| சேதுமாதவர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். அவரை வழிபடாதார் இராமலிங்கரது வழிபாட்டின் பயன் பெறார் என்பது சேது புராணம்; இப்பதியில் உள்ள எண்ணிறந்த தீர்த்தங்களின் வரலாறும் பெறுமையும் பற்றிச் சேது புராணம் பார்க்க; இராவண வதத்தின் பொருட்டு இராமன் அணைகட்டி இலங்கையை அடைந்த இடமாதலின் இது சேதுக்கரை என வழங்கப்படும்; சேது - செய்கரை; சேதுவில் இராமனது தனுவின் நுனியாற் கீறித் தீர்த்தங் காணப்பட்டமையால் இது "தனுக்கோடி" என்று வழங்கப்படும்(தனு - வில்); சேது - கடற்கரைத் தீர்த்தம். நகரின் வடபுறம் கந்தமாதன மலை உள்ளது. அதில் இராமனது பாதம் தீட்டப்பட்டு விளங்குகின்றது; "ஆயன் றமர ரழியா வகைசெய்தா, யாயன் றமர ரழியாமை - யாயன், றிருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி, திருத்தினான் சேதுக்கரை" (48) என்ற 11-ம் திருமுறை - பரணர் அருளிய சிவபெருமான் றிருவந்தாதியும் காணத் தக்கது. இராமன் கதை மச்சம் - கூர்மம் முதலிய மகாபுராணங்களினும் பேசப்படும். சுவாமி - இராமநாதர்; அம்மை - மலைவளர் காதலி; பிள்ளையாரது பழம்பஞ்சுரப் பதிகம் - 3 பார்க்க; (பர்வதவர்த்தனி என்பது வடமொழி); தீர்த்தம் - அக்கினிதீர்த்தம் - இராம தீர்த்தம் - இலட்சுமணதீர்த்தம் - தனுக்கோடி முதலியனவாய் எண்ணிறந்தன; பதிகம் 3. |
| இதற்கு இராமேச்சுரம் என்ற இருப்புப்பாதை நிலையம், நகரின் உள்ளே அமைந்துள்ளது. நிலையத்தினின்றும் கடற்கரையில் 1 நாழிகை யளவில் கோயில் உள்ளது. |
2787 | சேதுவின்கட் செங்கண்மால் பூசை செய்த சிவபெருமான் றனைப்பாடிப் பணிந்து போந்து, காதலுட னந்நகரி லினிது மேவிக் கண்ணுதலான் றிருத்தொண்ட ரானார்க் கெல்லாங் கோதில்புகழ்ப் பாண்டிமா தேவி யார்மெய்க் குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல நாதர்தமை நாடோறும் வணங்கி யேத்தி நளிர்வேலைக் கரையினயந் திருந்தா ரன்றே. | |
| 889 |
| (இ-ள்) சேதுவின்கண்...போந்து - சேதுவினிடமாகச், சிவந்த கண்களையுடைய திருமால் பூசித்த சிவபெருமானைப் பாடி வணங்கிப் புறம்போந்து; காதலுடன்...மேவி - விருப்பத்துடனே அத்திருநகரின்கண் இனிதாக அமர்ந்தெழுந்தருளியிருந்து; கண்ணுதலான்...போற்றிச் செல்ல - நுதலிற்கண்ணுடைய சிவபெருமானது திருத்தொண்ட ரானார்களுக்கெல்லாம் குற்றமற்ற புகழினையுடைய பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையாரும் உண்மைநெறி நிற்கும் குலச்சிறை நாயனாரும் குறைவின்றி வேண்டுவன எல்லாம் அளித்துப் பாதுகாத்துத் துதித்துவர; நாதர்தமை.....ஏத்தி - இராமநாதராகிய இறைவரை நாடோறும் வணங்கித் துதித்துக் கொண்டு; நளிர்...அன்றே - குளிர்ந்த கடற்கரை நகரின்கண் விருப்புடன்(பிள்ளையார்) அப்பொழுது எழுந்தருளியிருந்தனர். |
| (வி-ரை) சேது - அணையினை உடைய காரணமாக இராமேச்சுரத்துக்கு வழங்கும் பெயர். சேது - சேதுக்கரை என்றலுமாம். "செங்கண்மால் சிலைபிடித்துச் சேனையோடும் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்கு"(தேவா). |
| காதலுடன்....அந்நகரில் இனிது மேவி, நளிர்வேலைக் கரையின் நயந்திருந்தார் என்றது - மால் பூசித்துப் பழிநீங்கிய பதியாதலால், மன்னவன் பொருட்டு அங்குச் |