே கற்சாலைவழி இக்கோயில் 1 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது; நகரத்தினிடையே இருப்புப்பாதை செல்கின்றது. கோயிலுக்கு அணிமையில் மேல்புறம் திருநெல்வேலி டவுன் நிலையம் 1/2 நாழிகையளவில் உள்ளது. |
| பணிந்து போற்ற - என்பதும் பாடம். |
| 888 |
| I திருவிராமேச்சுரம் |
| திருச்சிற்றம்பலம் பண் - காந்தார பஞ்சமம் - 3-ம் திருமுறை |
| அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை முலைவளர் பாக முயங்கவல் லமுதல் வன்முனி இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம் தலைவளர் கோலநன் மாலையன் றானிருந்த தாட்சியே. | |
| (1) |
| பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம் புகலியுண் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால் அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை யல்லலே | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- இராவணனைச் செற்று இலங்கையை அழித்த பழி போக இராமன் தாபித்து வழிபட்ட கோயில் திருவிராமேச்சுரத்தில் இறைவர் விளங்க ஆட்சி புரிந்து ஞானமு நன்பொருளுமாகி நின்று அருள் புரிகின்றார். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு;- (1) முனி - உமை முலைவளர் பாக முயங்கவல்ல முதல்வனாகியும் முனிவனாவான் என்க. இலைவளர் - செறிந்து நீண்ட இலைகள் நிறைந்த; தாழைகள் விம்மு - தாழை - நெய்தனிலக் கருப்பொருள்; இங்கு மிக்கிருத்தல் குறிப்பு. தலைவளர் - மாலை - "தலைக்குத் தலை மாலை யணிந்ததென்னே"(நம்பி); "தலைமாலை மாலை தலைக்கணிந்து"(அரசு): தலை - வீந்தாரது தலைகள்; வளர்- தமது தலைக்கு அத்தலைகளை மாலையாக என இரட்டுற மொழிந்துகொள்ள வளர் என்றார்; ஆட்சி - ஆட்சி - அரசு - புரியுமிடம்; இராமநாதர் என்ற பெயர்க்குறிப்பு; -(2) தேவி - இராமனது மனைவியாகிய சீதை; தசமாமுகன் - இராவணன்; பொன்றுவித்த பழி - "மிக்க பெரும்பாதகம்"(2785) என்றவிடத் துரைத்தவை பார்க்க; ஏ இயலும் சிலை அண்ணல் - இராமன். ஏ - அம்பு; இங்கு அகத்தியர் தந்த பாசுபதத்தை குறித்தது; சிலை - வில்; -(3) வைதேகி - சீதை; மாயை - மாய மானைக் காட்டி வஞ்சித்துக் கவர்ந்த வஞ்சனை. கான் - தசரதன் ஏவியபடி இராமன் வசித்திருந்த காடு; காரரக்கன் - இராவணன்; ஈனமிலாப் புகழ் அண்ணல் - இராமன். இராமனது நற்குணத்தின் சிறப்புக் கூறியபடி; இராவண வதமானது பழியைத் தரினும் வேறு இழிவற்ற செயலும் புகழுற்றதுமாம் என்ற குறிப்பும் காண்க; ஞானம் - சரியையாதி நன்னெறி நான்கனுள் முத்திக்கேதுவாய் இறுதியில் உள்ளது. "நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடாவாகலான்"(சிவஞானபோதம்); நன்பொருளும் என உம்மை விரிக்க. நன்பொருள் - வீடுபேறு; நன்மை - நலம் தரும் இடம்; -(4) உரை - மேலோர் சொல்; வேதநீதியாகிய உரை என்றலும் ஆம். உரை....வேட்கையான் - இராவணனுடைய; ஆறனுருபு தொக்கது; வேட்கையான் - தோள் என்று கூட்டுக; வில்லி - வில்லையுடையவன்; இராமன். விரை மருவும் - இராமேச்சுரம் என்க. விரையாவது சிவமணம்;-(5) ஊறு - உடைதல்; உடை - உடைய; ஈறுகுறைந்த பெயரெச்சம். பட்ட; |